என் மலர்
நீங்கள் தேடியது "snowstorm"
- அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது.
- பல்வேறு மாகாணங்களில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி அங்கு பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. அட்லாண்டிக் பெருங்கடல் அருகே பனிப்புயல் ஒன்று உருவானது. மேற்கு மற்றும் மத்திய மேற்கு மாகாணங்களில் தாக்கி வரும் இந்தப் புயலுக்கு பெர்ன் என பெயர் வைத்து அந்நாட்டின் வானிலை ஆராய்ச்சி மையம் கண்காணித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் கிழக்கு டெக்சாஸ் தொடங்கி வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, ஹட்சன் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இந்த பனிப்பொழிவு காரணமாக வானிலை மையம் நியூ மெக்சிகோ தொடங்கி நியூ இங்கிலாந்து வரையில் உள்ள 14 கோடி மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறுவதற்கு தடை விதித்துள்ளது.
பனிப்புயலின் கோர தாண்டவம் காரணமாக தெற்கு கரோலினா, விர்ஜீனியா, ஜியோர்ஜியா, வடக்கு கரோலினா, மாரிலாந்து, கென்டகி உள்ளிட்ட 12 மாகாணங்களுக்கு அவசர நிலை பிரகடனம் அறிவித்து அந்நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.
அர்கன்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை புயல் பரவியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் உறைபனி குளிர், மின்தடை மற்றும் போக்குவரத்து முடக்கம் உள்ளிட்டவற்றால் அவதிப்பட்டு வருகின்றனர். பிட்ஸ்பர்க்கிற்கு வடக்கே உள்ள பகுதிகளில் 20 அங்குலம் வரை பனி பெய்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா முழுவதும் தாக்கிய சக்திவாய்ந்த பனிப்புயலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 30 பேர் பலியாகினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் 8 பேர் உயிரிழந்தனர். மாசசூசெட்ஸ், ஓஹியோவில் தலா 2 பேர் இறந்தனர்.
இந்த பனிப்பொழிவு காரணமாக அந்நாட்டில் சுமார் 9 லட்சம் வீடுகளுக்கு மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கின. பனிப்புயல் காரணமாக வெளிநாடுகள் மற்றும் உள்ளூர்களுக்கு இயக்கப்படவிருந்த 11500 விமானங்கள் ரத்தாகின. நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- பல்வேறு மாகாணங்களில் பனிப்புயலால் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- விமானத்தில் ஊழியர்கள் உட்பட மொத்தம் 8 பேர் இருந்தனர்.
அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் பனிப்புயலால் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள மெய்னே மாகாணத்தில் நிலவும் கடும் பனிப்புயலுக்கு இடையே, தனியார் ஜெட் விமானம் விபத்தில் சிக்கி உள்ளது.
இன்று வெளியான தகவலின்படி, ஞாயிறு இரவு 7:45 மணியளவில், பேங்கர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தனியார் ஜெட் விமானம் புறப்பட்டது. விமானத்தில் ஊழியர்கள் உட்பட மொத்தம் 8 பேர் இருந்தனர்.
ஓடுபாதையிலிருந்து கிளம்பிய அடுத்த 45 வினாடிகளில், விமானம் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்து விழுந்து தீப்பற்றியது.
இந்தக் கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து நடந்த சமயத்தில் அந்தப் பகுதியில் மிகக் கடுமையான பனிப்புயல் வீசிக்கொண்டிருந்தது என்றும் மோசமான வானிலையே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
விபத்தினால் பேங்கர் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
- அதிக மக்கள் தொகை கொண்ட மத்திய அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு மாகாணங்களுக்கு நகர்ந்து நாடு முழுவதும் ஒரு உறைபனியை ஏற்படுத்தும்.
- உறைபனி டெக்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை 3200 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் பரவியிருக்கும்.
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்புயல் தாக்கி வருகிறது.
