என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "srilanka"

    • முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது.
    • இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

    இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதில் இந்தியா-இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது.

    சமீபத்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும்.

    இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ரன் குவிக்க திணறியது. இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 121 மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 122 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது. 

    • கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் அந்த நாடே சின்னாபின்னமானது.
    • இலங்கையில் புயலில் சிக்கி 643 பேர் உயிரிழந்தனர்.

    இலங்கையில் இந்த மாத தொடக்கத்தில் 'டிட்வா' புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் அந்த நாடே சின்னாபின்னமானது.

    இலங்கையில் புயலில் சிக்கி 643 பேர் உயிரிழந்தனர். பலர் வீடுகளையும், உறவினர்களையும் இழந்து தனிமை ஆகினர்.

    நிதி பற்றாக்குறை மற்றும், பொருளாதார மந்தநிலை காரணமாக சிக்கி தவிக்கும் இலங்கை, புயல் பாதிப்பால் பெரும் பாதிப்படைந்தனர்.

    இந்தநிலையில் புயல் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக ரூ.1,850 கோடி (206 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) அவசரநிதியை விடுவித்து நிவாரணமாக வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

    • சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணியில் இளம் வீராங்கனைகள் அதிகம் இடம் பிடித்துள்ளனர்.
    • வலுவான இந்திய அணியை சமாளிப்பது இலங்கை அணிக்கு கடும் சவாலாக இருக்கும் எனலாம்.

    இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதில் இந்தியா-இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது.

    சமீபத்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும். ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியில் துணை கேப்டன் மந்தனா, தீப்தி ஷர்மா, சினே ராணா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

    சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணியில் இளம் வீராங்கனைகள் அதிகம் இடம் பிடித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகுவதற்கு இரு அணிகளும் இந்த தொடரை சரியாக பயன்படுத்தி கொள்ள தீவிரம் காட்டும். வலுவான இந்திய அணியை சமாளிப்பது இலங்கை அணிக்கு கடும் சவாலாக இருக்கும் எனலாம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 26 இருபது ஓவர் போட்டியில் நேருக்கு நேர் மோதியிருக்கின்றன. இதில் 20-ல் இந்தியாவும், 5-ல் இலங்கையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 138 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்திய அணி 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    துபாய்:

    12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

    லீக் சுற்று முடிவில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    இந்நிலையில், முதல் அரையிறுதியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சமிகா 42 ரன்கள் எடுத்தார்.

    தொடர்ந்து ஆடிய இந்திய அணி 18 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    மற்றொரு அரையிறுதியில் வங்கதேசத்தை பாகிஸ்தான் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    • முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவரில் 225 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய இலங்கை அணி 186 ரன்னில் சுருண்டது.

    துபாய்:

    12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

    'பி' பிரி–வில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வங்கதேச அணி, இலங்கையை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.

    முதலில் பேட் செய்த வங்கதேச அணி 46.3 ஓவரில் 225 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டானது.

    தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 49.1 ஓவரில் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வங்களதேசம் 39 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    3 விக்கெட் வீழ்த்திய வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் இக்பால் ஹூசைன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    நாளை நடைபெறும் முதலாவது அரை இறுதியில் இந்தியா- இலங்கை மோதுகின்றன. மற்றொரு அரை இறுதியில் வங்கதேசம்-பாகிஸ்தான் அணிகள் சந்திக்கின்றன.

    • மீட்புப்பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையும் அனுப்பப்பட்டது.
    • 70-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களையும் இலங்கைக்கு அனுப்பி உள்ளது.

    இலங்கையில் பெய்த கனமழையால் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடருக்கு 465 பேர் பலியாகி உள்ளனர். 366 பேர் மாயமாகி இருக்கிறார்கள்.

    வெள்ளத்தால் பாதித்த இலங்கைக்கு இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பியது. மேலும், மீட்புப்பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையும் அனுப்பப்பட்டது. அவர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் மனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர சுகாதார உதவிகளை வழங்குவதற்காக இந்தியா ஒரு நடமாடும் மருத்துவமனையையும், 70-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களையும் இலங்கைக்கு அனுப்பி உள்ளது.

    இந்திய விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் ஆக்ராவிலிருந்து 73 மருத்துவப் பணியாளர்கள் மற்றும் உபகரணங்களுடன் புறப்பட்டு கொழும்பில் தரை இறங்கியது.

