என் மலர்
பிரான்ஸ்
- இந்த கௌரவத்தைப் பெற்ற ஒரே இந்திய வம்சாவளி பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
- ரகசிய தகவல் தொடர்பு வலையமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். அவர் நாஜிகளால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
திப்பு சுல்தானின் வழித்தோன்றலும், இரண்டாம் உலகப் போரின் போது நாஜிக்களுக்கு எதிரான ரகசிய உளவாளியாக இருந்த நூர் இனாயத் கான்-ஐ பிரான்ஸ் அரசு கௌரவித்துள்ளது.
பிரான்ஸ் அரசு தபால் சேவையான லா போஸ்ட், நூர் உருவம் கொண்ட சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்த கௌரவத்தைப் பெற்ற ஒரே இந்திய வம்சாவளி பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், நாஜி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்காற்றிய 12 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை நினைவுகூரும் வகையில் தொடர்ச்சியான தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் தற்போது நூர் இடம்பெற்றுள்ளார்.
நூர், பிரான்சில் பிரிட்டிஷ் ராணுவ சிறப்பு நடவடிக்கை பிரிவின் ரகசிய உளவாளியாக பணியாற்றினார். ரகசிய தகவல் தொடர்பு வலையமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். பின்னர் அவர் நாஜிகளால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
நூரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய 'ஸ்பை பிரின்சஸ்: தி லைஃப் ஆஃப் நூர் இனாயத் கானின்' ஆசிரியர் ஷ்ரபானி பாசு பேசுகையில், பிரான்ஸ் அரசாங்கம் நூர் இனாயத் கானின் தபால் தலையை வெளியிட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகப் போராடி தனது உயிரைத் தியாகம் செய்த ஒரு பெண்ணின் முகம் பிரான்சில் சாதாரண மக்கள் பயன்படுத்தும் தபால் தலையில் தோன்றுவது அற்புதம்" என்று கூறினார்.
- சமீபத்தில் பிரான்சில் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.
- இறுதியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.
பாரிஸ்:
பிரான்சின் நான்டெரெ நகரில் சமீபத்தில் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், கனடா வீரர் ஃபெலிக்ஸ் அகர் அலியஸிமேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்நிலையில், ஏடிபி டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் ஜானிக் சின்னர் 11,500 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
11,250 புள்ளிகளுடன் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 5,560 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும், அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ் 4,735 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும், செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் 4,580 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும் உள்ளனர்.
- பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
- இதன் அரையிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் வெற்றி பெற்றார்.
பாரிஸ்:
பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-0, 6-1 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் 7-6 (7-3) 6-4 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
- இதன் காலிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் வெற்றி பெற்றார்.
பாரிஸ்:
பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் பென் ஷெல்டன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் 6-7 (5-7), 6-4, 7-5 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் டி மினாரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
- இதன் காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.
பாரிஸ்:
பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் முதல் செட்டை 6-3 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட ஸ்வரேவ் அடுத்த இரு செட்களை 6-3, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த தோல்வியின் மூலம் மெத்வதேவ் தொடரில் இருந்து வெளியேறினார்.
- பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
- இதன் 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
பாரிஸ்:
பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், இத்தாலியின் லாரென்சோ சொனேகா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சொனேகா முதல் செட்டை 6-3 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட மெத்வதேவ் அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ செரண்டலோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
- பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
- இதன் முதல் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
பாரிஸ்:
பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஸ்பெயினின் ஜேம் முனார் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
- பிரான்ஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி செசோன் செவிங்க் நகரில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
பாரிஸ்:
பிரான்ஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள செசோன் செவிங்க் நகரில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, இந்தோனேசியாவின் ரஹமத் ஹிதயத்-முகமது ரியான் அர்டியாண்டோ ஜோடி உடன் மோதியது.
இதில் அதிரடியாக ஆடிய இந்தோனேசிய ஜோடி 21-18, 22-20 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி முதல் சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
- 2007 தேர்தலின்போது தேர்தல் பிரசாரத்திற்கு நிதி அளிக்க சதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
- கடந்த மாதம் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சிறையில் அடைக்கப்பட்டார்.
