என் மலர்
நீங்கள் தேடியது "Died"
- நெல்லையை அடுத்த தச்சநல்லூர் மேலக்கரையை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் அழகேசன்(வயது 31)
- மொட்டை மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்த அழகே சன் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்
நெல்லை:
நெல்லையை அடுத்த தச்சநல்லூர் மேலக்கரையை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் அழகேசன்(வயது 31). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுத்தமல்லி அருகே சொக் கட்டான்தோப்பில் கோவில் கொடை விழாவையொட்டி தனது மாமனார் வீட்டுக்கு அழகேசன் குடும்பத்துடன் சென்றுள்ளார்.
நேற்றிரவு அங்குள்ள மொட்டை மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்த அழகே சன் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவி ட்டதாக தெரி வித்தனர். இதுதொடர்பாக சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 பெண்கள் திடீர் மரணம் அடைந்தனர்.
- அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் பாரைபட்டி தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அல்போன்சா (வயது 42). இவர்கள் சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் இருந்து வந்து இங்கு குடிபெயர்ந்தனர். இந்த நிலையில் அல்ேபான்சாவுக்கு உடல்நிலை சரியில்லாததாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த அவர் திடீரென இறந்தார். இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள கூத்திப்பாறையைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (38). இவர் குடும்பத்துடன் 2 மாதங்களுக்கு முன்பு இங்கு குடிபெயர்ந்தார். சம்பவத்தன்று முத்துலட்சுமி திடீரென இறந்தார். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்தில் வாலிபர் பலியானார்கள்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
மதுரை
ஹார்விபட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் தனுஷ்கோடி (வயது 68). இவர் மோட்டார் சைக்கிளில் கூடல் நகர் ெரயில்வே மேம்பால பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த தனுஷ்கோடியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து பழங்காநத்தம் பசும்பொன் நகர் , ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த லாரி டிரைவர் கண்ணன் (51) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை ஆனைகுளம், வடக்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் கார்த்தி கேயன் (வயது 18). தண்ணீர் லாரி கிளீனராக இருந்தார். நேற்று இவர் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் சென்றபோது கட்டப்புலி நகரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
உசிலம்பட்டியை அடுத்த கீழப்பச்சேரியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது 26). கொத்தனார். சம்பவத்தன்று மதியம் இவர் தனக்கன்குளம் பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரமேஸ்வரன் பரிதாபமாக இறந்தார். திருநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- விபத்தில் மொபட்டில் சென்ற ஒருவர் ரோட்டோரமாக இறந்து கிடந்தார்.
- ஆறாக்குளம் பிரிவில் கட்டிட வேலைக்காக சென்று விட்டு வீடு திரும்பினார்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள ஆறாக்குளம் பிரிவு அருகே, கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நேற்றுமுன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மொபட்டில் சென்ற ஒருவர் ரோட்டோரமாக இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடம் சென்று உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் அவர் பல்லடம் அருகே உள்ள இச்சிப்பட்டி ஊராட்சி கொத்துமுட்டி பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி(வயது 52)என்பதும் ஆறாக்குளம் பிரிவில் கட்டிட வேலைக்காக சென்று விட்டு வீடு திரும்பும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் சிக்கி இறந்து போனது தெரியவந்தது. இதுகுறித்து அவரது மகன் கோகுல் குமார் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை
- அடையாளம் தெரியாத வாகனம் மோதி ரோட்டோரமாக ஒருவர் இறந்து கிடந்தார்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள ஆறாக்குளம் பிரிவு அருகே, கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மொபட்டில் சென்ற ஒருவர் ரோட்டோரமாக இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடம் சென்று உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து யார் அவர், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை மேற்கொண்டுள்ளனர் .அவரது வாகனத்தில் கட்டிட வேலைக்கு பயன்படுத்தும் பொருட்கள் இருந்ததால் கட்டிட தொழிலாளியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- சம்பவத்தன்று சோட்டுபுனியா 2-வது மாடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது கால் தடுமாறி மேலே இருந்து கீேழ விழுந்து விட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டு இறந்து விட்டார்.
- இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:
ஜார்கண்ட் மாநிலம் கார்வா மாவட்டம் உத்சுகி பகுதியை சேர்ந்தவர் சோட்டுபுனியா (30). இவர் ஈேராடு மாவட்டம் பெருந்துறை அருகே கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று சோட்டுபுனியா 2-வது மாடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது கால் தடுமாறி மேலே இருந்து கீேழ விழுந்து விட்டார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டு இறந்து விட்டார். இதுகுறித்து அவரது அண்ணன் சுகான்புனியா கொடுத்த தகவலின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அம்மாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.
- இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அம்மாபேட்டை:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் கோபால்(34)இவருடைய தந்தை சுப்பிரமணி (67). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் மேட்டூர் சென்று விட்டு மீண்டும் பவானியை நோக்கி வந்து கொண்டி ருந்தனர்.
மோட்டார் சைக்கிளை கோபால் ஓடி வந்தார். சுப்பிரமணி பின்னால் அமர்ந்திருந்தார்.
அம்மாபேட்டையில் உள்ள ஒரு தனியார் கம்பெனி அருகே வந்து கொண்டிருந்த பொழுது வடமாநிலத்தைச் சேர்ந்த ரவிக்குமார் (26) என்பவர் ஓட்டி வந்த மொபட் மீது மோதியது.
இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த சுப்பிர மணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைய டுத்து அவர் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுப்பிரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ெமாபட் ஓட்டி வந்த ரவிக்குமார் என்பருக்கு காயம் ஏற்பட்டு பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மேல் சிகிச்சைக்காக ஈரோடு உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- கடந்த 10 ஆண்டுகளாக லெட்சுமணன் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்.
- மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வந்தார்.
வெள்ளகோவில் :
முத்தூர் அருகே உள்ள முத்துக்கமங்கலத்தில் வசிப்பவர் லெட்சுமணன் வயது (38,)இவர் கடந்த 10 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு முத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வந்த நிலையில் நேற்று பகல் 1 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத போது லட்சுமணன் வீட்டின் விட்டத்தில் கயிறு மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து போன லெட்சுமணனுக்கு புதன்செல்வி (33) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
- பாட்டி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்.
- வயிறு வலிப்பதாக பாட்டியிடம் தெரிவித்தான்.
சேவூர் :
சேவூா் அருகே கருமாபாளையத்தில் வசித்து வரும் கன்னியப்பன், ஜமுனா தம்பதியரின் மகன் சஞ்சய் (11). தனியாா் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
அருகில் உள்ள பாட்டி வீட்டில் சஞ்சய் ஞாயிற்றுக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளாா்.உடனே வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து, பாட்டியிடம் சென்று குளிா்பானம் என நினைத்து பாட்டிலில் இருந்ததை குடித்துவிட்டேன் என பூச்சி மருந்து பாட்டிலைக் காட்டியுள்ளாா். உடனடியாக அவா் மேல் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சஞ்சய் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக சேவூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
- இவர் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
- நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி முருகராஜ் பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
பாளை அருகே உள்ள பொட்டல் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் முருகராஜ் (வயது 29).
இவர் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 23-ந் தேதி நெல்லைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த முருகராஜ் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
சீவலப்பேரி சாலையில் மணிக்கூண்டு அருகே அவர் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக முருகராஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த முருகராஜை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
- தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை தல்லாகுளம் பகுதியில் கலைஞர் நூலகம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த பணியில் தினமும் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு வங்காள மாநிலம் முர்சிதாபாத்தைச் சேர்ந்த ஹோசிமுதீன் மகன் இக்பால் (வயது 25) என்பவர் இன்று காலை வேலைக்கு வந்திருந்தார். அவர் கலைஞர் நூலக கட்டுமான பணியில் ஈடுபட்டார்.
அவர் சாரத்தில் ஏறி வேலை பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. மேலும் உடல் முழுவதும் காயங்களுடன் அலறியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே இக்பால் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் கலைஞர் நூலக கட்டுமான பணியின் போது கூலித் தொழிலாளி தவறி விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வாகனத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.
- திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை மேலப்பட்டியை சேர்ந்த குழந்தைவேல் மகன் பாலமுருகன் (வயது 34) விவசாயியான இவருக்கு, திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் இரு சக்கர வாகனத்தில் மாங்கோட்டையிலிருந்து எம்-தெற்கு தெரு வழியாக சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.இதில் பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாலமுருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்வம் குறித்து ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.