என் மலர்
நீங்கள் தேடியது "dead"
- அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் பலி.
- 13 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் - பிள்ளையார்பட்டி சாலையில் அரசுப் பேருந்துகள் இரண்டு, நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரணமாகக் குணமடையும் வகையில், தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி, உயர்தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- திண்டுக்கல் சென்ற பேருந்தும் காரைக்குடி நோக்கி சென்ற பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது.
- காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் சென்ற பேருந்தும் காரைக்குடி நோக்கி சென்ற பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பலர் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், பலி எண்ணிக்கை உயரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் ௯ பேர் பெண்கள் என தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழு, காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக 8 ஆம்புலன்ஸ்கள் வரழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
- விருந்தில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சி அடைந்து தலைதெறிக்க ஓடினர்.
- துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் ஸ்டாக்டனில் உள்ள விருந்து மண்டபத்தில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அப்போது அங்கு துப்பாக்கி சூடு நடந்தது. இதனால் விருந்தில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சி அடைந்து தலைதெறிக்க ஓடினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியானார்கள். 10 பேர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கி சூடு நடத்தியவர் யார்? என்ன காரணம்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சாஹிப் என்பவனை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
- தற்கொலை படை தாக்குதலை உமர் நபி மேற்கொள்வதற்கு ஒரு நாள் முன்பு வரை கைது செய்யப்பட்ட நபரின் வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ந்தேதி அன்று நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரணை மேற்கொண்டு வருகிறது. கார் குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 6 பேரை கைது செய்துள்ள என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று மேலும் ஒருவனை கைது செய்தனர்.
தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட உமர் நபிக்கு தங்குவதற்கு இடம் கொடுத்ததாக அரியானா மாநிலம் ஃபரிதாபத்தை சேர்ந்த சாஹிப் என்பவனை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தற்கொலை படை தாக்குதலை உமர் நபி மேற்கொள்வதற்கு ஒரு நாள் முன்பு வரை கைது செய்யப்பட்ட நபரின் வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்ததை தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை கைதானவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
- அவசர, அவசரமாக ஆட்டுக்கறி துண்டை எடுத்து சாப்பிட்டார்.
- லட்சுமணய்யா மூச்சு விட முடியாமல் சரிந்து கீழே விழுந்தார்.
தெவங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டம். போண்டலபள்ளியை சேர்ந்த ஒருவர், ஒரு புதிய வீட்டை கட்டி வருகிறார்.
இதற்காக நேற்று தளம் அமைக்கும் பணி நடந்தது.தொழிலாளர்கள் சிமெண்டு கலவை கொண்டு தளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தளம் அமைக்கும் பணிகள் முடிந்த பிறகு தொழிலாளர்களுக்கு ஆட்டு கறி குழம்பு பரிமாறப்பட்டது.அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் லட்சுமணய்யா (வயது 65) என்பவரை சாப்பிட அழைத்தனர்.
அப்போது லட்சுமணய்யா மது போதையில் இருந்தார். அவசர, அவசரமாக ஆட்டுக்கறி துண்டை எடுத்து சாப்பிட்டார். அது அவரது தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது.
இதனால் லட்சுமணய்யா மூச்சு விட முடியாமல் சரிந்து கீழே விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் லட்சுமணய்யா மூச்சுக் குழாயில் ஆட்டுக்கறி துண்டு சிக்கி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரேஸை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
சென்னை:
ராயப்பேட்டை பீட்டர்ஸ் பாலத்தில் நள்ளிரவில் பைக் ரேஸின்போது ஏற்பட்ட விபத்தில், ரேஸில் ஈடுபட்ட சுஹைல், எதிரே ஹெல்மெட் அணிந்து வந்த குமரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பைக் ரேஸில் ஈடுபட்ட வாலிபர் சுஹைலின் நண்பர் சோயல் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரேஸை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும், நள்ளிரவில் ரேஸில் ஈடுபடும் சம்பவங்கள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.
- விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
- இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
ஐதராபாத்-பிஜாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவெல்லாவில் உள்ள மிரியால குடா கிராமத்திற்கு அருகே அரசு பேருந்து மீது ஜல்லி ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்தில் அரசு பேருந்தின் முன் பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. மேலும் விபத்தின் போது பேருந்தில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அச்சப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ள நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
- விபத்தில் படுகாயமடைந்த பிரபாகரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- கார் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை செட்டிப்பாளையம் அடுத்த சிறுவாணி சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்றபோது விபத்து நேரிட்டதாகவும், விபத்தில் நண்பர்களான பிரகாஷ், ஹரிஷ், சபரி, அகத்தியன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களில் இருவர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மதுபோதையில் அதிவேகமாக வந்ததால் விபத்து ஏற்பட்டதாகவும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விபத்தில் படுகாயமடைந்த பிரபாகரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
4 பேர் உயிரிழந்த கார் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் சென்று கொண்டிருந்த கார் டேங்கர் லாரி மீது மோதியது.
- விபத்து காரணமாக சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உளுந்தூர்பேட்டை:
சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகன் சந்தோஷ் (வயது28). இவரது உறவினர் பாக்கியலட்சுமி(55). இவர் கடலூர் பாதிரிக்குப்பத்தில் வசித்து வந்தார். இவரை அழைத்து செல்வதற்காக சந்தோஷ் காரில் கடலூர் வந்தார். பின்னர் பாக்கியலட்சுமியை அழைத்து கொண்டு சேலம் புறப்பட்டார்.
காரில் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சூர்யா (24) என்பவரும் பயணம் செய்தார். காரை சந்தோஷ் ஓட்டி சென்றார். இந்த கார் இன்று காலை 8 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்துக்குட்பட்ட செம்பியன்மாதேவி கன்னிமார் கோவில் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக 35 டன் தார் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி சென்றது. இந்த லாரி டிரைவர் இன்டிகேட்டர் போடாமல் திடீரென வலது புறமாக செல்ல முயன்றபோது டிரைவர் திடீரென பிரேக் போட்டார். அப்போது சேலம் சென்று கொண்டிருந்த கார் டேங்கர் லாரி மீது மோதியது. இதில் காரை ஓட்டி சென்ற சந்தோஷ், பாக்கியலட்சுமி, சூர்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திய லாரியை ஓட்டி சென்றவர் தஞ்சை மாவட்டம், மாரனேரி கோவில் தெருவை சேர்ந்த துரைராஜ் என்பது தெரியவந்தது. அவர் விபத்து நடந்ததும் லாரியை அங்கே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளளது.
- பட்டாசுகள் வெடித்ததில் யாசின், சுனில் உள்ளிட்ட 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
- விபத்தில் வீடு முழுவதும் சேதமான நிலையில், தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் பகுதியில் விற்பனை செய்வதற்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்து 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்ததில் யாசின், சுனில் உள்ளிட்ட 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
விபத்தில் வீடு முழுவதும் சேதமான நிலையில், தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 20 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
- நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் சமீபகாலமாக அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
கால்பந்து மைதானம் மற்றும் பள்ளி என இருவேறு வேறு இடங்களில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியின் தீவில் பார் ஒன்று உள்ளது. நெரிசலானா பாரில் நுழைந்த மர்மநபர் ஒருவர் தீடிரென துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார்.
இதில், சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
- தீயணைப்பு, மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணமான சிடொர்ஜொ நகரில் அமைந்துள்ளது அல் ஹொசின் இஸ்லாமிய மதப்பள்ளி.
இங்கு, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மதப்பாடம் பயின்று வரும் நிலையில், திடீரென கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த மதப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மதப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில், மாணவர்கள் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள்ள சிக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விபத்தில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 50க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.






