என் மலர்
நீங்கள் தேடியது "Boy"
- சிவகங்கை மாவட்டத்தில் 9 வயது சிறுவனை வீட்டு வேலையில் அமர்த்திய உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எந்த ஒரு பணிகளிலும், தயாரிப்பு தொடர்புடைய செய்முறைகளிலும் பணியமர்த்துவது குற்றமாகும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவின் பேரில் இளையான்குடி வட்டம், கோட்டையூர் அஞ்சல், சிறுபாலை கிராமத்தில் குழந்தை தொழிலாளர் இருப்பதாக சைல்டு லைன் அமைப்புக்கு புகார் வந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கழுவன், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் ஆகியோர் தலைமையில், தொழிலாளர் உதவி ஆய்வாளர் பேச்சிமுத்து பிரியதர்ஷினி, இளையான்குடி துணை தாசில்தார் கிருஷ்ணகுமார், சார்பு ஆய்வாளர் பிரபாகரன், சிறுபாலை கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார், சைல்டு லைன் உறுப்பினர் கருப்புராஜா ஆகியோர் சிறுபாலை கிராமத்தில் ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த கிராமத்தில் நாகப்பட்டினம் அருகே உள்ள காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் வீட்டு வேலை மற்றும் கால்நடைகள் பராமரிக்கும் பணியில் ஈடுபடுத்தியது கண்டறியப்பட்டது.
உடனடியாக அந்த சிறுவன் மீட்கப்பட்டு மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டான். தற்போது நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையம் கிராமத்திலுள்ள பள்ளியில் அந்த சிறுவன் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்த சிறுவனை பணிக்கு அமர்த்திய வீட்டின் உரிமையாளர் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (ஒழித்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் சிவகங்கை குற்றவியல் நடுவர்-1 நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் அவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதத்தொகை சிவகங்கை மாவட்ட குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் மறுவாழ்வு நலச்சங்க வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அரசின் பங்குத் தொகையான ரூ.15 ஆயிரம் வரப்பெற்றவுடன், அபராத்தொகை ரூ.20 ஆயிரம் மற்றும் அரசின் பங்குத் தொகை ரூ.15ஆயிரம் சேர்த்து ரூ.35 ஆயிரம் சிறுவனின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு சிறுவனின் நலவாழ்விற்காக பயன்படுத்தப்படும்.
குழந்தைத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) திருத்தச்சட்டத்தின்படி14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எந்த ஒரு பணிகளிலும், தயாரிப்பு தொடர்புடைய செய்முறைகளிலும் பணியமர்த்துவது குற்றமாகும்.
சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் பணிபுரிவது கண்டறியப்பட்டால், Penncil Portal
மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
- பின்னால் வரிசையில் நின்ற 2 வாலிபர்கள் ஓ.டி.பி.யை பார்த்துக் கொண்டு அனந்தநாயகியிடம் பேச்சு கொடுத்து திசை திருப்பினர்.
- நாகேஸ்வர முடையார் கோவில் அருகில் உள்ள நகைக்கடைக்கு சென்று ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி ரூ. 60,000-க்கு நகைகள் வாங்கி தப்பி சென்றனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே ஆரப்பள்ளம் கிராமம் புது தெருவை சேர்ந்த சேகர் மனைவி அனந்தநாயகி (57). இவர் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்.-மில் தனது ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தி ரூ.20 ஆயிரம் பணம் எடுக்க முயன்றார்.
அப்போது ஏ.டி.எம்.மில் பணம் வராமல் மாறாக அனந்தநாயகி செல்போனுக்கு குறுஞ்செய்தியில் ஓ.டி.பி. நம்பர் வந்தது. இதனை அவர் பார்த்துக் கொண்டிருந்தபோது பின்னால் வரிசையில் நின்ற 2 வாலிபர்கள் ஓ.டி.பி.யை பார்த்துக் கொண்டு அனந்தநாயகியிடம் பேச்சு கொடுத்து திசை திருப்பினர். அனந்தநாயகியின் ஏ.டி.எம் கார்டு எடுத்துக் கொண்டு தங்கள் கையில் இந்த வேறொரு ஏ.டி.எம் காரை சொருகி விட்டு வாலிபர்கள் அங்கிருந்து தலைமறை ஆகிவிட்டனர்.
அருகில் உள்ள வங்கிக்கு சென்று தனது கணக்கில் பணம் உள்ளதா? ஏடிஎமில் பணம் வரவில்லை என்று விவரங்களை கேட்டுக் கொண்டிருந்தார் அனந்தநாயகி. ஏடிஎம் கார்டை திருடி சென்ற வாலிபர்கள் சீர்காழி கொள்ளிட முக்கூட்டு ஏடிஎம் ஆற்றில் ஓடிபி நம்பரை பயன்படுத்தி ரூ.36 ஆயிரம் எடுத்தனர். பின்னர் நாகேஸ்வர முடையார் கோவில் அருகில் உள்ள நகைக் கடைக்கு சென்று ஏடிஎம் கார்டு பயன்படுத்தி ரூ.60,000க்கு நகைகள் வாங்கி தப்பி சென்றனர்.
