என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜிம்பாப்வே"

    • முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 20 ஓவரில் 146 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இலங்கை 148 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே, இலங்கை அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்தது.கேப்டன் சிக்கந்தர் ராசா 37 ரன்னில் அவுட்டானார். பிரியன் பென்னட் 34 ரன்னில் வெளியேறினார். ரியான் பர்ல் 26 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இலங்கை சார்பில் மகேஷ் தீக்சனா, வஹிந்து ஹசரங்கா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்க அதிரடியாக ஆடி அரை சதமடித்தார்.

    அவருக்கு குசால் மெண்டிஸ் நன்கு ஒத்துழைப்பு அளித்தார்.

    இறுதியில், இலங்கை அணி 16.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பதும் நிசங்கா 98 ரன்னும், குசால் மெண்டிஸ் 25 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இலங்கை அணி தான் ஆடிய 3 லீக் போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

    அடுத்து நடைபெறவுள்ள பாகிஸ்தானுடனான போட்டியில் இலங்கை அணி கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும். இல்லையேல் தனது ரன் ரேட்டை உயர்த்த வேண்டும் . இல்லையெனில் ரன்ரேட் அடிப்படையில் இறுதிப்போட்டிக்கு ஜிம்பாப்வே அணி நுழைந்துவிடும்.

    • டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்தது.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே, இலங்கை அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்தது.கேப்டன் சிக்கந்தர் ராசா 37 ரன்னில் அவுட்டானார். பிரியன் பென்னட் 34 ரன்னில் வெளியேறினார்.

    ரியான் பர்ல் 26 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இலங்கை சார்பில் மகேஷ் தீக்சனா, வஹிந்து ஹசரங்கா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை விளையாடி வருகிறது. இதில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும்.

    மாறாக, இலங்கை அணி வெற்றி பெற்றால் நாளை பாகிஸ்தானுடனான போட்டியில் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

    பாகிஸ்தான் அணி முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே முன்னேறியுள்ளது.

    • முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய ஜிம்பாப்வே அணி 19 ஓவரில் 126 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. பாபர் அசாம் 74 ரன்னிலும், பர்ஹான் 63 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் பகர் ஜமான் 10 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்.

    ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி ஜிம்பாப்வே களமிறங்கியது. பாகிஸ்தான் அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் விக்கெட்கள் வீழ்ந்தன. உஸ்மான் தரிக் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

    ஜிம்பாப்வே அணியின் ரியான் பர்ல் தனி ஆளாகப் போராடி அரை சதம் கடந்து 67 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி 19 ஓவரில் 126 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 69 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    பாகிஸ்தான் சார்பில் உஸ்மான் தரிக் 4 விக்கெட்டும், முகமது நவாஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 162 ரன்கள் அடித்தது.
    • அடுத்து ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 95 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.

    இன்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் அடித்தது. பென்னட் 49 ரன்னிலும், சிக்கந்தர் ராசா 47 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இலங்கை சார்பில் வனிந்து ஹசரங்கா 3 விக்கெட்டும், ஈஷான் மலிங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து, 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஜிம்பாப்வே அணியினர் துல்லியமாக பந்து வீசி அசத்தினர். சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    இறுதியில், இலங்கை அணி 20 ஓவரில் 95 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஜிம்பாப்வே சார்பில் பிராட் ஈவன்ஸ் 3 விக்கெட்டும், ரிச்சர்ட் நகரவா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது சிக்கந்தர் ராசாவுக்கு அளிக்கப்பட்டது.

    முத்தரப்பு தொடரில் ஜிம்பாப்வே தான் ஆடிய 2 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி அடைந்துள்ளது.

    • பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் மூன்று உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் பலியானார்கள்.
    • இதனால் முத்தரப்பு போட்டியில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் அறிவித்தது.

    லாகூர்:

    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய 3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 17-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ராவல்பிண்டி, லாகூரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

    இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை தாண்டி நடத்திய வான்வெளி தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் மூன்று உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் பலியானார்கள். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தான், முத்தரப்பு போட்டியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தது.

    இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி விலகியதால் அதற்கு பதிலாக ஜிம்பாப்வே அணி சேர்க்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வேயை அடுத்த மாதம் 17-ந்தேதி எதிர்கொள்கிறது.

    • இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
    • இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 29-ம் தேதி நடக்கிறது.

    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலன்கா தலைமையிலான அந்த அணியில் முன்னணி ஆல் ரவுண்டரான வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக இடம்பெறவில்லை.

    இலங்கை அணி விவரம்:

    சரித் அசலன்கா (கேப்டன்), பதும் நிசங்கா, நிஷான் மதுஷ்கா, குசால் மெண்டிஸ், சதீர சமரவிக்ரமா, நுவனிது பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்கே, துனித் வெல்லலகே, மிலன் ரத்நாயக்கே, மஹீஸ் தீக்சனா, ஜெப்ரி வான்டர்சே, அசித்த பெர்னாண்டோ, துஷ்மந்த சமீரா, தில்ஷன் மதுஷன்கா.

    • இத்தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் ஜிம்பாப்வே தோல்வி கண்டது.
    • இதனால் ஜிம்பாப்வே அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

    ஹராரே:

    ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்தது. பிரையன் பென்னட் 61 ரன்கள் அடித்தார்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் கார்பின் போஷ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

    ஆனால் கேப்டன் ரஸ்ஸி வான்டர் டுசென்-ரூபின் ஹெர்மன் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது.

