என் மலர்
நீங்கள் தேடியது "அமெரிக்கா பனிப்புயல்"
- தனியார் நிறுவனம் மூலம் 15 பேர் கொண்ட குழுவினர் பனிச்சறுக்கு பயணம் மேற்கொண்டனர்.
- பனிச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 6 பேரை பத்திரமாக மீட்டனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லேக் தாஹோ அருகிலுள்ள சியரா நெவாடா பகுதியில் தனியார் நிறுவனம் மூலம் 15 பேர் கொண்ட குழுவினர் பனிச்சறுக்கு பயணம் மேற்கொண்டனர்.
அவர்கள் கேஸ்டில் பீக் பகுதியில் பனிச்சறுக்கில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திடீரென பலத்த காற்றுடன் பனிப்புயல் வீசியது. இதைதொடர்ந்து கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், அனைவரும் சிக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து மீட்புப் படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் பனிச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 6 பேரை பத்திரமாக மீட்டனர். பனிச்சரிவில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவரை காணவில்லை. அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து நெவாடா கவுண்டி ஷெரிப் ஷானன் மூன் கூறும்போது,"கடந்த 1981-ம் ஆண்டு வாஷிங்டனில் உள்ள மவுண்ட் ரெய்னியரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு, அமெரிக்காவில் நிகழ்ந்த மிக மோசமான சம்பவமாக இது அமைந்து உள்ளது"என்றார்.
- அதிக மக்கள் தொகை கொண்ட மத்திய அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு மாகாணங்களுக்கு நகர்ந்து நாடு முழுவதும் ஒரு உறைபனியை ஏற்படுத்தும்.
- உறைபனி டெக்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை 3200 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் பரவியிருக்கும்.
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்புயல் தாக்கி வருகிறது.
வடமேற்கு டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமா நகரில் கடும் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. இதற்கிடையே ஓக்லஹோமாவில் இருந்து வடகிழக்கு வரை கடும் பனிப்பொழிவு இருக் கும் என்றும் திங்கட்கிழமை வரை சில இடங்களில் ஒரு அடிக்கு மேல் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் இந்த பனிப்புயல் பல நாட்களுக்கு நீடிக்கும் என்றும், அதிக மக்கள் தொகை கொண்ட மத்திய அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு மாகாணங்களுக்கு நகர்ந்து நாடு முழுவதும் ஒரு உறைபனியை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பனிப்புயலால் ஏற்படும் பனி மற்றும் உறைபனி டெக்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை 3200 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் பரவியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 18 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. பனிப்புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
பனிப்புயல் எச்சரிக்கையை அடுத்து மக்கள் உணவு, பால், முட்டை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவித்தனர். இதனால் பல கடைகளில் பொருட்கள் விற்று தீர்ந்து அலமாரிகள் காலியாக இருந்தன.
பனிப்புயலால் நீண்ட நேர மின்வெட்டு, மரங்க ளுக்குப் பரவலான சேதம் மற்றும் மிகவும் ஆபத்தான அல்லது பயணிக்க முடியாத சாலைப் போக்குவரத்து நிலைமைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்கா முழுவதும் பனிப்பொழிவால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 1800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- கொலராடோ மாகாணத்தின் ராக்கி மலைப்பகுதியில் ஒரு அடி உயரத்திற்கு பனி விழுந்துள்ளது.
- கன்சாஸ் சிட்டியில் 10 செ.மீ., அளவும், செயின்ட் லுாயிசில் 7 செ.மீ., அளவும் பனி பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் நவம்பர் முதல் மார்ச் வரை குளிர்காலம் இருக்கும். அந்த சமயத்தில் கடும் பனிப்புயல்கள் தாக்கும். இந்த நிலையில் அமெரிக்காவில் பனிப்புயல் தாக்கி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 பனிப்புயல்கள் தாக்கின. தற்போது 3-வது பனிப்புயல் உருவாகி இருக்கிறது. இந்த புதிய பனிப்புயல் அதி தீவிர பனிப்புயலாக மாறி உள்ளது.
இந்த அதி தீவிர பனி புயலால் 5.5 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொலராடோ மாகாணத்தின் ராக்கி மலைப்பகுதியில் ஒரு அடி உயரத்திற்கு பனி விழுந்துள்ளது. கன்சாஸ் சிட்டியில் 10 செ.மீ., அளவும், செயின்ட் லுாயிசில் 7 செ.மீ., அளவும் பனி பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் வடமேற்கில் மோண்டானா முதல் கிழக்கு கடற்கரையில் உள்ள மைனே வரை 2,500 கி.மீ., நீளத்துக்கு 27 மாகாணங்களுக்கு அதிதீவிர பனிப்புயல் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
அமெரிக்காவில் நெப்ராஸ்கா, அயோவா, கொலராடோ ஆகிய மாநிலங்களில் கடும் பனிப்புயல் வீசுகிறது. திடீரென தட்பவெப்ப நிலை மோசமானதால் அங்கு வாழும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
கடும் பனிப்புயல் காரணமாக மேற்கண்ட 3 மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் கடும் பனி கொட்டுகிறது. டென்வர் விமான நிலையத்தில் ஓடு தளங்கள் அனைத்தும் பனியால் மூடிக்கிடக்கின்றன.
இதனால் அங்கு வந்து செல்லும் 1400 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
கொலராடோ மாநிலத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அங்கு தேசிய பாதுகாப்பு படைகளின் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
நெப்ராஸ்காவில் இன்று இரவு பனிப்புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அங்கும் தேசிய பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
பனிப்புயல் தாக்கம் உள்ள கொலராடோ, நெப்ராஸ்கா ஆகிய மாநிலங்களில் ஆபத்தான பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கொலராடோவில் மணிக்கு 90 மைல் வேகத்தில் பனிப்புயல் வீசுகிறது. இதனால் அங்கு லட்சக்கணக்கான வீடுகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது. வயூமிங் நகரில் பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. #USSnowFall
அமெரிக்காவில் இது குளிர்காலம் ஆகும். அங்கு தற்போது கடுமையான குளிர் வீசுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான குளிர் நிலவுவதாக மக்கள் கூறுகின்றனர்.
நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் குளிர் மிக மோசமாக இருக்கிறது.
சிகாகோவில் மைனஸ் 30 டிகிரி அளவிலும், மிச்சிகனில் மைனஸ் 37 டிகிரி அளவிலும் குளிர் நிலவுகிறது. இது, மைனஸ் 40 டிகிரியை தாண்டும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது.

