என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹாக்கி"

    • பீகாரில் நடைபெறும் ஆசிய கோப்பையை ஏற்கனவே பாகிஸ்தான் அணி புறக்கணித்திருந்தது.
    • பாகிஸ்தானுக்கு மாற்று அணி விரைவில் அறிவிக்கப்படும் என FIH தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் நவம்பர்- டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் விளையாட பாகிஸ்தான் அணி தகுதி பெற்றிருந்தது. பாகிஸ்தான் "பி" பிரிவில் இடம் பிடித்துள்ளது. இது பிரிவில் இந்தியா, சிலி, சுவிட்சர்லாந்த அணிகள் இடம் பிடித்துள்ளன.

    இந்த நிலையில் இந்தியாவின் தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் ஜூனியர் உலக கோப்பையில் விளையாடவில்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச ஹாக்கி பெடரேசனுக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தானுக்குப் பதிலாக விரைவில் புதிய அணி அறிவிக்கப்படும் என சர்வதேச ஹாக்கி பெடரேசன் தெரிவித்துள்ளது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமடைந்துள்ளது.

    பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாட மறுத்தது. இதனால் இந்திய அணிகள் விளையாடும் போட்டிகள் துபாய்க்கு மாற்றப்பட்டது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் உலக கோப்பையில் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடைபெற்று வருகிறது.

    பாகிஸ்தான் ஹாக்கி அணி இதற்கு முன்னதாக பீகாரில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் இருந்து விலகியிருந்தது. தற்போது 2ஆவது முறையாக விலகியுள்ளது.

    • லெஜெண்ட்ஸ் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் உடன் இந்திய அணி வீரர்கள் விளையாட மறுத்தனர்.
    • ஆசிய கோப்பையில் இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர்

    பஹல்காம் தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் இந்தியா பாகிஸ்தான் உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. இதனால் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் உடன் இந்திய அணி வீரர்கள் விளையாட மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனை தொடர்ந்து ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி பேசுபொருளானது.

    இதனையடுத்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் அமைச்சருமான மோசின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க இந்திய அணி விரும்பாததால் இப்போது வரை ஆசிய கோப்பை இந்திய அணியிடம் வழங்கப்படவில்லை.

    இதனையடுத்து நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டிலும் பாகிஸ்தான் அணி வீராங்கனைகளுடன் இந்திய அணி வீராங்கனைகள் கைகுலுக்க மறுத்தனர்.

    இந்நிலையில், ஹாக்கி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் ஹைபை கொடுத்துக்கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    மலேசியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் 21 வயதிற்குட்பட்ட சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டி 3-3 என்ற கணக்கில் டிரா ஆனது.

    • ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது.
    • சூப்பர் 4 சுற்றில் மலேசியாவை இந்திய அணி 4-1 என வீழ்த்தியது.

    பாட்னா:

    12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதின.

    லீக் சுற்று முடிவில் இந்தியா 9 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து சூப்பர் 4 சுற்றை எட்டியது.

    நேற்று நடந்த போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என சமனில் முடிந்தது.

    இந்நிலையில், சூப்பர் 4 சுற்றில் இன்று நடந்த போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.

    மன்தீப் சிங், சுக்ஜீத் சிங், ஷிலானந்த் லக்ரா மற்றும் விவேக் சாகர் பிரசாத் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

    • 12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பா் 7 வரை பீகாரில் நடைபெறுகிறது.
    • ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.

    பீகார், தமிழ்நாட்டில் நடைபெறும் ஆசிய,ஜூனியர் உலக கோப்பையில் பாகிஸ்தான் ஹாக்கி அணி பங்கேற்கும் விசாவுக்கு விண்ணப்பித்து இருப்பதாக ஆக்கி இந்தியா உறுதிப்படுத்தியது

    ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஆகஸ்ட் 27-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை பீகார் மாநிலம் ராஜ்கிரியில் நடக்கிறது. ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறுகிறது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தப் போட்டிகளில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இந்த போட்டிகளுக்கு அணிகளை அனுப்புவது இல்லை என்று பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் இது தொடர்பாக சர்வதேச மற்றும் ஆசிய ஹாக்கி கூட்டமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆக்கி சம்மேளனம் கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப் படுகிறது.

    இந்த நிலையில் ஆசிய கோப்பை மற்றும் ஜூனியர் உலக கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் என்று ஹாக்கி இந்தியா உறுதிப்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக ஹாக்கி இந்தியா பொருளாளரும், தமிழ்நாடு ஆக்கி அமைப்பின் தலைவருமான சேகர் மனோகர் கூறியதாவது:-

    பாகிஸ்தான் சீனியர் மற்றும் ஜூனியர் அணிகள் நிச்சயமாக இந்தியா வரும். அவர்கள் ஏற்கனவே விசா விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். சீனியர் அணி 18 வீரர்கள் மற்றும் 7 துணை ஊழியர்களை கொண்ட குழுவுடன் விண்ணப்பித்துள்ளது.

