search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்திரேலியா"

    • முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த இலங்கை அணி இன்று பலமான ஆஸ்திரேலியாவுடன் மோதியது.
    • டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    பெண்களுக்கான 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

    இன்று சார்ஜாவில் ஆஸ்திரேலியா- இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் அடித்தது.

    பின்னர் 94 ரன்கள் என்ற இலக்கோடு களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 14.2 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற்றது.

    தனது முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி புள்ளிபட்டியலில் 2 ஆம் இடத்திற்கு முன்னேறியது. முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த இலங்கை அணி 2-ம் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடமும் தோல்வி அடைந்து புல்லிபட்டியலில் 4ம் இடத்தில உள்ளது.

    முதல் போட்டியில் மோசமான தோவலியை தழுவிய இந்திய அணி புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில உள்ளது.

    • 13 வயதான வைபவ் சூரியாவான்சி சதம் விளாசினார்.
    • அவர் 104 ரன்னில் அவுட் ஆனார்.

    சென்னை:

    ஆஸ்திரேலிய அண்டர் 19 அணி, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் 4 நாட்கள் நடைபெறும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது. இதில் முதலில் நடந்த ஒருநாள் தொடரை இந்தியா வென்றது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் சென்னையில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 71.4 ஓவர்களில் 293 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் சமத் நாகராஜ் மற்றும் முகமது ஈனான் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதனை அடுத்து இந்திய அண்டர் 19 அணி தங்களுடைய முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இதில் 13 வயது வீரரான வைபவ் சூரியன்வாசி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். முதல்நாள் முடிவில் இந்திய அணி 14 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 103 ரன்கள் குவித்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியன்வாசி சதம் அடித்து அசத்தினார். அவர் 104 ரன்னில் அவுட் ஆனார். இதன்மூலம் சர்வதேச அளவில் அதிவேக சதம் அடித்த 2-வது இளம் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை வைபவ் சூரியாவான்சி படைத்தார்.

    இதற்கு முன்பு 2005-ம் ஆண்டு இங்கிலாந்து அணியை சேர்ந்த மொயின் அலி 56 பந்தில் சதம் அடித்திருந்தார்.

    வைபவ் கடந்த ஆண்டு ரஞ்சி டிராபி வரலாற்றில் இளம் அறிமுக வீரர் ஆனார், பீகார் அணிக்காக 12 வயதில் விளையாடி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரின் சாதனையை முறியடித்தார் . அவர் இதுவரை இரண்டு முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    வைபவுக்கு 13 வயது 187 நாட்கள் தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 312 ரன்கள் குவித்தது.
    • ஆஸ்திரேலிய அணி 126 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆகி தோல்வி அடைந்தது.

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    ஏற்கனவே முடிவடைந்த 3 போட்டிகளில் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது. இந்த நிலையில் 4-வது போட்டி நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

    மழைக்காரணமாக போட்டி 39 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி ப்ரூக் (58 பந்தில் 87 ரன்), டக்கெட் (62 பந்தில் 63 ரன்), லிவிங்ஸ்டன் (27 பந்தில் 62 ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 312 ரன்கள் குவித்தது.

    பின்னர் 313 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 126 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து 186 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் 50 ஆவது ஓவரை வீசிய மிட்செல் ஸ்டார்க் 28 ரன்களை விட்டுக்கொடுத்தார். அந்த ஓவரில் பேட்டிங் செய்த லிவிங்ஸ்டன் 6,0,6,6,6,4 என 28 ரன்கள் அடித்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் கொடுத்த ஆஸ்திரேலிய பவுலர் என்ற மோசமான சாதனையை ஸ்டார்க் படைத்துள்ளார்.

    இதற்க்கு முன்னதாக ஒரே ஓவரில் 26 ரன்களை விட்டுக்கொடுத்து சைமன் டேவிஸ், கிரேக் மெக்டெர்மாட், சேவியர் டோஹெர்டி, ஆடம் ஜாம்பா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் இந்த மோசமான சாதனையை கைவசம் வைத்திருந்தனர்.