    இந்நிலையில், இலங்கை பேரிடர்- கண்டியில் இந்தியா அமைத்த தற்காலிக மருத்துவமனையில் இலங்கை மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுவரை 2,200க்கும் மேற்பட்டோருக்கு இந்திய மருத்துவ குழு சிகிச்சை அளித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • இலங்கையில் நிலச்சரிவு, கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது.
    • இந்தியா சார்பில் தொடர்ந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் சமீபத்தில் வங்க கடலில் உருவான டிட்வா புயலும் சேர்ந்து கொண்டது. இதனால், கனமழையுடன் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கனமழை எதிரொலியாக வீடுகள், டியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் என பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

    புயல் பாதிப்பு மற்றும் மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைவாசிகளுக்கு உதவிடும் வகையில், இந்தியா சார்பில் ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், இலங்கையில் நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 341 பேரை காணவில்லை. பலர் காயமடைந்துள்ளனர் என இலங்கை பேரிடர் மேலாண் மையம் தெரிவித்துள்ளது.

    • வெள்ளத்தால் பாதித்த இலங்கைக்கு இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பியது.
    • மீட்புப்பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையும் அனுப்பப்பட்டது.

    இலங்கையில் பெய்த கனமழையால் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடருக்கு 465 பேர் பலியாகி உள்ளனர். 366 பேர் மாயமாகி இருக்கிறார்கள்.

    வெள்ளத்தால் பாதித்த இலங்கைக்கு இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பியது. மேலும், மீட்புப்பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையும் அனுப்பப்பட்டது. அவர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் மனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர சுகாதார உதவிகளை வழங்குவதற்காக இந்தியா ஒரு நடமாடும் மருத்துவமனையையும், 70-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களையும் இலங்கைக்கு அனுப்பி உள்ளது.

    இந்திய விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் ஆக்ராவிலிருந்து 73 மருத்துவப் பணியாளர்கள் மற்றும் உபகரணங்களுடன் புறப்பட்டு கொழும்பில் தரை இறங்கியது.

    • டிட்வா புயல் காரணமாக நமது அண்டை நாடான இலங்கை பேரழிவைச் சந்தித்துள்ளது.
    • ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்பட அதிகாரிகள் குழுவை அமைத்திடத் தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    டிட்வா புயல் காரணமாக நமது அண்டை நாடான இலங்கை பேரழிவைச் சந்தித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தும் பல இடங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியும் இலங்கை மக்கள் அவதியுறுகின்றனர். இந்த இயற்கைச் சீற்றத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கை மக்களின் இப்பெருந்துயரில் தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் பங்கெடுக்கிறோம்.

    இலங்கையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளை மீட்க அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு, இன்று காலை 11:05 மணியளவில் முதற்கட்டமாக 177 பேர் (ஆண்கள் 113, பெண்கள் 60, குழந்தைகள் 4) தமிழ்நாட்டிற்குத் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர்.

    டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு ஒன்றிய அரசின் மூலம் உணவுப் பொருட்கள் மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றைத் தந்து, அவர்கள் மீண்டெழுந்திட உதவிக்கரம் நீட்டிடத் தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது.

    இதற்காக ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்பட அதிகாரிகள் குழுவை அமைத்திடத் தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் - இலங்கை அணிகள் தகுதி பெற்றன.
    • இலங்கை அணி 191. ஓவரில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்தது.

    முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் - இலங்கை அணிகள் தகுதி பெற்றன. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 191. ஓவரில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

    இதன்மூலம் முத்தரப்பு டி20 தொடரை பாகிஸ்தான் அணி வென்றது. 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது நவாஸ் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்.

    • 80 டன் நிவாரண பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் கொழும்புவில் தரையிறங்கி உள்ளது.
    • 'ஆபரேஷன் சாகர் பந்து' திட்டத்தின்கீழ் இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

    இலங்கையில் 'டிட்வா' புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதனால் காரணமாக பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது.

    கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாயமான 21 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக 20,500 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

    'டிட்வா' புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் 'ஆபரேஷன் சாகர் பந்து' மீட்பு நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. 80 டன் நிவாரண பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் கொழும்புவில் தரையிறங்கி உள்ளது.

    இந்த நிலையில், டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 'ஆபரேஷன் சாகர் பந்து' திட்டத்தின்கீழ் இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

    இலங்கையில் மீட்புப் பணிகளுக்கு உதவ இந்தியாவின் தலா இரு Mi-17, Chetak ரக ஹெலிகாப்டர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

    • டிட்வா புயலால் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் விமானங்கள் ரத்து.
    • உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கை செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னையில் இருந்து ஜாப்னா, கொழும்பு, இலங்கையில் இருந்து சென்னை வரும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    டிட்வா புயலால் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் இலங்கை செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும்,காற்றின் வேகம், மழையின் தீவிரத்தை பொறுத்து உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    ×