என் மலர்
நீங்கள் தேடியது "விமானங்கள் ரத்து"
- பயணிகள் வசதிக்காக, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.
- இந்தியாவின் எந்த நகரத்திற்கும் கூடுதல் கட்டணம் இன்றி, மாற்று விமானங்களில் பயணிக்கலாம்.
இஸ்ரேல்-அமெரிக்கா இணைந்து ஈரான் மீது ராணுவ தாக்குதல்களை நடத்தி வருகிறது.
கடந்த மாதம் 28-ந் தேதி, போர் தொடங்கியதையடுத்து, மேற்கு ஆசியா, ஐக்கிய அரபு வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்பட்டு வரும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதேபோல் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சர்வதேச விமானங்களும், கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இந்த விமானங்கள் ரத்து, வருகிற 13-ந் தேதி (வெள் ளிக்கிழமை) வரை நீடிக்கும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்து உள்ளது.
அதே நேரத்தில் பயணிகள் வசதிக்காக, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.
மேற்கு ஆசிய நாடுகளின் போர் காரணமாக ரத்து செய்யப்பட்ட ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் பயணம் செய்ய, முன் பதிவு செய்திருந்த பயணிகள், எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல், வேறு எந்த தேதிகளுக்கும் பயணத்தை மாற்றிக் கொள்ளலாம். அல்லது பயணத்தை ரத்து செய்து, முழு பணத்தையும் திரும்ப பெறலாம்.
பயணிகள் தங்களின் மாற்று முன்பதிவு, அல்லது பயணம் ரத்து கோரிக்கைகளை, ஏர் இந்தியா நிறுவனத்தின், இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். மேலும் 24 மணி நேர வாடிக்கையாளர் சேவையில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து, ஏர் இந்தியா, எக்ஸ்பிரஸ் விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு, சிறப்பு வசதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் எந்த விமான நிலையத்தில் இருந்தும், இந்தியாவின் எந்த நகரத்திற்கும் கூடுதல் கட்டணம் இன்றி, மாற்று விமானங்களில் பயணிக்கலாம்.
துபாய்-ஜெய்ப்பூர் பயணிகள், துபாயில் இருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரஸ் அல் கைமா விமான நிலையம் சென்று, அங்கிருந்து, டெல்லிக்கு கூடுதல் கட்டணம் இன்றி, விமானத்தில் பயணிக்கலாம். அதே நேரத்தில் மேற்காசியா நாடுகளுக்கு கூடுதல் சிறப்பு விமானங்களை, இயக்குவதற்கான வாய்ப்புகளையும், ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன.
- கோவை-ஷார்ஜா இடையே வாரத்தில் 5 நாட்களும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- ஈரான்-இஸ்ரேல் போர் பதட்டம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளி மூடப்பட்டுள்ளது.
கோவை:
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஐதராபாத், புனே, கோவா ஆகிய உள்நாட்டு பகுதிகளுக்கும், சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக கோவையில் இருந்து அபுதாபிக்கு வாரத்தில் 4 நாட்களும், கோவை-ஷார்ஜா இடையே வாரத்தில் 5 நாட்களும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தற்போது ஈரான்-இஸ்ரேல் போர் பதட்டம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளி மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவையில் இருந்து அபுதாபி மற்றும் ஷார்ஜா இடையேயான விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த 2 விமானங்கள் ரத்து வருகிற 9-ந் தேதி வரை தொடரும் எனவும், இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு ஏர் அரேபியா விமான பயணிகள், 9087778081 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கோவை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
- விமான சேவை ரத்தானதால் வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே வீரர்கள் இந்தியாவிலேயே தங்கி இருக்கிறார்கள்.
- போர் பதட்ட சூழ்நிலையால் இந்த இரு நாட்டு அணி வீரர்களும் நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள்.
20 ஓவர் உலகக் கோப்பையில் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் 8 சுற்றில் தோற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்தன.
மத்திய கிழக்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதட்ட சூழ்நிலையால் இந்த இரு நாட்டு அணி வீரர்களும் நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். விமான சேவை ரத்தானதால் வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே வீரர்கள் இந்தியாவிலேயே தங்கி இருக்கிறார்கள்.
உடனடியாக நாடு திரும்பும் அவசியம் இல்லாவிட்டாலும் பாதுகாப்பான பயணத்துக்கான மாற்று ஏற்பாடு குறித்து ஆய்வு செய்து வருவதாக ஐ.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
- மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலால் பல நாடுகள் தங்கல் வான்வழிப் பாதைகளை மூடின.