வடமேற்கு டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமா நகரில் கடும் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. இதற்கிடையே ஓக்லஹோமாவில் இருந்து வடகிழக்கு வரை கடும் பனிப்பொழிவு இருக் கும் என்றும் திங்கட்கிழமை வரை சில இடங்களில் ஒரு அடிக்கு மேல் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் இந்த பனிப்புயல் பல நாட்களுக்கு நீடிக்கும் என்றும், அதிக மக்கள் தொகை கொண்ட மத்திய அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு மாகாணங்களுக்கு நகர்ந்து நாடு முழுவதும் ஒரு உறைபனியை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பனிப்புயலால் ஏற்படும் பனி மற்றும் உறைபனி டெக்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை 3200 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் பரவியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 18 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. பனிப்புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
பனிப்புயல் எச்சரிக்கையை அடுத்து மக்கள் உணவு, பால், முட்டை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவித்தனர். இதனால் பல கடைகளில் பொருட்கள் விற்று தீர்ந்து அலமாரிகள் காலியாக இருந்தன.
பனிப்புயலால் நீண்ட நேர மின்வெட்டு, மரங்க ளுக்குப் பரவலான சேதம் மற்றும் மிகவும் ஆபத்தான அல்லது பயணிக்க முடியாத சாலைப் போக்குவரத்து நிலைமைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்கா முழுவதும் பனிப்பொழிவால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 1800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளோரிடா, லூசியானா மாகணங்கள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
- சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து பொதுசேவை குறைக்கப்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் மேற்கு கரையோரத்தில் அமைந்துள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இந்த மாதம் தொடக்கம் முதல் காட்டுத்தீ பரவியது. கடுமையான காற்றுவீச்சு காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.
அமெரிக்காவின் தெற்கு மாகணங்களான புளோரிடா, மிசிசிப்பி, லூசியானா உள்ளிட்டவற்றில் புத்தாண்டு தொடங்கி கடுமையாக பனி பொழிந்து வருகிறது. இயற்கை அன்னையின் இந்த முரண்பாடான தாக்குதலில் இருந்து மீள முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது. இந்தநிலையில் புளோரிடா மாகாணத்தில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத அளவில் கடும் பனிப்பயுல் வீசி வருகிறது.
மைனஸ் 20 டிகிரி வானிலையுடன் கடுமையான பனிப்புயல் காரணமாக அங்குள்ள முக்கிய நகரங்களை வெள்ளை பனி மூடியது. குறிப்பாக புளோரிடாவில் உள்ள மில்டன் நகரம் துருவ கண்டம்போல காட்சியளிக்கும் வகையில் பனிபொழிந்து வருகிறது. அங்கு 23 செ.மீட்டர் அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு கொண்டது என அந்த நாட்டின் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் புளோரிடா, மிசிசிப்பி, லூசியானா உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள நகரங்களில் 20 செ.மீட்டருக்கும் அதிகமாக பனிப்பொழிவு பதிவாகி உள்ளதாக அந்த நாட்டின் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளோரிடா, லூசியானா மாகணங்கள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
இதனால் அந்த நாட்டின் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன, சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து பொதுசேவை குறைக்கப்பட்டது. ஹவுஸ்டன், கூல்ப்போர்ட், டல்லாயாசி, மொபில் உள்ளிட்ட நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டன.
இதனால் 2 ஆயிரம் விமானங்கள் ரத்தாகின. அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 10 பேர் பலியாகினர். 3 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இந்த பனிப்பொழிவால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் நேற்று கடும் உறைபனி படர்ந்து காணப்பட்டது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் குப்புவாரா மாவட்டத்தில் இருந்து கர்னாஹ் பகுதிக்கு சிலர் நடந்து சென்றுக் கொண்டிருந்தனர். பனியால் சூழப்பட்ட மலைப்பகுதியை கடந்து சாதனா மலைப்பகுதிக்கு வந்தடைந்தனர். அப்போது, 3 பேர் மட்டும் மாயமானது தெரியவந்தது.
மற்றவர்கள் உடனடியாக ராணுவத்தினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.
அப்பகுதியில் திங்கள் முதலே கடுமையான பனி நிலவி வருகிறது. இதன் காரணமாக திடீரென ஏற்பட்ட பனிப்புயலில் மூவரும் சிக்கி இறந்தது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் கர்னாஹ் பகுதியைச் சேர்ந்த தாகிர் கோஜா, காலிக் ஷேக், ஃபரேத் அகமது என்பது தெரிய வந்துள்ளது. #jksnowstorm






