என் மலர்
நீங்கள் தேடியது "ஜூனியர் ஆசிய கோப்பை"
- முதல் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு வங்கதேசம் தகுதி பெற்றது
- 2 ஆவது அரையிறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
லீக் சுற்றுகள் முடிவில் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை , வங்கதேசம் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.
முதல் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு வங்கதேசம் தகுதி பெற்றது. 2 ஆவது அரையிறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 49.1 ஓவர்கள் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக ரிசான் ஹொசைன் 47 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் யுதாஜித் குஹா, சேத்தன் சர்மா, ஹர்திக் ராஜ் ஆகியோர் தலா 2விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 199 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 139 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. இதன்மூலம் 2 ஆவது முறையாக ஜூனியர் ஆசிய கோப்பையை வங்கதேசம் கைப்பற்றியது.
கடந்த ஆண்டு ஜூனியர் உலக கோப்பையை கைப்பற்றிய வங்கதேச அணி தொடர்ச்சியாக இந்தாண்டும் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.
- டாஸ் வென்று முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.
11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற யு.ஏ.இ. பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 44 ஓவரில் 137 ரன்களுக்கு சுருண்டு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 138 என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 16.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.
இப்போட்டியில் ஐக்கிய அரபு அமீரக வீரர் அடித்த பந்தை பவுண்டை லைனில் தடுத்த இந்திய வீரர்கள் விக்கெட் கீப்பர் ஹர்வன்ஷ் சிங்கிடம் பந்தை வீசினர். அந்த பந்தை பிடித்த ஹர்வன்ஷ் சிங் திரும்பி பார்க்காமலேயே எம்.எஸ்.டோனியை போல ஸ்டம்பை தாக்கி ரன் அவுட் செய்ய முயற்சித்தார்.
ஆனால் அதற்கு ஐக்கிய அரபு அமீரக வீரர் கிரீசுக்குள் வந்துவிட்டதால் ரன் அவுட் இல்லாமல் போனது. ஆனால் டோனியை போல நோ-லுக் ரன் அவுட்டை முயற்சித்த இளம் விக்கெட் கீப்பர் ஹர்வன்ஷ் சிங்கை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
Just Indian wicketkeeper things! ?Harvansh Singh channels his inner Thala magic on the field ✨#SonySportsNetwork #AsiaCup #NextGenBlue #NewHomeOfAsiaCup #UAEvIND pic.twitter.com/hmnntCqzXW
— Sony Sports Network (@SonySportsNetwk) December 4, 2024
- அரையிறுதி போட்டியில் மலேசியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- மற்றொரு அரையிறுதி போட்டியில் ஜப்பானை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் இந்தியா (12 புள்ளி) முதலிடமும், ஜப்பான் (9 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.
'பி' பிரிவில் பாகிஸ்தான் (12 புள்ளி) முதலிடத்தையும், மலேசியா (7 புள்ளி) 2-வது இடத்தையும் கைப்பற்றி அரையிறுதியை எட்டின.
அரையிறுதி போட்டியில் மலேசியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதேபோல் மற்றொரு அரையிறுதி போட்டியில் ஜப்பானை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் 5-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 5 ஆவது முறையாக ஜூனியர் ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
- இந்தியா தரப்பில் அதிகபட்சமாக முகமது அமான் 122 ரன்கள் எடுத்தார்.
- 50 ஓவர்கள் வரை முழுமையாக பேட்டிங் செய்த ஜப்பான் 8 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஷார்ஜா:
8 அணிகள் இடையிலான 11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் ஜப்பான் அணியுடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜப்பான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக முகமது அமான் 122 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 340 என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய ஜப்பான் அணியினர், இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 50 ஓவர்கள் வரை முழுமையாக பேட்டிங் செய்த ஜப்பான் 8 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக இந்தியா 211 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சேத்தன் சர்மா, ஹார்டிக் ராஜ், கார்த்திகேயா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 4ம் தேதி யு.ஏ.இ அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும். இந்திய அணி தோல்வி கண்டால் யு.ஏ.இ அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
- முதலில் ஆடிய நேபாளம் 52 ரன்களில் ஆல் அவுட்டானது.
- இந்தியா சார்பில் ராஜ் லிம்பானி 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
துபாய்:
10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன.
ஏ பிரிவில் இந்திய அணி 2 ஆட்டங்களில் விளையாடி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றியும், பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியும் கண்டுள்ளது.
இந்நிலையில், இந்திய அணி 3-வது லீக் ஆட்டத்தில் இன்று நேபாள அணியுடன் மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமால் 22.1 ஓவரில் 52 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் ஒரு பேட்ஸ்மேன்கூட இரட்டை இலக்கத்தை தொடவில்லை.
இந்தியா சார்பில் ராஜ் லிம்பானி 7 விக்கெட்டும், ஆராத்யா சுக்லா 2 விக்கெட்டும், அர்ஷின் குல்கர்னி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
53 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 7.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. ஆதர்ஷ் சிங் 13 ரன்னும், அர்ஷின் குல்கர்னி 43 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 7 விக்கெட் வீழ்த்திய ராஜ் லிம்பானி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
- பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஜீஷன் 4 விக்கெட்டுகளை அள்ளினார்.
- அசன் அவைஸ் 105 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான 10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. "ஏ" பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் "பி" பிரிவில், இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்த நிலையில் நேற்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் மல்லுக்கட்டின. "டாஸ்" வென்ற பாகிஸ்தான் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 259 ரன்கள் எடுத்தது. ஆதர்ஷ் சிங் (62 ரன்), கேப்டன் உதய் சாஹரன் (60 ரன்), சச்சின் தாஸ் (58 ரன்) அரைசதம் அடித்தனர். உதிரியாக 17 வைடு உள்பட 20 ரன்கள் கிடைத்தது. வேகப்பந்து வீச்சாளர் முகமது ஜீஷன் 4 விக்கெட்டுகளை அள்ளினார்.
அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் சமைல் ஹூசைன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடி இந்திய பவுலர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். மற்றொரு தொடக்க வீரர் ஷசாயிப் கான் 63 ரன்கள் திரட்டினார்.
3-வது விக்கெட்டுக்கு அசன் அவைசும், கேப்டன் சாத் பெய்க்கும் கூட்டணி போட்டு அணியை சிக்கலின்றி இலக்கை நோக்கி பயணிக்க வைத்தனர். 7 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.
பாகிஸ்தான் 47 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 263 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அசன் அவைஸ் 105 ரன்களுடனும் (130 பந்து, 10 பவுண்டரி), கேப்டன் சாத் பெய்க் 68 ரன்களுடனும் (51 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். தொடர்ந்து 2-வது வெற்றியை பெற்ற பாகிஸ்தான் அரைஇறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.
2-வது லீக்கில் ஆடிய இந்திய அணிக்கு இது முதலாவது தோல்வியாகும். இந்தியா தனது கடைசி லீக்கில் நேபாளத்தை நாளை (செவ்வாய்க்கிழமை) சந்திக்கிறது. அரைஇறுதிக்கு தகுதி பெற இந்த ஆட்டத்தில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 73 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை சாய்த்தது. இதில் ஜம்ஷித் ஜட்ரனின் சதத்தின் (106 ரன்) உதவியுடன் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 262 ரன் இலக்கை நோக்கி ஆடிய நேபாளம் 40.1 ஓவர்களில் 188 ரன்னில் சுருண்டது. அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க ஆப்கானிஸ்தான் தனது கடைசி லீக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியாக வேண்டும்.