    • அந்த அணியின் கேப்டனாக ஹாரி புரூக் செயல்படவுள்ளார்.
    • வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹல் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருாள் தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஹாரி புரூக் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியதை அடுத்து, அந்த அணியின் கேப்டனாக ஹாரி புரூக் செயல்படவுள்ளார்.

    வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜோஸ் பட்லர் டி20 மற்றும் ஒருநாள் தொடர் என இரண்டிலும் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. இதேபோன்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹல் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    இதன் காரணமாக ஆல்-ரவுண்டர் வீரரான லியம் லிவிங்ஸ்டன் 15 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிக்கு லிவிங்ஸ்டன் முக்கிய காரணமாக செயல்பட்டார்.

    இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 19 ஆம் தேதி துவங்குகிறது. பட்லருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக 18 மாதங்களுக்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான ஹாரி புரூக் இங்கிலாந்து அணியின் கேப்டனாக மாறியிருக்கிறார். 

    • குழந்தைகளை விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்கள், டென்னிஸ் மைதானங்களில் பார்க்க விரும்புகிறேன்.
    • எந்த வயது குழந்தைகளுக்கு தடை விதிப்பது என்பது குறித்து வயது சரிபார்ப்பு சோதனை விரைவில் தொடங்கப்படும்.

    ஆஸ்திரேலியா:

    குழந்தைகள் தற்போது செல்போன், சமூக ஊடகங்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறியதாவது:-

    குழந்தைகளை அவர்களின் செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் இருந்து விலக்கி விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்கள், டென்னிஸ் மைதானங்களில் பார்க்க விரும்புகிறேன்.

    அவர்கள் உண்மையான நபர்களுடன் உண்மையான அனுபவங்களைப் பெற வேண்டும் என்று விரும்புகிறோம். ஏனென்றால் சில சமூக ஊடகங்கள் தீங்கு விளைவிப்பதாக இருக்கிறது.

    சமூக ஊடகங்களில் உள்ள தகவல்கள் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தில் தாக்கங்கள், அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருப்பது கவலை அளிக்கிறது.

    எனவே குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டத்தை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. எந்த வயது குழந்தைகளுக்கு தடை விதிப்பது என்பது குறித்து வயது சரிபார்ப்பு சோதனை விரைவில் தொடங்கப்படும்.

    இது உலகளாவிய பிரச்சனை. இதில் தீர்வு காண உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் முயற்சிகளை எடுத்து வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
    • 3 விக்கெட்டுகள் வீழ்த்தி 62 ரன்கள் குவித்த கேமரூன் கிரீன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. முதல் 2 போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று 2-0 என என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து. அதிகபட்சமாக ப்ரெண்டன் மெக்முல்லன் 56 ரன்கள் அடித்தார்.

    இதனையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. அந்த அணி 16.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியா சார்பில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி 62 ரன்கள் குவித்த கேமரூன் கிரீன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த வெற்றியின் மூலம் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மார்ச் 8, 2014 இல் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட MH370 மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போனது
    • விமானம் எங்கு மறைந்திருக்கும் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் புதிய விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்

    மார்ச் 8, 2014 : மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகரான பெய்ஜிங்குக்கு 227 பயணிகளையும் 12 விமானப் பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட 777 வடிவமைப்பு கொண்ட MH370 மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வியட்நாம் வான் பரப்பை நெருங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வேறு திசையில் திரும்பியது. கட்டுப்பாட்டு அறையுடன் விமானத்துக்கு இருந்த அனைத்து தொடர்புகளும் செயலிழந்தன.