பிரான்ஸ் நாட்டில் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, லிபியாவில் இருந்து வந்த நிதியை தேர்தல் பிரசாரத்திற்கு நிதி அளிக்க சதி செய்ததாக முன்னாள் அதிபரான நிக்கோலஸ் சர்கோசி மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டில் சர்கோசிக்கு கடந்த மாதம் தண்டனை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாரீஸில் உள்ள சிறைக்கு இன்று வந்தடைந்தார். அவர் தனது மனைவி, மகன், மகள், பேரண்களுடன் வந்தார். பின்னர், அவர் சிறைக்கு சென்றார். இன்று முதல் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க இருக்கிறார்.
சிறைக்கு செல்லும் முன்பு, சமூக வலைத்தளத்தில் "நான் ஒரு அப்பாவி மனிதன். சிறையில் அடைக்கப்படுகிறேன்" எனத் தெரிவித்தார்.
சிறை வாசலில் அவரது ஏராளமான ஆதரவாளர்கள் கூடியிருந்தனர். அவர்கள் நிக்கோலஸ், நிக்கோலஸ் என குரல் எழுப்பியதுடன், பிரான்ஸ் தேசியக் கீதத்தையும் பாடினார்.
இவருக்கு அளித்த தீர்ப்பின்படி, சிறைக்கு சென்ற பின்னரே மேல்முறையீடு செய்ய முடியும். மேல்முறையீடு மனுவை நீதிபதிகள் இரண்டு மாதங்களை வரை பரிசீலனை செய்யலாம். இதனால் சர்கோசி இரண்டு மாதங்கள் சிறையில் இருக்க வாய்ப்புள்ளது.
விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என சர்கோசி வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
- நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் பார்வையாளர்கள் வரும் மிகப்பெரிய அருட்காட்சியகமாகும்.
- நெப்போலியன் மன்னன் நகைகளில் சிலவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமான லூவ்ரே அருங்காட்சியகம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ளது. இது சுமார் 6,52,300 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த அருட்காட்சியகத்தில் வரலாற்று சிறப்புமிக்க பொருட்கள், ஓவியங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள அரிய பொக்கிசங்களை திருடர்கள் திருடிச் செல்லும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில் இன்று நெப்போலியன் மன்னன் பயன்படுத்தி நகைகளை இங்கிருந்து கொள்ளையர்கள் அபேஸ் செய்துள்ளனர்.
ஹைட்ராலிக் ஏணியை பயன்படுத்தி கொள்ளையர்கள் அறைக்குள் நுழைந்து கொள்ளை அடித்துள்ளனர். இது மிகப்பெரிய கொள்கை என பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸ் தெரிவித்துள்ளார்.
நெப்போலியன் மற்றும் பேரரசின் நகை கலெக்ஷனில் இருந்து 9 நகைகளை திருடிச் சென்றுள்ளனர். அருட்காட்சியகம் இது தொடர்பாக உடனடி கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இந்த திருட்டைத் தொடர்ந்து அருட்காட்சியகம் மூடப்பட்டது.
இந்த அருட்காட்சியகத்திற்கு நாள் ஒன்றுக்கு சுமார் 30 ஆயிரம் பேர் வந்து செல்கிறார்கள். இது பழங்காலப் பொருட்கள், சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் உட்பட 33,000 க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களைக் கொண்டுள்ளது.
இங்குள்ள மோனலிசா படம் கடந்த 1911ஆம் ஆண்டு திருடப்பட்டது. பின்னர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பிளவுப்பட்ட பாராளுமன்றத்தில் ஒப்புதலை பெற கடினமான பணியை செபஸ்டியன் லெகோர்னு எதிர்கொண்டார்.
- பிரெஞ்சு நாடாளுமன்றம் பிளவுபட்டு பெரும்பான்மை இல்லாமல் போனது.
பிரான்சில் நிச்சயமற்ற அரசியல் சூழல் நிலவி வருகிறது. பிரான்ஸ் நாட்டின் பிரதமராக செபஸ்டியன் லெகோர்னு கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான அவரை, அதிபர் இமானுவேல் மேக்ரான் பிரதமராக நியமித்தார்.