ரூ.96 ஆயிரம் எடுத்ததுக்கான குறுஞ்செய்தி அனந்தநாயகி செல்போனுக்கு வந்தது. உடனடியாக அனந்தநாயகி சீர்காழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு நூதன திருட்டில் ஈடுபட்ட வாலிபர்களை தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் நகைக்கடையில் நகை வாங்கும் சி.சி.டி.வி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
- பாட்டி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்.
- வயிறு வலிப்பதாக பாட்டியிடம் தெரிவித்தான்.
சேவூர் :
சேவூா் அருகே கருமாபாளையத்தில் வசித்து வரும் கன்னியப்பன், ஜமுனா தம்பதியரின் மகன் சஞ்சய் (11). தனியாா் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
அருகில் உள்ள பாட்டி வீட்டில் சஞ்சய் ஞாயிற்றுக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளாா்.உடனே வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து, பாட்டியிடம் சென்று குளிா்பானம் என நினைத்து பாட்டிலில் இருந்ததை குடித்துவிட்டேன் என பூச்சி மருந்து பாட்டிலைக் காட்டியுள்ளாா். உடனடியாக அவா் மேல் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சஞ்சய் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக சேவூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
- மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
- இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மின் விபத்து அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. மதுரை மாநகரில் நேற்று முன்தினம் மின்சாரம் தாக்கி பெண் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இந்த நிலையில் செக்கானூரணியில் 8-ம் வகுப்பு மாணவன் குளிர்சாதன பெட்டியை திறந்தபோது மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மதுரை செக்கானூரணி மனோகரன் மகன் பாலமுரளி (வயது 14). இவர் அங்கு உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். பாலமுரளியின் தந்தை மனோகரன், அதே பகுதியில் மட்டன் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் பாலமுரளி இரவு கடைக்கு சென்றார். அப்போது மட்டன் கடையில் இருந்த குளிர்சாதன பெட்டியை தற்செயலாக திறந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த பாலமுரளி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுரளி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டின் முன்பு சுபத்ரா உள்ளிட்ட 3 பேரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
- வீட்டின் சமையல் அறையில் பதிப்பதற்காக சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கடப்பா கல் திடீரென்று சரிந்து விளையாடி கொண்டிருந்த சுசிவின்ராஜ் மீது விழுந்தது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி இளவரசி. இவர்களது மகள் சுபத்ரா (வயது 9), மகன்கள் சுசிவின்ராஜ் (7), சுபிராஜ் (3).
இந்நிலையில் நேற்று ஊரில் ஒரு துக்க காரியத்துக்கு சரவணன் சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன்பு சுபத்ரா உள்ளிட்ட 3 பேரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
வீட்டின் சமையல் அறையில் பதிப்பதற்காக சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கடப்பா கல் திடீரென்று சரிந்து விளையாடி கொண்டிருந்த சுசிவின்ராஜ் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுசிவின்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தோட்டப் பகுதியில் உள்ள சுமார் 5 அடி ஆழமுள்ள தண்ணீர் தேங்கி நின்ற ஒரு குழியில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அவரது பெற்றோர்கள் கதறி அழுதனர்.
- இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள தேவி பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்.
இவர் தனது குடும்பத்தினருடன் அதே பகுதியில் உள்ள மகாலிங்கம் என்பவரது தோட்டத்தில் தங்கி கூலிவேலை செய்து வருகிறார். இவரது மகன் ஹரிக்குமார் (வயது 14). இவர் பரமத்தியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாணவர் ஹரிக்குமார் காலையில் அங்கிருந்த தோட்டப்பகுதிக்கு சென்றவர் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் தோட்டப் பகுதியில் உள்ள சுமார் 5 அடி ஆழமுள்ள தண்ணீர் தேங்கி நின்ற ஒரு குழியில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அவரது பெற்றோர்கள் கதறி அழுதனர்.
பின்னர் இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக
பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் குழியில் தவறி விழுந்து இறந்தது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- கடலூர் அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபரால் பரபரப்பு நிலவியது.
- அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் அருகே சுனாமி நகரை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி 12- ம் வகுப்பு படித்து முடித்து வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று மாணவி அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர் திடீரென்று மாணவியை கடத்தி சென்றார். அப்போது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பார்த்து அவர்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வாலிபர் அஜய் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்தனர்.
- தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தனுசை கைது செய்தனர்.
மதுரை
மதுரை செல்லூரை சேர்ந்த 17 வயது சிறுமி தாயார் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். இவரது தந்தை சிறுவயதிலேயே பிரிந்து சென்று விட்டார். சிறுமியின் தாயார் அதே பகுதியில் உள்ள இரும்பு கம்பெனியில் வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்தார்.
சிறுமிக்கும், சீனி நாயக்கன் பட்டியைச் சேர்ந்த கணேசன் மகன் தனுஷ் (வயது 20) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.
