என் மலர்
நீங்கள் தேடியது "flight cancelled"
- பனிப்புயலால் 15 மாகாணங்களில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
- பனிப்புயலால் சுமார் 14 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில் இன்றும், நாளையும் பனிப்புயல் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நாட்டின் தென்மேற்கு மற்றும் மத்திய பகுதிகளைத் தாக்கும் பனிப்புயல், நியூமெக்சிகோவில் இருந்து கிழக்கு கடற்கரை வரை வீசும் என்றும் மத்திய அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு மாகாணங்களை தாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 15 மாகாணங்களில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அமெரிக்கா முழுவதும் பனிப்புயல் தாக்க தொடங்கி உள்ளது. அங்கு பெரிய அளவில் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளைத் தொடர்ந்து பாதித்து வருகிறது.
பல இடங்களில் கடும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மரங்களில் பனி உறைந்ததால் கிளைகள் முறிந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இந்த மின்வெட்டு லூசியானா மற்றும் டெக்சாஸ் மாகாணங்களை கடுமையாக பாதித்துள்ளது.
போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. பனிப்புயலால் சுமார் 14 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். நியூ மெக்சிகோ முதல் நியூ இங்கிலாந்து வரை குளிர்காலப் புயல் எச்சரிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
பனிப்புயல் தாக்குதல் காரணமாக அமெரிக்கா முழுவதும் சுமார் 13 ஆயிரம் விமானங்கள் ரத்து செய் யப்பட்டன. ஓக்லஹோமா நகரில் உள்ள வில் ரோஜர்ஸ் சர்வதேச விமான நிலை யத்தில் அதிகளவில் விமா னங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இந்த பனிப்புயல் அமெரிக்காவை முடக்கி போட்டு உள்ளது. மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- மேற்கு வடமேற்கு திசையில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் நிலவிய மாண்டஸ் தீவிர புயல், வலுவிழந்து புயலாக மாறியுள்ளது. இந்நிலையில், மேற்கு வடமேற்கு திசையில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன் எதிரொலியால், சென்னை விமானநிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மைசூர், கோழிக்கோடு, விஜயவாடா, பெங்களூரு, திருச்சி, மதுரை, ஹைதராபாத், ஹூப்ளி, கண்ணூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- விமானத்தில் பயணம்செய்ய மிகவும் குறைவான பயணிகளே முன்பதிவு செய்து இருந்தனர்.
- செல்ல முன்பதிவு செய்து இருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது
ஆலந்தூர்:
இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் இருந்து இன்று அதிகாலை 2:10 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வரவேண்டும். இதேபோல் அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 3:10 மணிக்கு மீண்டும் இலங்கை புறப்பட்டு செல்லும்.
இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்ய போதுமான பயணிகள் இல்லாததால் இந்த 2 விமானங்களின் சேவையும் இன்று ரத்து செய்யப்பட்டன.
இந்த விமானத்தில் பயணம்செய்ய மிகவும் குறைவான பயணிகளே முன்பதிவு செய்து இருந்தனர். இதைத்தொடர்ந்து அந்த பயணிகள் வேறு விமானங்களில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு டிக்கெட்டுகள் மாற்றிக் கொடுக்கப்பட்டன.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, போதிய பயணிகள் இல்லாததால் 2 இலங்கை விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அதில் செல்ல முன்பதிவு செய்து இருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது என்றனர்.