    உலக கோப்பைக்கான இந்திய ஜூனியர் அணியை தயார்படுத்துவதற்கான பயிற்சி முகாம் அக்டோபர் முதல் வாரத்தில் சென்னையில் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது.
    • சென்னை, மதுரை ஆகிய 2 இடங்களில் நவம்பர் 28-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது.

    உலக கோப்பை ஜூனியர் (21 வயதுக்குட்பட்டோர்) ஹாக்கிப் போட்டி 1979-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    இதுவரை 13 போட்டித் தொடர் நடைபெற்றுள்ளது. ஜெர்மனி அதிகபட்சமாக 7 தடவை உலக கோப்பை ஜூனியர் ஆக்கி பட்டத்தை கைப்பற்றி உள்ளது.

    இந்தியா (2001, 2016), அர்ஜென்டினா தலா 2 முறையும், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் தலா 1 தடவையும் சாம்பியன் பட்டம் பெற்றன. கடைசி யாக இந்த போட்டி 2023-ம் ஆண்டு மலேசியா தலைநகர் கோலா லம்பூரில் நடை பெற்றது. இதில் ஜெர்மனி வெற்றி பெற்றது.

    14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது.

    தமிழ்நாட்டில் முதல் முறையாக இந்தப் போட்டியை நடத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி இந்தியாவில் 4-வது முறையாக நடைபெறுகிறது.

    இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு டெல்லியிலும், 2016-ம் ஆண்டு லக்னோவிலும், 2021-ல் புவனேஷ்வரிலும் நடைபெற்றது.

    14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரை ஆகிய 2 இடங்களில் நவம்பர் 28-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது.

    இதில் போட்டியை நடத்தும் இந்தியா, ஜெர்மனி, அர்ஜென்டினா, கனடா, பெல்ஜியம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, எகிப்து உள்பட 24 நாடுகள் பங்கேற்கின்றன. அரை இறுதி மற்றும் இறுதி போட்டி சென்னையில் நடக்கிறது.

    சென்னை, மதுரையில் நடைபெறும் உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிக்கான இலச்சினை (லோகோ) இன்று வெளியிடப்பட்டது. சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதை வெளியிட்டார்.

    நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-

    ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரையில் நடத்தப்படுகிறது. மதுரையில் இதற்கான உள்கட்டமைப்பு மேற் கொள்ளப்பட்டுள்ளது. உலகத் தரத்திற்கு இணையாக அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மதுரையில் இந்த போட்டியை நடத்துவதன் மூலம் தென் மாவட்ட மக்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும்.

    24 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியை சிறப்பாக நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.65 கோடி ஒதுக்கி உள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதோடு ஜூனியர் உலக கோப்பை போட்டியை நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் பரிமாற்றப்பட்டது. இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், ஹாக்கி இந்தியா அமைப்பும் கையெழுத்திட்டன.

    நிகழ்ச்சியில் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, ஹாக்கி இந்தியா பொதுச் செயலாளர் போலாநாத் சிங், பொருளாளர் சேகர் மனோகரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • ரூ.82.14 கோடி மதிப்பில் 132 புதிய திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
    • ரூ.29.99 கோடி மதிப்பிலான 54 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.

    அங்கு அவருக்கு, கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் நா. கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் மற்றும் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் திரண்டு வந்து வரவேற்றனர்.

    அதனை தொடர்ந்து உதயநிதி காரில் புறப்பட்டு கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு வந்தடைந்தார்.

    அங்கு அவரை கலெக்டர் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். அதனை தொடர்ந்து மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.9.67 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் புல்வெளி தளத்துடன் அமைய உள்ள ஹாக்கி மைதானத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    பின்னர் அங்கு நடந்து வரும் விழாவில் ரூ.82.14 கோடி மதிப்பில் 132 புதிய திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, ரூ.29.99 கோடி மதிப்பிலான 54 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    தொடர்ந்து ரூ.239.41 கோடி மதிப்பில் 25 ஆயிரத்து 24 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    • கலைஞர் பெவிலியனில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.
    • கருணாநிதி பெயர் வைத்தது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்.

    சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 12 ம் தேதி வரை ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.

    இந்நிலையில், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தின் ஒரு பகுதிக்கு கலைஞர் நூற்றாண்டு பெவிலியன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    கலைஞர் பெவிலியனில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.

    பெவிலியனுக்கு கருணாநிதி பெயர் வைத்தது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.300, அதிகபட்ச விலை ரூ.400க்கும் டிக்கெட் விற்பனையாக உள்ளது.

    • மாநில ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற சிவகங்கை பெண்கள் அணிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது.
    • விருதும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.