     

    MH370 மர்மம்  

    மீண்டும் மலேசிய வான் பரப்புக்குள் திரும்பிய விமானம் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் மாயமாக மறைந்தது. எரிபொருள் தீரும்வரை பயணித்த விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதாவது, இதுவரை கிடைத்த சாட்டிலைட் தரவுகளை ஆராய்ந்து பார்த்தால், MH370 விமானமானது இந்தியப் பெருங்கடலின் தெற்கே, ஆஸ்திரேலியாவின் வடக்குக் கரையை ஒட்டிய பகுதியில் விழுந்து நொறுங்கியிருக்கும் என்று நம்பப்படுகிறது.

    ஆனால் கடந்த காலங்களில் 2 முறை மிகப்பெரிய அளவிலான தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவை பெரிய அளவில் பயனளிக்காமல் தோல்வியிலேயே முடிந்தன. இதுநாள் வரை விமானத்துக்கும் அதில் இருந்தவர்களும் என்ன ஆனது என்பது மர்மமாகவே இருந்து வந்தது. MH370 விமானத்துக்கு என்ன நடந்திருக்கும் என்ற பலவாறாக யூகங்கள் கான்சபைரஸி தியரிக்கள் கூறப்பட்டு வருகிறன.

    இந்தியப் பெருங்கடல் 

    ஆனால் விமானம் எங்கு மறைந்திருக்கும் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் புதிய விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். தென் கிழக்கு இந்தியப் பெருங்கடலில் Broken Ridge [முகடு] எனப்படும் 20,000 அடி ஆழம் கொண்ட oceanic plateau துளை உள்ளது. இதற்குள்தான் MH370 விமானம் விழுந்துள்ளது என்றும் அதனாலேயே எந்த ஒரு ரேடாராலும் விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் டாஸ்மேனிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் வின்சன்ட் லைனே Vincent Lyne கூறுகிறார்.

     இந்த துளையில் உள்ள குறுகலான செங்குத்தான பகுதிகள், ராட்சத முகடுகள், ஆழமான பகுதிகள் மற்றும் கடல் படிமங்களை உள்ளடக்கிய இந்த 20,000 அடி ஆழ Broken Ridge விமானம் ரேடாரில் சிக்காமல் மறைய சரியான இடமாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.  

    • சில சமயம் மீண்டும் அலுவலகம் வந்து அவர்கள் கேட்கும் தகவலை வழங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
    • இதேபோல் வார விடுமுறை நாட்களிலும் நிறுவனம் அழைத்தால் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    சிட்னி:

    தொழிலாளர்கள் தங்கள் பணி நேரம் முடிந்து வீட்டிற்கு சென்றபிறகு, சில சமயங்களில் மேலதிகாரிகள் தொடர்பு கொண்டு வேலை தொடர்பான தகவல்களைக் கேட்பது உண்டு.

    சில சமயங்களில் மீண்டும் அலுவலகம் வந்து அவர்கள் கேட்கும் தகவல்களை வழங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதேபோல் வார விடுமுறை நாட்களிலும் நிறுவனம் அழைத்தால் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    அப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள் வீட்டிற்குச் சென்றபிறகும் அலுவலகத்தைப் பற்றியே சிந்திக்க வேண்டிய நிலை உள்ளது. வேலை இல்லாத நேரத்தில் அமைதியாக பொழுதை கழிக்கவோ, குடும்பத்தினருடன் நேரம் செலவிடவோ முடிவதில்லை.

    இந்தக் குறையை போக்கும் வகையிலும், தொழிலாளர்களுக்கு உரிமை வழங்கும் வகையிலும் பிரான்ஸ், ஸ்பெயின் பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகள் புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளன.

    அதாவது, வேலை நேரம் முடிந்தபின் தொழிலாளர்களை நிறுவனம் தொடர்பு கொண்டால் அழைப்பை துண்டிக்கும் உரிமையை இந்தச் சட்டம் வழங்குகிறது.

