search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Christmas celebration"

    • இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை போற்றும் விதமாக கிறிஸ்துமஸ் தினவிழா கொண்டாடடப்பட்டது.
    • கிறிஸ்துமஸ் பாடல், நாடகம், உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே இச்சிப்பட்டியில் அமைந்துள்ள யங் இண்டியா பப்ளிக் பள்ளியில் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை போற்றும் விதமாக கிறிஸ்துமஸ் தினவிழா கொண்டாடடப்பட்டது. இதனையொட்டி பாரம்பரிய முறைப்படி கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டது.

    கிறிஸ்துமஸ் பாடல்,நாடகம்,உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு யங் இண்டியா பப்ளிக் பள்ளியின் செயலா் டாக்டர் டி.சிவசண்முகம், மற்றும் மனோன்மணி சிவசண்முகம் ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளியின் முதல்வர் கே.அண்ணாமலை ,துணைமுதல்வர்கள் சசிகலா,நிஜிலாபானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இதற்கான ஏற்பாடுகளை தயார் செய்து விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

    • துணை செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் பள்ளியின் முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.
    • திருப்பூர் பிரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் பிரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மழலைச் செல்வங்கள் தங்களது இனிமையானக் குரலில் பாடல் பாடியும், நடனம் மற்றும் நாடகம் வாயிலாக இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை நம் கண் முன்னே கொண்டு வந்தனர். மேலும் கிறிஸ்துமஸ் ஏன் கொண்டாடுகிறோம் என்பது பற்றியும் இயற்கை, உயிரினங்கள் மற்றும் மனிதர்களை இறைவன் எவ்வாறு உருவாக்கினார் என்பது பற்றியும் தத்ரூபமாக நடித்துக் காண்பித்து அனைவரது பாராட்டையும் பெற்றனர். விழாவில் கலந்துகொண்ட அனைத்து மழலைச் செல்வங்களையும் பள்ளியின் தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவகாமி, இயக்குனர் சக்திநந்தன், துணை செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் பள்ளியின் முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.

    • தவளக்குப்பம், நேஷனல் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா, கொண்டாடப்பட்டது.
    • சிறப்பு விருந்தினராக மரிய அந்தோணி ராஜ், ஜார்ஜ் பெர்னாண்டோ, ஸ்டெல்லா மேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம், நேஷனல் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா, கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு பள்ளியின் மேலாண் இயக்குனர் கிரண்குமார் தலைமை தாங்கி கிறிஸ்துமஸ் குறித்து சிறப்புரையாற்றினார். பள்ளியின் தாளாளர் எழிலரசி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக மரிய அந்தோணி ராஜ், ஜார்ஜ் பெர்னாண்டோ, ஸ்டெல்லா மேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, பள்ளியில், கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டு இருந்தது. ஆசிரியைகள் ரோமினா, அருணா கிறிஸ்து பாடல்களைப் பாடி மாணவர்களை மகிழ்வித்தனர். இதில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. முடிவில் தலைமை ஆசிரியர் உமா நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.

    • கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது
    • ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் இணைந்து சிறப்பு பாடல்களை பாடினர்.

    ஊட்டி,

    நீலகிரி கேத்தியிலுள்ள சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. கோவை மண்டல பேராயர் திமோத்தி ரவீந்தர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கல்லூரி முதல்வா் அருமைராஜ், கல்லூரி தாளாளா் டேனியல் காட்வின், செயலா் பிரின்ஸ் கால்வின், பொருளாளா் அமிா்தம், நீலகிரி வட்டகை தலைவர் ஜேம்ஸ்கிமெண்ட், நீலகிரி வட்டகை நிர்வாக உறுப்பினர் அருள் பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இவ்விழாவில் கேத்தி பேருராட்சி செயல் அலுவலர் நட்ராஜ், பேருராட்சி தலைவர் ஹேமாமாலினி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் இணைந்து சிறப்பு பாடல்களை பாடினர்.

    • கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகள் முன்பு கிறிஸ்துமஸ் நட்சத்திரங்களை தொங்கவிடுவது வழக்கம்.
    • 100 கிலோ எடையிலான தங்க முலாம் பூசப்பட்ட பிரமாண்ட கேக் ஒன்று பாளையில் உள்ள தனியார் ஓட்டலில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது

    நெல்லை:

    கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந் தேதி கொண்டாப்படுகிறது. இதனை முன்னிட்டு கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகள் முன்பு கிறிஸ்துமஸ் நட்சத்தி ரங்களை தொங்கவிடுவது வழக்கம்.

    வீடுகள் மட்டுமின்றி தேவாலயங்கள், கடைகளிலும் ஸ்டார்கள் கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு வரை வண்ண விளக்குகளால் ஜொலிக்கும்.

    கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகள், கிறிஸ்துமஸ் குடில்கள், கிறிஸ்துமஸ் மரங்களையும் விதவிதமான வண்ணங்களில் வீடுகளில் வைப்பது வழக்கம்.

    ஒவ்வொரு தேவாலயங்களில் இருந்தும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர்கள் பாதிரியார் தலைமையில் பங்கு மக்கள் வீடுகளுக்கு ஊர்வலமாக சென்று பரிசுபொருட் களையும், வாக்குத்தத்தம் அட்டைகளையும் வழங்கி சிறப்பு பிரார்த்தனை செய்வார்கள்.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் உள்ளிட்ட அலங்கார பொருட்களின் விற்பனை நெல்லையில் சூடுபிடித்துள்ளது.

    நெல்லை, பாளை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடைகளில் கிறிஸ்துமஸ் நட்சத்திரங்கள் மற்றும் விளக்குகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. காகிதத்தால் ஆன நட்சத்தி ரங்கள், பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட நட்சத்தி ரங்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    விதவிதமான நட்சத்திரங்கள், டிராகன், லோட்டஸ், சொரூபம், கிரேப்ஸ் பந்து உள்ளிட்ட வடிவங்களில் உள்ள பல்வேறு நட்சத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை கிறிஸ்த வர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    இதேபோல் கிறிஸ்துமஸ் மரங்களும், பொம்மைகளும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே உலக சாதனை முயற்சியாக 100 கிலோ எடையிலான தங்க முலாம் பூசப்பட்ட பிரமாண்ட கேக் ஒன்று பாளையில் உள்ள தனியார் ஓட்டலில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த கேக்கில் 400 மில்லி கிராம் தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது. இதேபோல் 5 கிலோ எடையிலான சாக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 250 மில்லி கிராம் தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது.

    மேலும் 4 அடியில் பிரமாண்ட தோசை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 100 மில்லி கிராம் தங்கம் சேர்க்க ப்பட்டுள்ளது. இவற்றை தயாரிப்பதற்காக 100 கிலோ கேக்கிற்கு ரூ.2 லட்சத்து 60 ஆயிரமும், 5 கிலோ சாக்லேட்டிற்கு ரூ.1 லட்சமும், தோசைக்கு ரூ.22ஆயிரத்து 230ம் செலவிடப்பட்டுள்ளது.

    இந்த தோசை பாளையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டது.100 கிலோ கேக், 5 கிலோ சாக்லேட் கிறிஸ்துமஸ் பண்டிகை வரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இளந்தளிர் தொண்டு நிறுவனத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது.
    • 25-வது வெள்ளிவிழா ஆண்டு

    திருச்சி :

    திருச்சி இளந்தளிர் தொண்டு நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளாக ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து அவர்களின் வாழ்க்கை வளம் பெற பல்வேறு நிலைகளில் சேவை புரிந்து வருகிறது. இளந்தளிர் அறக்கட்டளை வெள்ளிவிழா ஆண்டின் சிறப்பம்சமாக கிறிஸ்துமஸ் விழா திருச்சி மொராய்ஸ் சிட்டி உள் அரங்கத்தில் நடைபெற்றது.

    சென்னை உயர்நீதி மன்ற ஓய்வு நீதிபதியும், தற்போதைய நான்காவது போலீஸ் கமிஷனின் தலைவருமான சி.டி.செல்வம், திருச்சி மறை மாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ், திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி ஆகியோரின் தலைமை தாங்கினர்.