    சிவகங்கை

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான பள்ளிகளுக்கு இடையில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சிவகங்கை மாவட்ட ஹாக்கி பெண்கள் அணி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் மற்றும் ரூ.9 லட்சம் ரொக்கப்பரிசு வென்றது. இந்த நிலையில் சிவகங்கையில் உள்ள பள்ளியில் இந்த அணியின் 18 மாணவிகளுக்கும் மற்றும் முரளி, கருணாகரன், மோகன் ஆகிய பயிற்சியாளர்களுக்கும் பாராட்டு விழா நடந்தது. பள்ளி செயலர் சங்கரன் தலைமை தாங்கினார். சிவகங்கை மாவட்ட ஆட்சிக் கழக செயலாளர் தியாக பூமி அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினர்களாக சிவகங்கை இளையமன்னர் மகேஸ்துரை, முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், கேப்டன் சரவணன், பகீரத நாச்சியப்பன், நல்லாசிரியர் கண்ணப்பன், நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணா, நகர்மன்ற துணைத் தலைவர் கார்கண்ணன், முன்னாள் உடற்கல்வி இயக்குனர்கள் அழகுமீனாள் தேவதாஸ், சின்னையா அம்பலம், சிவகங்கை தமிழ் சங்க நிறுவனர் ஜவஹர் கிருஷ்ணன், செயலாளர் ராமச்சந்திரன், கலை இலக்கிய பெருமன்ற தலைவர் சுந்தர மாணிக்கம், செயலாளர் யுவராஜா, சிவகங்கைச் சீமை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் கலைக்கண்ணன், சிவகங்கை அரிமா சங்க தலைவர் முத்துக்குமார், செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் மீனாட்சி சுந்தரம், சிவகங்கை சுப்ரீம் அரிமா சங்க முன்னாள் தலைவர் முருகன், வெங்கடேஸ்வரா ராதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் மாணவிகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் விருதும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.

    • இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
    • லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    சென்னை:

    சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது. இதில், இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இறுதிப்போட்டி ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெறும்.

    இப்போட்டியில் பங்கேற்கும் அணிகள் சென்னைக்கு வரத் தொடங்கினர். அவர்களுக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த ஜப்பான் மற்றும் தென்கொரிய நாட்டு அணியை சார்ந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறுகிறது.

    சென்னை:

    ஏழாவது ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை போட்டி நாளை முதல் வருகிற 12 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் தென் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன.

    இந்த போட்டியில் வழங்கப்படவுள்ள கோப்பை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வந்தது. இதனையடுத்து தலைமைசெயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோப்பையை, சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் முகமது தயப் இக்ராம் வழங்கினார்.

    சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறுவதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அரசு பள்ளி மாணவர்கள் நேரடியாக இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

    ஐபிஎல் போட்டிகளை போல தமிழகம் முழுவதும் 40 இடங்களில் ஃபேன் பார்க்ஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

    • லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
    • முன்னதாக இன்று மாலை 4 மணிக்கு நடை பெறும் முதல் ஆட்டத்தில் தென்கொரியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன.

    சென்னை:

    ஆக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக் கிழமை) தொடங்குகிறது. வருகிற 12-ந் தேதி வரை ஹாக்கி திருவிழா நடக்கிறது.

    இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, ஜப்பான் சீனா, ஆகிய 6 நாடுகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் சீனாவை எதிர் கொள்கிறது. இரவு 8.30 மணிக்கு இந்தப் போட்டி நடக்கிறது.

    ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இருக்கிறது. சொந்த மண்ணில் விளையாடுவதால் கூடுதல் பலத்துடன் திகழ்கிறது. சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்திய அணி பலம் வாய்ந்தது. இரு அணிகள் மோதிய 7 போட்டியில் இந்தியா 6-ல் வெற்றி பெற்றது.

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை 4-வது முறை யாக வெல்லும் வேட்கையில் இந்தியா உள்ளது. 2011, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்று இருந்தது.

    முன்னதாக இன்று மாலை 4 மணிக்கு நடை பெறும் முதல் ஆட்டத்தில் தென்கொரியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான தென் கொரியா வெற்றி பெற அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

    மாலை 6.15 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் 3 முறை சாம் பியனான பாகிஸ்தான்-மலேசியா அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் தொடக்க ஆட்டத்திலேயே வெற்றி பெற போராடும். இதனால் இந்தப் போட்டி விறு விறுப்பாக இருக்கும்.

    16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சர்வதேச ஹாக்கி போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் இந்தப் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    கடைசியாக 2007-ம் ஆண்டு சென்னையில் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாலை 4 மணிக்கு தென்கொரியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆட்டம் தொடங்கியது.
    • ஆட்டத்தில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி தலா ஒரு கோல் அடித்தது.

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

    இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன.

    தொடக்க நாளான நேற்று மூன்று ஆட்டங்கள் நடந்தது. தென்கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும், மலேசியா 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தானையும் தோற்கடித்தன.

    இரவு 8.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் இந்தியா-சீனா அணிகள் மோதின. இதில் இந்திய அணி கோல் மழை பொழிந்தது. 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை பந்தாடி வெற்றியுடன் இந்தியா கணக்கை தொடங்கியது.

    இந்தியா தரப்பில் கேப்டன் ஹர்மன் பிரீத் சிங், வருண்குமார் தலா இரண்டு கோலும், சுக்ஜீத் சிங், ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங் தலா ஒரு கோலும் அடித்தனர்.

    தொடர்ந்து, இன்று மூன்று லீக் ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு தென்கொரியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆட்டம் தொடங்கியது.

    இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி தலா ஒரு கோல் அடித்தது.

    இதனை தொடர்ந்து, இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமம் ஆனது.

    ×