- இதனால் வெளிநாட்டுப் பயணிகள் பல்வேறு நாடுகளின் விமானநிலையங்களில் சிக்கியுள்ளனர்.
புதுடெல்லி:
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கடந்த சனிக்கிழமை அன்று கொல்லப்பட்டார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் அரசு மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்களைத் தொடர்ந்து தாக்கி வருகிறது.
இதையடுத்து, மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்குள்ள பல்வேறு நாடுகள் தங்களது வான்வழிப் பாதைகளை மூடியுள்ளன. இதனால் லட்சக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகள் பல்வேறு நாடுகளின் விமான நிலையங்களில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 80 சர்வதேச விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 36 விமானங்களும், வரவேண்டிய 44 விமானங்களும் ரத்தாகின.
மத்திய கிழக்கில் உள்ள எமிரேட்ஸ் உள்ளிட்ட சில விமான நிறுவனங்கள் தங்களது விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்கின. டெல்லியில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானம் மீண்டும் திரும்பி வந்ததாகக் கூறப்படுகிறது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் கடந்த 3 நாளில் இந்திய நிறுவனங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்களை ரத்துசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- நியூஜெர்சி மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
- 13,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து பனிப்புயல் வீசத்தொடங்கியது. இதன் காரணமாக அங்கு ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு "ப்ளிசர்டு" எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பனிப்புயல் தாக்கத்தால், பட இடங்களில் பனி 3 அடி உயரம் வரை குவிந்தது. நியூஜெர்சி மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவு காரணமாக அவசர போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவுடன் தீவிர புயல் வீசுவதால் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நியூ யார்க்கின் முக்கிய விமான நிலையங்களில் 11,000-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன. அமெரிக்கா முழுவதும் 13,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நியூயார்க் நகர பள்ளிகள் முழுவதும் மூடப்பட்டன. மரங்கள் விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால், வடகிழக்கு அமெரிக்காவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாஸ்டன், கனெக்டிகட், மேரிலேண்ட், விர்ஜினியா உள்ளிட்ட மாகாணங்களிலும் பனிப்புயல் வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- விமான நிறுவனங்கள் இன்று பெரும்பாலான விமானங்களை ரத்து செய்துள்ளன.
- ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு மேலும் 4 விமானங்கள் வர திட்டமிடப்பட்டிருந்தன.
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக இன்று ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் மற்றும் புறப்படும் 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக விமான நிலைய அதிகாரி கூறுகையில்,
பாதகமான வானிலை மற்றும் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தொடர்ந்து பனிப்பொழிவு நிலவுவதால், விமான நிறுவனங்கள் இன்று பெரும்பாலான விமானங்களை ரத்து செய்துள்ளன.
பனிப்பொழிவு காரணமாக இதுவரை சுமார் 50 விமானங்கள் - 25 உள்வரும் மற்றும் 25 வெளிச்செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு மேலும் 4 விமானங்கள் வர திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் மோசமான வானிலை காரணமாக அவை இயக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறினார்.
விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், வார இறுதி மற்றும் குடியரசு தின விடுமுறைக்கு காஷ்மீர் வந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.
- பனிப்புயலால் 15 மாகாணங்களில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
- பனிப்புயலால் சுமார் 14 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில் இன்றும், நாளையும் பனிப்புயல் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நாட்டின் தென்மேற்கு மற்றும் மத்திய பகுதிகளைத் தாக்கும் பனிப்புயல், நியூமெக்சிகோவில் இருந்து கிழக்கு கடற்கரை வரை வீசும் என்றும் மத்திய அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு மாகாணங்களை தாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 15 மாகாணங்களில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அமெரிக்கா முழுவதும் பனிப்புயல் தாக்க தொடங்கி உள்ளது. அங்கு பெரிய அளவில் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளைத் தொடர்ந்து பாதித்து வருகிறது.
பல இடங்களில் கடும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மரங்களில் பனி உறைந்ததால் கிளைகள் முறிந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இந்த மின்வெட்டு லூசியானா மற்றும் டெக்சாஸ் மாகாணங்களை கடுமையாக பாதித்துள்ளது.
போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. பனிப்புயலால் சுமார் 14 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். நியூ மெக்சிகோ முதல் நியூ இங்கிலாந்து வரை குளிர்காலப் புயல் எச்சரிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
பனிப்புயல் தாக்குதல் காரணமாக அமெரிக்கா முழுவதும் சுமார் 13 ஆயிரம் விமானங்கள் ரத்து செய் யப்பட்டன. ஓக்லஹோமா நகரில் உள்ள வில் ரோஜர்ஸ் சர்வதேச விமான நிலை யத்தில் அதிகளவில் விமா னங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இந்த பனிப்புயல் அமெரிக்காவை முடக்கி போட்டு உள்ளது. மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- தூத்துக்குடி, திருச்சி, மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் 16 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
- விமானங்கள் ரத்து எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிகிறது.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களை மிரட்டி வரும் 'டிட்வா' புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் 16 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் தூத்துக்குடி, திருச்சி, மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் 16 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும் மதுரை, திருச்சி, புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கான 22 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
புயல் மழை எச்சரிக்கை காரணமாக சென்னை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, புதுச்சேரி ஆகிய நகரங்களில் இன்று மொத்தம் 54 விமானங்கள் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் ரத்து எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிகிறது.
சென்னை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் இருந்து இயக்கப்படும் ஏ.டி.ஆர். எனப்படும் சிறிய ரக விமானங்கள் அனைத்தும் இன்று காலையில் இருந்து இரவு வரையில் இயக்கங்களை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் பயணிகள் அனைவரும் தாங்கள் பயணிக்கும் விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தங்களுடைய விமானங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல், தங்கள் பயணங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும்படி சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
- சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
- ஆந்திரா, புதுச்சேரி, ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதி கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளன.
மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோன்தா புயலானது தீவிர புயலாக வலுப்பெற்றது. மோன்தா புயல் மணிக்கு 17 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து தமிழகத்தைவிட்டு சற்றே விலகி சென்றது.
ஆந்திராவின் மச்சிலிப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 230 கி.மீ., காக்கிநாடாவில் இருந்து 310 கி.மீ. தூரத்தில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது. புயல் காரணமாக காலை 5.30 மணி வரை 8 இடங்களில் கனமழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பதிவாகி உள்ளது.
ஆந்திராவின் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே மாலை அல்லது இரவு மோன்தா புயல் கரையை கடக்க உள்ளது.
மோன்தா புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
புயல் கரையை நோக்கி நகர்ந்து வரும்போது மழையின் தீவிரம் அதிகம் இருக்கும். இதனால் ஆந்திரா, புதுச்சேரி, ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதி கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்நிலையில் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் இருந்து விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரா உள்ளிட்ட 12 இடங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விமான போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- பல்வேறு நாடுகளுக்கு செல்லும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்படுவர் என தெரிவித்தது.
பாரீஸ்:
பிரான்சில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விமான போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விமான சேவைகளை 40 சதவீதம் அளவுக்கு குறைக்கும்படி பிரான்ஸ் விமான போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனமான ரியான் ஏர் 170 விமானங்களை ரத்துசெய்வதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரியான் ஏர் விமான போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதனால் இங்கிலாந்து, கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்குச் செல்லும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.
- விமானங்கள் திடீர் ரத்துக்கான காரணம் குறித்து இதுவரையில் விமான நிறுவனங்கள் அறிவிக்கவில்லை.
- விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, கொச்சி, புனே, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்ல இருந்த 10 ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விமானங்கள் திடீர் ரத்துக்கான காரணம் குறித்து இதுவரையில் விமான நிறுவனங்கள் அறிவிக்கவில்லை.
ஆனால், நிர்வாக காரணங்களால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
- நேற்று 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
- முன்பதிவு செய்தவா்களுக்கு கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஆபரேஷன் சிந்தூா்' நடவடிக்கைக்கு பிறகான வான்வெளி கட்டுப்பாடுகளால், ஸ்ரீநகா் உள்பட 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் நேற்று 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஸ்ரீநகா், ஜம்மு, லே, அமிர்தசரஸ், பதான்கோட், சண்டிகா், ஜோத்பூா், ஜெய்சால்மா், சிம்லா, தா்மசாலா, ஜாம்நகா், கிஷண்கா், ராஜ்கோட், பிகானீா், குவாலியா் உள்பட வட இந்தியா மற்றும் மேற்கு இந்திய பகுதிகளில் உள்ள 27 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இந்த விமான நிலையங்களில் இருந்து புறப்படும், வந்தடையும் 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஏா்இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஏா் போன்ற விமான நிறுவனங்கள், மேற்கண்ட நகரங்களுக்கான விமான சேவையை 10-ந் தேதி வரை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. ஏற்கெனவே முன்பதிவு செய்தவா்களுக்கு கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று 2-வது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டது. இன்று 400 விமான சேவை முடங்கியது.
நாளை மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 5.29 மணி வரை 27 விமான நிலையங்கள் மூடப்பட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 850 விமான சேவைகள் முடங்கும் நிலை உள்ளது.