தனுஷ் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். அதிர்ச்சி அடைந்த சிறுமி தனுஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். அவர் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தார். இதுகுறித்து சிறுமி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.
போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தர வின்படி வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில் உதவி கமிஷனர் அக்பர் கான் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி தனுஷ் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது தெரிய வந்தது. தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தனுசை கைது செய்தனர்.
- மதுரை அருகே வாலிபரை தாக்கிய சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை விளாங்குடி, சொக்கநாதபுரம் தெருவைச் சேர்ந்தவர் மருதுபாண்டியராஜா (வயது 30). இவர் சம்பவத்தன்று நேருநகர் மந்தை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது அவரை வழிமறித்த 4 பேர் கும்பல் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றது. இதுதொடர்பாக மருதுபாண்டியராஜா செல்லூர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து வந்து விசாரித்தனர்.
இதில் அவர்கள் சொக்கநாதபுரம் ஜீவராஜ், விளாங்குடி நேரு நகர் கோபால் மகன் கணேசன் (20) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற மருதுபாண்டிய ராஜாவை தாக்கியதாக மேற்கண்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து, தப்பிச்சென்ற அஜய் என்பவரை தேடி வருகின்றனர்.
மதுரை பொன்மேனிபுதூரைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 26). ஆட்டோ டிரைவராக உள்ளார். சம்பவத்தன்று மாலை காளவாசலில் பயணிகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர், 'இது எங்களின் ஏரியா. இங்கு நீ எப்படி பயணிகளை ஏற்றிச் செல்லலாம்?' என்று கேட்டனர்.
எனவே இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 4 பேர் கும்பல் சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச்சென்று விட்டன. இது தொடர்பாக கார்த்திக் அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனக்கங்குளம், பி.ஆர்.சி. காலனி பாண்டி மகன் பிரகாஷ் (20), பொன்மேனி ஜவகர் தெரு, வேலு (வயது 29) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
மேலும் தப்பி ஓடிய சம்மட்டிபுரம் ஜெகன், பாண்டியன் நகர் சிலம்பரசன் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு பகுதியில் வளைவில் திரும்பும் போது பஸ்சும்,மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கர சத்தத்துடன் மோதியது.
- இந்த விபத்து குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகிரி:
முத்தூரில் இருந்து ஈரோடு செல்வதற்காக தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு பகுதியில் வந்து கொண்டிருந்தது.
எதிர் திசையில் மோட்டார் சைக்கிளில் சேலத்தை சேர்ந்த ஆர்.சந்தோஷ் (வயது 24), பி.சந்தோஷ் (24) என்ற வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ஒரு வளைவில் திரும்பும் போது பஸ்சும்,மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் தூக்கி வீசப்பட்டதில் 2 பேரும் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஆர்.சந்தோஷ் இறந்து விட்டதாக கூறினர். மற்றொரு வாலிபருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆலங்குளம் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து சிறுவன் பலியானார்.
- இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம்:
தென்காசி மலையன் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 35). இவர் நேற்று ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையில் நடைபெற்ற கோவில் கொடைவிழாவிற்கு சென்றார்.
அப்போது தனது உறவினரான அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவரது மகன் குணசீலன்(17) என்பவரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். கோவில் கொடைவிழாவை பார்த்துவிட்டு 2 பேரும் தென்காசிக்கு நள்ளிரவில் திரும்பி உள்ளனர்.
மோட்டார் சைக்கிளை ராஜேஷ் ஓட்டி சென்றுள்ளார். ஊத்துமலை அருகே உள்ள ரதமுடையார்புரத்தில் சென்றபோது அங்கிருந்த வளைவான சாலையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்ட குணசீலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராஜேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த ஊத்து மலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குணசீலன் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த ராஜேசுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகர் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து 6 வயது சிறுவன் பலியானான்.
- ஆபத்தான நிலையில் இருந்த சுஜித் பரிதாபமாக இறந்தான்
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகே உள்ள மேலதுலுக்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி புவனாதேவி (வயது 31). இவர்களுக்கு 6 வயதில் சுஜித் என்ற மகன் இருந்தான். பகல் நேரங்களில் மகனை மாடியில் உள்ள அறையில் தூங்க வைத்து விட்டு புவனாதேவி வீட்டு வேலைகளை செய்வது வழக்கம்.
அதன்படி சம்பவத்தன்று சுஜித்தை வீட்டின் மாடி அறையில் தூங்க வைத்து விட்டு கீழ் வீட்டில் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது விழித்துக் கொண்ட சுஜித் தூக்க கலக்கத்தில் கீழே இறங்க முயன்றபோது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தான். இதில் சிறுவன் படுகாயமடைந்தான். இதைப்பார்த்து அதிர்ச்சி யடைந்த புவனாதேவி மற்றும் அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆபத்தான நிலையில் இருந்த சுஜித் பரிதாபமாக இறந்தான்.
மகன் உடலை பார்த்து பெற்றோர்கள், குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.