என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆஸ்திரேலியாவை அலறவிட்ட ஜிம்பாப்வே... 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
    X

    ஆஸ்திரேலியாவை அலறவிட்ட ஜிம்பாப்வே... 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

    • ஆஸ்திரேலியா தரப்பில் மேட் ரென்ஷா 65 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் நடத்துகின்றன. இந்தத் தொடரின் 19வது போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. கொலம்போவில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை குவித்துள்ளது. ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் ப்ரியன் ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 64 ரன்களை (7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) அடித்து அசத்தினார்.

    இதனையடுத்து ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் இங்கிலிஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இதில் இங்கிலிஸ் 8 ரன்னிலும் அடுத்து வந்த கேமரூன் கிரீன், டிம் டேவிட் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். அதனை தொடர்ந்து டிராவிஸ் ஹெட் 17 ரன்னில் வெளியேறினர்.

    இதனையடுத்து மேக்ஸ்வெல்- மேட் ரென்ஷா ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதானமாக விளையாடிய மேக்ஸ்வெல் 32 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ஸ்டோய்னிஸ் 6, பென் த்வார்ஷுயிஸ் 6 என ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் அதிரடியாக விளையாடிய மேட் ரென்ஷா அரை சதம் எடுத்து அணிக்கு நம்பிக்கை அளித்தார். தொடர்ந்து போராடிய அவர் 65 ரன்னில் வெளியேறினார்.

    இதனால் ஆஸ்திரேலியா அணி 19.3 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    Next Story
    ×