என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாரி மோதி சிறுமி பலி
- லாரி மோதி சிறுமி பலியானார்
- சாலையை கடக்க முயன்ற போது நடந்த சம்பவம்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சத்திரப்பட்டி கிரமத்தை சேர்ந்தவர் பாலு மகள் காயத்ரி (வயது13). இவர் தனது வீட்டிலிருந்து எதிரே உள்ள புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி நோக்கி வந்த டிப்பர் லாரி இவர் மீது மோதியது. இதில் சம்பவத்தில் உடல் துண்டாகி காயத்ரி உயிரிழந்தார்.இதனைப் பார்த்து அதிர்ச்சி மற்றும் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் மரங்களை போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து உடனடியாக அங்கு வந்த வல்லத்திராகோட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசம் செய்தனர். லாரி ஓட்டுனரான நல்லபுடையான்பட்டியை சேர்ந்த தங்கராசு என்பவரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