சிகாகோவில் ஓடும் ஆறு ஒன்று முற்றிலும் பனிக்கட்டியாக மாறி இருக்கிறது. பல இடங்களில் விமானத்தை இயக்க முடியவில்லை. இதனால் 2 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பல மாநிலங்களில் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள், வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு இருக்கிறன.
கடும் குளிருக்கு தாக்கு பிடிக்க முடியாது என்பதால் மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று சிகாகோ மேயர் அறிவித்துள்ளார்.
அங்குள்ள கிரேட் லேக்ஸ், நியூ இங்கிலாந்து பகுதியில் நேற்று கடும் பனிப்பொழிவு இருந்தது. இதனால் மக்கள் வெளியே நடமாட முடியவில்லை.
விஸ்கான்சின், மிச்சிகன், இல்லினாய்ஸ், மிசிசிப்பி, அலபாமா ஆகிய மாநிலங்களில் குளிர் நிலை மிக மோசமாக இருப்பதால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. #USSnowstorm
அமெரிக்காவில் இந்த ஆண்டு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. தலைநகர் வாஷிங்டனில் வழக்கத்தை விட 2 முதல் 4 அங்குல அளவுக்கு அதிகமாக பனி கொட்டியது.
இதனால் ரோடுகளில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பனியால் போர்த்தப்பட்டு உள்ளது. வாஷிங்டன், மேரிலேண்ட், விர்ஜீனியா, சோரி உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் மாநிலத்தில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் நூற்றுக்கணக்கான விமானங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பலவிமானங்கள் தாமதமாக வருகின்றன. அனேகமான விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
ரோடுகளில் கொட்டிக்கிடக்கும் பனியால் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. விர்ஜீனியாவில் விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். #USSnowStorm
அமெரிக்காவில் கடும் பனிப்புயல் தாக்கி வருகிறது. இது அந்நாட்டின் வட கிழக்கு பகுதியில் 1,609 கி.மீ. தூரம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்சாஸ், இன்டியானா பொலிஸ், வாஷிங்டன், டென்வர், மிசோரி, செயின்ட் லூயிஸ், அர்கன் சாஸ் உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அங்கு பனி மழை போன்று கொட்டுகிறது. இதனால் அமெரிக்காவின் பாதி அளவு பகுதி வெள்ளை போர்வையால் போர்த்தியது போன்று காட்சி அளிக்கின்றன.

பனிப்பொழிவு கடுமையாக இருப்பதால் விமான நிலையங்களில் பனி கொட்டிக் கிடக்கிறது. இதனால் விமானங்கள் தரை இறங்க முடியவில்லை. எனவே 1431 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
12,645 விமானங்கள் தாமதமாக வந்து சென்றன. கடும் பனி மூட்டம் காரணமாக அமெரிக்காவில் ஏராளமான விமான நிலையங்கள் பாதிப்புக்குள்ளாகின. #USSnowStorm
அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீசுகிறது. இதனால் ரோடுகள் மற்றும் வீடுகள் மீது பனி கொட்டுகிறது. டகோடா, மின்னெசோட்டா, கன்சாஸ் மற்றும் அயோவா மாகாணங்களில் பனி கொட்டிக் கிடப்பதால் ரோடுகள் மூடப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் தற்போது குளிர்காலம் என்பதால் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. சாலைகளில் பனி சூழ்ந்து காணப்படுவதால் வாகனங்களை இயக்க முடியவில்லை. அதிக அளவில் பனி படர்ந்துள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதுதவிர அவ்வப்போது பனிப்புயலும் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை என்பதால் ஏராளமான பயணிகள் வெளியூர் செல்வதற்கு திட்டமிட்டிருந்தனர். பனிப்புயல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். #Snowstorm #USWeather #FlightsCancelled
அமெரிக்காவில் தற்போது குளிர்காலம் என்பதால் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், மத்திய அமெரிக்காவில் நேற்று முதல் கடும் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் பனி சூழ்ந்து காணப்படுவதால் வாகனங்களை இயக்க முடியவில்லை. முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

பனிப்புயல் தாக்கும் என அறிவிக்கப்பட்ட மாநிலங்களில் 1.4 கோடி மக்கள் வசிக்கின்றனர். கடுமையான காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கன்சாஸ், மிசவுரி, நெப்ரஸ்கா, அயோவா மாநிலங்களில் 2 கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். #SnowStorm #USBadWeather #FlightsCancelled