    இந்த நாடுகளின் வரிசையில் ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ளது. தொழிலாளர்கள் வேலை நேரம் முடிந்து சென்றபின், நிறுவனத்திடம் இருந்து வரக்கூடிய அழைப்புகள், மின்னஞ்சல்கள் போன்றவற்றை நிராகரிப்பதற்கான உரிமையை வழங்க, சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    மத்திய-இடது தொழிலாளர் கட்சியின் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட தொழில்துறை உறவுகள் சட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக இந்தச் சட்டத்திருத்தம் பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய பசுமை கட்சி மற்றும் சுயேட்சை செனட்டர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்த புதிய சட்டத்திருத்தம் இந்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்டது.

    அலுவலக நேரத்திற்கு பிறகு தொழிலாளர்களை தொடர்புகொள்ளும்போது, நியாயமற்ற காரணமாக இருந்தால் அந்த அழைப்பை நிராகரிக்கலாம். நியாயமான காரணமாக இருந்தால் அழைப்புக்கு பதில் அளிக்கலாம் அல்லது தொடர்பு கொள்ளலாம். இது தொடர்பாக ஏதேனும் பிரச்சனை எழுந்தால் ஆஸ்திரேலியாவின் நியாய வேலை ஆணையத்திடம் முறையிட்டு, இறுதி முடிவு எடுக்கலாம் என பசுமை கட்சி முன்மொழிந்துள்ளது.

    இந்நிலையில், வேலை நேரம் முடிந்தபின் தொழிலாளர்களை நிறுவனம் தொடர்பு கொண்டால் அழைப்பை துண்டிக்கும் உரிமை சட்டம் வரும் 26-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

    • முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி 1877 மார்ச் மாதம் நடைபெற்றது.
    • டெஸ்ட் கிரிக்கெட்டின் நூற்றாண்டை முன்னிட்டு 1977 ஆண்டு சிறப்பு டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டது

    டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கி 150 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில் 2027ம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சிறப்பு டெஸ்ட் போட்டி நடத்தப்படும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத் தலைவர் நிக் ஹாக்லி அறிவித்துள்ளார்.

    வரலாற்றில் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி 1877 மார்ச் மாதம் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இதே மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

    டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகமாகி 100 ஆண்டுகள் ஆனந்தை ஒட்டி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 1977 ஆண்டு மார்ச் மாதம் சிறப்பு டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கவுரவ விருதுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தேர்வாகியுள்ளார்
    • இந்திய கலை மற்றும் கலாச்சாரத்துக்கான தூதுவராக தெலுங்கு நடிகர் ராம் சரண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

    70 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் 2022 ஆம் ஆண்டு திரைப்படங்களுக்கு நேற்று டெல்லியில் வைத்து அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் மலையாளம், கண்டனம் உள்ளிட்ட தென் இந்திய படங்கள் அதிக விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது. இதற்கிடையில் மறுபுறம் ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன் நகரில் வைத்து இந்திய திரைப்பட விருது விழா நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 15 தொடங்கிய இந்த விழா ஆகஸ்ட் 25 வரை நடைபெறும். இந்நிலையில் நேற்று சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    அந்த வகையில்,

    சிறந்த திரைப்படத்திற்கான விருதுக்கு '12-த் ஃபெயில்' படம் தேர்வாகியுள்ளது . ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமார் சர்மாவின் வாழ்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

     

    ◆சிறந்த இயக்குனருக்கான விருது விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாத மற்றும் கார்த்திக் ஆர்யன் நடித்த சந்து சாம்பியன் படத்தின் இயக்குனர் கபீர் கான் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

    ◆எக்ஸலென்ஸ் இன் சினிமா [Excellence in Cinema] கவுரவ விருதுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தேர்வாகியுள்ளார்

    ◆சிறந்த சீரிஸ் நடிகையாக 'போச்சர்' சீரிசில் நடித்த கேரள நடிகை நிமிஷா சஜயன் தேர்வாகியுள்ளார்

    ◆இந்திய கலை மற்றும் கலாச்சாரத்துக்கான தூதுவராக தெலுங்கு நடிகர் ராம் சரண்  தேர்வு செய்யப்பட்டுள்ளார்