    எச்சல் குரூப் நிறுவனங்களின் தலைவர் முருகானந்தம், கிரடாய் அமைப்பின் தலைவர் ஆனந்த், ஹக்கீம் பிரியாணி உரிமையாளர் ஹக்கீம், ஜோஸ் ஆலுகாஸ் மேலாளர் லாசன் சான்டி, ஸ்ரீதைலா சில்க்ஸ் உரிமையாளர் கணபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

    புனித ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி தாளாளர் டி.யூஜின் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் 600-க்கும் மேற்பட்ட இளந்தளிர் குழந்தைகளும், தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர். நன்கொடையாளர்கள் குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ் புத்தாடை வழங்கினர். அனைவருக்கும் ஹக்கீம் பிரியாணி உரிமையாளரால் உணவு வழங்கப்பட்டது.

    விழாவில் சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில், மாணவர்களின் கல்விக்கு உதவுகின்ற இளந்தளிர் தொண்டு நிறுவனத்தை வாழ்த்தினர். மேலும் இதுபோன்ற தொண்டு நிறுவனங்கள் தங்கள் சமுதாயப் பணியை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல மொராய்ஸ் சிட்டி, ஜோஸ் ஆலுக்காஸ், ஸ்ரீ தைலா சில்க்ஸ், ஹக்கீம் பிரியாணி போன்ற வணிக அமைப்புகள் உதவ முன்வந்தது போல பொதுமக்களும், ஏனைய அமைப்புகளும் இதுபோன்ற தொண்டு நிறுவனங்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

    முன்னதாக இளந்தளிர் தொண்டு நிறுவன இயக்குனர் ஏ.சூசை அலங்காரம் வரவேற்றார். திருச்சி கலை காவிரி நுண்க்கலை கல்லூரியின் சார்பில் அன்பின் அலைகள் என்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது. 

    • எப்.எக்ஸ். சி.பி.எஸ்.இ பள்ளி சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
    • கிறிஸ்துமஸ் விழா அனைத்து மதத்தினரும் கொண்டாடும் பொதுவான விழா

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டை எப்.எக்ஸ் பொறியியல் கல்லூரி, எப்.எக்ஸ். சி.பி.எஸ்.இ பள்ளி சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. ஸ்காட் குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கினார். துணை தலைவர் அமலி கிளிட்டஸ் பாபு முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக நெல்லை துதியின் கோட்டை தலைமை போதகர் ரத்னம் பால் கலந்துகொண்டு கிறிஸ்து மஸ் உரையாற்றினார். இணை போதகர் நிக்ஸன் பால் வெஸ்லி சிறப்புரை ஆற்றினார்.

    தொடர்ந்து ஸ்காட் குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு ஏழை, எளிய, மற்றும் ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி மக்களுக்கு உதவிகளையும், பரிசுகளையும் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கிறிஸ்துமஸ் விழா அனைத்து மதத்தினரும் கொண்டாடும் பொதுவான விழா. கடவுள் மனிதராக அவதரித்து அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மைகளை செய்தவர். மக்களை இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததை நினைவு கூறும் வகையில் ஒவ்வாரு வீட்டிலும் நட்சத்திரம் தொங்கவிடப்படுகிறது.

    தன்னுயிரை கொடுத்து மக்களை காப்பாற்றியவர். எல்லோருக்கும் அவரது ஆசீர்வாதம் கிடைக்கும். அனைவருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், கிறிஸ்து மஸ் தாத்தா வேடம் அணிந்து வந்த மாணவர்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றன. மேலும் கல்லூரி வளாகத்தில் அனைத்து துறை மாணவர்களும் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைத்திருந்தனர்.

    கல்லூரி நிர்வாக இயக்குநர் அருண்பாபு, ஸ்காட் குழும நிறுவனங்க ளின் தாளாளர் பிரிய தர்ஷினி அருண்பாபு, பொதுமேலாளர்கள் ஜெயக் குமார், கிருஷ்ணகுமார், காந்தி இயக்குநர் ஜான் கென்னடி, கணினித்துறை இயக்குநர் முகமது சாதிக், கல்லூரி முதல்வர் வேல்முருகன், பள்ளி முதல்வர் பத்மினி வள்ளி மற்றும் பேராசிரியர்கள்கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வளாக மேலாளர் பேரா சிரியர் சகாரியா கேப்ரியல் செய்திருந்தார்.

    ×