    ஹெர்மன் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 17.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் அடித்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    வான் டர் டுசென் 52 ரன்னும், பிரெவிஸ் 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    இந்த தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி கண்ட ஜிம்பாப்வே இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

    • தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 418 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
    • ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஜிம்பாப்வே-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் புலவாயோவில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 418 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதனையடுத்து 2 ஆவது இன்னிங்கில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதன்மூலம் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற ஜிம்பாப்வேவுக்கு 537 ரன்கள் என்ற இமாலய இலக்கை தென்னாப்பிரிக்கா நிர்ணயம் செய்தது .

    இதனையடுத்து விளையாடிய ஜிம்பாப்வே 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 32 ரன்களை எடுத்துள்ளது.

    • 55 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது தென்ஆப்பிரிக்கா.
    • லுவான்- ட்ரே பிரிட்டோரியஸ், கார்பின் போஸ்ச் சதம் விளாசினர்.

    ஜிப்பாப்வே- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இன்று புலவாயோவில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் டெவால்ட் பிரேவிஸ், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், கோடி யூசுப் ஆகியோர் அறிமுகம் ஆகினர்.

    டோனி டி ஜோர்சி, ப்ரீட்ஸ்கே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜோர்சி 0 ரன்னிலும், ப்ரீட்ஸ்கே 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த முல்டர் 17 ரன்னிலும், பெடிங்காம் 0 ரன்னிலும் வெளியேறினர்.

    இதனால் 55 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது தென்ஆப்பிரிக்கா. 5ஆவது விக்கெட்டுக்கு லுவான்- ட்ரே பிரிட்டோரியஸ் உடன் டெவால்டு பிரேவிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளயாடியது. பிரேவிஸ் 41 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனார்.

    அடுத்து வந்த வெர்ரைன் 10 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கார்பின் போஸ்ச் அபாரமாக விளையாடினார். பிரிட்டோரியஸ் அறிமுக போட்டியிலேயே 112 பந்தில் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 157 பந்தில் 150 ரன்னைத் தொட்டார். தொடர்ந்து விளையாடிய அவர் 160 பந்தில் 153 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    போஸ்ச் 77 பந்தில் அரைசதமும், 124 பந்தில் சதமும் அடித்தார். தென்ஆப்பிரிக்கா முதல்நாள் ஆட்ட முடிவில் 90 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 418 ரன்கள் குவித்துள்ளது. போஸ்ச் 100 ரன்னுடனும், மபாகா 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    • ஆர்சிபி புள்ளிகள் பட்டியலில் 3 ஆவது இடத்தை பிடித்து பிளேஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது.
    • நாளை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் பெங்களூரு அணி மோதுகிறது.

    ஐபிஎல் கிரிக்கெட் 2025 சீசன் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. ஆர்சிபி 13 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி, கைவிடப்பட்ட ஒரு போட்டியுடன் 17 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 3 ஆவது இடத்தை பிடித்து பிளேஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது.

    நாளை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் பெங்களூரு அணி மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் முதல் இரண்டு இடங்களுக்குள் பிடித்து குவாலிபியர் 1 போட்டியில் பெங்களூரு அணி விளையாடும்.

    லீக் போட்டிகள் முடிவடைந்த பின்னர், வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் அவர்களுடைய நாட்டுக்காக சர்வதேச போட்டிகளில் விளையாட சென்றுவிடுவார்கள் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதனால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிய அணிகள் மாற்று வீரர்களை தேர்வு செய்து வருகின்றன. அவ்வகையில், லுங்கி இங்கிடிக்கு பதிலாக, ஆர்சிபி அணியில் ஜிம்பாப்வே வீரர் பிளசிங் முசராபானி. இணைந்துள்ளார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பயிற்சிக்காக தென்னாப்பிரிக்க அணியுடன் லுங்கி இங்கிடி இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனாக ஹீத் ஸ்ட்ரீக் இருந்துள்ளார்.
    • சர்வதேச கிரிக்கெட்டில் ஹீத் ஸ்ட்ரீக் இதுவரை 455 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

    ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்தார். 49 வயதான ஹீத் ஸ்ட்ரீக் ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்காக ஹீத் ஸ்ட்ரீக் 65 டெஸ்ட் போட்டிகள், 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

    1993 முதல் 2005-ம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடி இருக்கும் ஹீத் ஸ்ட்ரீக் 455 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கல்லீரல் புற்றுநோயால் நீண்ட காலம் போராடி வந்துள்ளார். அவரது மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் பலர் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

    • 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
    • ஜிம்பாப்வே அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

    9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

    அதில் போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேரடியாகவும், 2022 டி20 உலகக்கோப்பையில் முதல் எட்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளும், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் டி20 தரவரிசை அடிப்படையிலும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

    மீதமுள்ள 8 அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதனடிப்படையில் ஆப்பிரிக்கா பிராந்திய தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    தகுதி சுற்று அடிப்படையில் இதுவரை 7 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவை அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா ஆகிய நாடுகள் ஆகும். மீதமுள்ள 1 இடத்திற்கு ஜிம்பாப்வே, உகாண்டா, கென்யா அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது.


    இந்நிலையில் உகாண்டா அணி டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. ஜிம்பாப்வே அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதன் மூலம் உகாண்டா அணி முதல் முறையாக ஐசிசி தொடர்களில் தகுதி பெற்றுள்ளது. 

    ×