இதற்கிடையே கடந்த அக்டோபர் 5 அமைச்சரவை மாற்றம் அறிவிக்கப்பட்டது. அமைச்சரவையில் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
சிக்கன பட்ஜெட்டை அடுத்த வருடம் தாக்கல் செய்வதற்கு பிளவுப்பட்ட பாராளுமன்றத்தில் ஒப்புதலை பெற கடினமான பணியை செபஸ்டியன் லெகோர்னு எதிர்கொண்டார். இதனால் பிரதமராக செயல்பட்ட பதவியை ராஜினாமா செய்வதாக அக்டோபர் 6 ஆம் தேதி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரான்சின் பிரதமராக செபாஸ்டியன் லு கார்னௌயில் இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜினாமா செய்த நான்கு நாட்களுக்குப் பிறகு லு கார்னௌயில் மீண்டும் பிரதமர் பதவிக்கு வருகிறார் . கடந்த சில நாட்களாக மேக்ரோன் நடத்திய தீவிர பேச்சுவார்த்தைக்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள லு கார்னோ , அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டின் பொருளாதார நிலைமையை மீட்டெடுப்பதற்கு முன்னுரிமை அளிப்பது தனது கடமையாகக் கருதுவதாகக் கூறியுள்ளார்.
ஜூன் 2024 இல் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நாடாளுமன்றத்தைக் கலைத்ததிலிருந்து பிரான்ஸ் ஒரு அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் பிரெஞ்சு நாடாளுமன்றம் பிளவுபட்டு பெரும்பான்மை இல்லாமல் போனது.
அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லாததால் பிரான்சின் வளர்ந்து வரும் கடனை நிவர்த்தி செய்வதற்கான முக்கியமான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தால் நிறைவேற்ற முடியவில்லை.
இதற்கிடையில், முன்மொழியப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் நாடு தழுவிய போராட்டங்களைத் தூண்டிவிட்டுள்ளன.
அதேவேளை, லு கார்னோவில்லின் மறு நியமனம், 2027 வரை நீடிக்கும் தனது அதிபர் பதவியை இழப்பதைத் தவிர்ப்பதற்கான மேக்ரோனின் கடைசி முயற்சியாகக் கருதப்படுகிறது.
- கடந்த மாதம்தான் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
- நேற்று மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டு, விமர்சனத்திற்குள்ளானது.
பிரான்ஸ் நாட்டின் பிரதமராக செபஸ்டியன் லெகோர்னு கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான அவரை, அதிபர் இமானுவேல் மேக்ரான் பிரதமராக நியமித்தார்.
இந்த நிலையில்தான், அமைச்சரவை நேற்று அறிவிக்கப்பட்டது. அமைச்சரவையில் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது அரசியலில் விமர்சனத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. மேலும், சிக்கன பட்ஜெட்டை அடுத்த வருடம் தாக்கல் செய்வதற்கு பிளவுப்பட்ட பாராளுமன்றத்தில் ஒப்புதலை பெற கடினமான பணியை செபஸ்டியன் லெகோர்னு எதிர்கொண்டார். இந்த நிலையில்தான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிரான்சின் பொதுக்கடன் தொடர்ந்து உயர்ந்து கொண்டே உள்ளது. ஜடிபியில் கடன் விகிதம் கிரீஸ், இத்தாலிக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றத்தில் பிரான்சில்தான் மோசமான நிலையை எட்டியுள்ளது.
முந்தைய அரசாங்கங்கள் கடந்த மூன்று ஆண்டு பட்ஜெட்டுகளை வாக்கெடுப்பு இல்லாமல் நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாக நிறைவேற்றின. இது அரசியலமைப்பால் அனுமதிக்கப்பட்ட ஒரு முறையாகும். இருந்த போதிலும், எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
செபஸ்டியன் லெகோர்னு, பட்ஜெட் மசோதா தாக்கல் செய்யப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்தப்படும் என உறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






