நடுக்கடலில் தத்தளித்த குடும்பம் - 4 மணி நேரம் நீந்தி காப்பாற்றிய 13 வயது சிறுவன்

ஆஸ்திரேலியாவின் குயிண்டாலப் என்ற கடற்கரை சுற்றுலாத் தலம் உள்ளது. உடல் சோர்ந்து மயங்கும் நிலையிலும், அங்கிருந்தவர்களிடம் தனது குடும்பத்தினர் நடுக்கடலில் தத்தளிப்பதாக தெரிவித்தான்.
நடுக்கடலில் தத்தளித்த குடும்பம் - 4 மணி நேரம் நீந்தி காப்பாற்றிய 13 வயது சிறுவன்
Published on

ஆஸ்திரேலியாவின் குயிண்டாலப் என்ற கடற்கரை சுற்றுலாத் தலம் உள்ளது. இங்கு ஆஸ்டின் ஆப்பல்பீ (வயது 13) என்ற சிறுவன் தனது தாய் ஜோன் (47) மற்றும் தம்பி, தங்கையுடன் துடுப்புப் படகில் கடலுக்குச் சென்றான். அப்போது எதிர்பாராத விதமாக வீசிய பலத்த காற்றால், அவர்களது படகு கட்டுப்பாட்டை இழந்து நடுக்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது சிறுவன் ஆஸ்டின், சற்றும் பயப்படாமல் ராட்சத அலைகளுக்கு இடையே, சுறாக்கள் உள்ள பகுதியில் சுமார் 4 மணி நேரம் இடைவிடாமல் நீந்தி கரையை அடைந்தான்.

உடல் சோர்ந்து மயங்கும் நிலையிலும், அங்கிருந்தவர்களிடம் தனது குடும்பத்தினர் நடுக்கடலில் தத்தளிப்பதாக தெரிவித்தான். உடனடியாக விரைந்து வந்த மீட்புக் குழுவினர், ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை நடத்தி நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அவனது தாய் மற்றும் குழந்தைகளைப் பத்திரமாக மீட்டனர். தன் உயிரைப் பணையம் வைத்து குடும்பத்தை மீட்ட இந்த சிறுவனை உலகம் முழுவதும் 'அதிசயப் பிறவி' எனப் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com