அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 8 பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழப்பு

தனியார் நிறுவனம் மூலம் 15 பேர் கொண்ட குழுவினர் பனிச்சறுக்கு பயணம் மேற்கொண்டனர்.பனிச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 6 பேரை பத்திரமாக மீட்டனர்.
அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 8 பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழப்பு
Published on

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லேக் தாஹோ அருகிலுள்ள சியரா நெவாடா பகுதியில் தனியார் நிறுவனம் மூலம் 15 பேர் கொண்ட குழுவினர் பனிச்சறுக்கு பயணம் மேற்கொண்டனர்.

அவர்கள் கேஸ்டில் பீக் பகுதியில் பனிச்சறுக்கில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திடீரென பலத்த காற்றுடன் பனிப்புயல் வீசியது. இதைதொடர்ந்து கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், அனைவரும் சிக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து மீட்புப் படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் பனிச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 6 பேரை பத்திரமாக மீட்டனர். பனிச்சரிவில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவரை காணவில்லை. அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து நெவாடா கவுண்டி ஷெரிப் ஷானன் மூன் கூறும்போது,"கடந்த 1981-ம் ஆண்டு வாஷிங்டனில் உள்ள மவுண்ட் ரெய்னியரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு, அமெரிக்காவில் நிகழ்ந்த மிக மோசமான சம்பவமாக இது அமைந்து உள்ளது"என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com