     

     

    ◆சிறந்த நடிகருக்கான விருது 'சந்து சாம்பியன்' படத்தில் ஹீரோ கார்த்திக் ஆரியனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

    ◆சிறந்த நடிகைக்கான விருது 'உள்ளொளுக்கு' [ Ullozhukku ] படத்தில் நடித்த மலையாள நடிகை பார்வதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

    ◆சிறந்த சீரிஸ் ஆக ' கோஹ்ரா' Kohrra [இந்தி] தேர்வு செய்யப்பட்டுள்ளது

    ◆விமர்சகர்கள் தேர்வில்[ Critics Choice] சிறந்த நடிகராக '12த் ஃபெயில்' நடிகர் விக்ராந்த் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்

    ◆விமர்சகர்கள் தேர்வில்[ Critics Choice] சிறந்த படமாக 'லாபாட்டா லேடிஸ்' படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    ◆சமத்துவ சினிமாவாக [Equality in Cinema] ஷாருக் கான் நடிப்பில் ராஜ் குமார் ஹிராணி இயக்கத்தில் வெளிவந்த 'டன்கி' [Dunki] படம் தேர்வாகியுள்ளது

    ◆துணைக்கண்டத்தின் [இந்தியா] சிறந்த படமாக [Best Film from the Subcontinent] - 'தி ரெட் சூட்கேஸ்' படம் தேர்வாகியுள்ளது

    ◆பீபுள்ஸ் சாய்ஸ் படமாக [People's Choice] ஆலியா பட், ரன்வீர் சிங் நடித்த 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படம் [Rocky Aur Rani Kii Prem Kahaani] தேர்வாகியுள்ளது 


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நியூசிலாந்து நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.
    • நியூசிலாந்தில் இருந்து பெரும்பாலானோர் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.

    நியூசிலாந்து நாட்டில் இருந்து எண்ணற்ற மக்கள் வெளியேறி வேறு நாடுகளுக்கு குடி பெயர்ந்து வருகின்றனர்.

    அந்நாட்டில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்பின்மை பிரச்சனை, பொருளாதார மந்தநிலை மற்றும் வட்டி விகிதங்கள் உயர்வால் மக்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

    கடந்த 1 வருடத்தில் மட்டும் நியூசிலாந்து நாட்டில் இருந்து ௧,31,200 மக்கள் வெளியேறியுள்ளனர். இந்த எண்ணிக்கை வேறு எப்போதும் இல்லாத அளவிற்கு மிக அதிகமானதாகும்.

    நாட்டை விட்டு வெளியேறிய மக்களின் மூன்றில் ஒருபங்கினர் ஆஸ்திரேலியா நாட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர். 

    • இன்று அதிகாலை 2 மணியளவில் விமானி உட்பட 2 பேர் பயணித்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.
    • ஹெலிகாப்டர்களின் 2 புரொபெல்லர்களும் [propellers] செயலிழந்ததால் இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது

    ஆஸ்திரேலியாவில் நட்சத்திர ஹோட்டலின் மேற்கூரையில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.வடக்குப் பகுதியில் உள்ள கெய்ர்ன்ஸ் Cairns நகரில் இயங்கி வரும் ஹில்டன் டபுள் ட்ரீ ஹோட்டலின் நீச்சல் குளம் அமைந்துள்ள மேற்கூரையில் இன்று அதிகாலை 2 மணியளவில் விமானி உட்பட 2 பேர் பயணித்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.

     

    விழுந்த வேகத்தில் ஹெலிகாப்டர் தீப்பற்றியெரிந்த நிலையில் விமானி சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஹோட்டலில் இருந்த 100க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் ஹோட்டலில் இருந்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

    வானில் பறந்துகொண்டிருந்தபோது ஹெலிகாப்டர்களின் 2 புரொபெல்லர்களும் [propellers] செயலிழந்ததால் இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விபத்துக்குப் பின் ஹெலிகாப்டர் தீப்பற்றியும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

    ×