search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asian Champions Cup Hockey"

    • இந்தியா 4-3 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.
    • இதன்மூலம் இந்தியா 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    புதுடெல்லி:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இந்நிலையில், ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ஆசிய சாம்பியன்ஷிப்பில் அற்புதமான வெற்றியைப் பெற்ற ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள்! இது இந்தியாவின் 4-வது வெற்றியாகும். இது நமது வீரர்களின் அயராத அர்ப்பணிப்பு, கடுமையான பயிற்சி மற்றும் தளராத உறுதியை வெளிப்படுத்துகிறது. அவர்களின் அசாதாரண செயல்பாடு நாடு முழுவதும் மகத்தான பெருமை கொள்ள வைத்துள்ளது. எங்கள் வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

    • முதல் பாதியில் மலேசியா 3-1 என முன்னிலை வகித்தது.
    • இரண்டாவது பாதியில் இந்தியா 3 கோல்களை அடித்து அசத்தியது.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

    இந்நிலையில், இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கிய இறுதிப் போட்டியில் இந்திய அணி மலேசியாவுடன் மோதியது.

    ஆட்டத்தின் முதல் பாதியில் மலேசியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் 3 கோல் அடித்து அசத்தினர்.

    இறுதியில், இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    • ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை 4-வது முறையாக வெல்லும் வேட்கையில் இந்தியா உள்ளது.
    • ஏற்கனவே 2011, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன.

    லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா முதல் இடத்தையும், மலேசியா 2-வது இடத்தையும் பிடித்தன. தென் கொரியா 3-வது இடத்தையும், ஜப்பான் 4-வது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

    நேற்று மாலை 6 மணிக்கு நடந்த முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் தென் கொரியாவை மலேசியா வீழ்த்தியது. இரவு 8.30 மணிக்கு நடந்த 2-வது அரையிறுதி போட்டியில் ஜப்பானை ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி வீழ்த்தியது.

    இந்நிலையில், இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதுகின்றன. இதில் மலேசியாவை வீழ்த்தி

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை 4-வது முறையாக வெல்லும் வேட்கையில் இந்தியா உள்ளது.

    இறுதிப்போட்டியில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர் பங்கேற்க உள்ளார் என்றும், அனுராக் தாகூர் இறுதிப் போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிக்க உள்ளார் என்றும் தகவல் வெளியானது.

    ஏற்கனவே 2011, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
    • இரண்டாவது பாதியில் இந்தியா 5 கோல்களை அடித்து அசத்தியது.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானுடன் மோதியது.

    ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

    இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் 5 கோல் அடித்து அசத்தினர்.

    இறுதியில், இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் இந்தியா மலேசியாவை எதிர்கொள்கிறது.

    • ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி எழும்பூரில் நடைபெற்று வருகிறது.
    • இத்தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று நடைபெறுகின்றன.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் நேற்று முன்தினத்துடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.

    இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த மோசமான தோல்வியால் பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

    லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா முதல் இடத்தையும், மலேசியா 2-வது இடத்தையும் பிடித்தன. தென் கொரியா 3-வது இடத்தையும், ஜப்பான் 4-வது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

    இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியில் மலேசியா, நடப்பு சாம்பியன் தென் கொரியா அணிகள் மோதுகின்றன.

    இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதுகின்றன. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.

    முன்னதாக, மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 5-வது இடத்துக்கான போட்டியில் பாகிஸ்தான், சீனா அணிகள் மோதுகின்றன.

    • இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
    • அரையிறுதியில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதியது. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா 2 கோல் அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் இந்திய வீரர்கள் 2 கோல் அடித்து அசத்தினர்.

    இறுதியில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. அரையிறுதியில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில் ரசிகர்களின் ஆரவாரம் சிறப்பாக விளையாட ஊக்கமிளிக்கிறது என தமிழக ஹாக்கி வீரர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தொடர்ச்சியான வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரசிகர்களின் ஆதரவும் அதிகமாக உள்ளது. விளையாடும் போது கார்த்திக் கார்த்திக் என்று சொல்லும் போது உத்வேகமாக இருந்தது. அடுத்தடுத்து இன்னும் நிறைய விளையாட வேண்டும் என்று சிந்திக்க வைக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதியில் மலேசியா-நடப்பு சாம்பியன் தென் கொரியா அணிகள் மோதுகின்றன.
    • ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    6 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்ததன. நேற்று நடந்த ஒரு போட்டியில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த மோசமான தோல்வியால் பாகிஸ்தான் அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

    லீக் முடிவில் இந்தியா 4 வெற்றி, 1 டிராவுடன் 13 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், மலேசியா 4 வெற்றி , 1 தோல்வியுடன் 12 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்ததன. இந்த இரு அணிகளும் ஏற்கெனவே அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன.

    தென் கொரியா, ஜப்பான், பாகிஸ்தான் ஆகிய 3 அணிகளும் 1 வெற்றி, 2 டிரா, 2 தோல்வியுடன் தலா 5 புள்ளிகள் பெற்றன. கோல்கள் அடிப்படையில் தென் கொரியா 3-வது இடத்தையும், ஜப்பான் 4-வது இடத்தையும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின. தென்கொரியாவின் கோல் வித்தியாசம்-1 ஆகவும், ஜப்பானின் கோல் வித்தியாசம்-2 ஆகவும் இருந்தது. பாகிஸ்தான் அணியின் கோல் வித்தியாசம்-5 ஆகும்.

    பாகிஸ்தான் 5-வது இடத்தை பிடித்து வாய்ப்பை இழந்தது. சீனா 1 டிரா, 4 தோல்வியுடன் 1 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தை பிடித்தது.

    இன்று ஓய்வு நாளாகும். அரைஇறுதி போட்டிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதியில் மலேசியா-நடப்பு சாம்பியன் தென் கொரியா அணிகள் மோதுகின்றன. மலேசிய அணி 'லீக்' ஆட்டத்தில் தென் கொரியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் விளையாடும்.

    இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    இந்திய அணி இந்த தொடரில் எல்லா அணிகளையும் வீழ்த்தி இருந்தது. சீனாவை 7-2 என்ற கோல் கணக்கிலும், மலேசியாவை 5-0 என்ற கணக்கிலும், தென்கொரியாவை 3-2 என்ற கணக்கிலும், பாகிஸ் தான் 4-0 என்ற கணக்கி லும் வென்று இருந்தது. ஜப்பானுடன் 1-1 என்ற கணக்கில் 'டிரா' செய்து இருந்தது. இதனால் இந்திய அணி மிகவும் கவ னத்துடன் அரைஇறுதியில் விளையாட வேண்டும்.

    இந்த தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரராக இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் உள்ளார். அவர் 7 கோல்களை அடித்து உள்ளார். இந்த 7 கோல் களையும் அவர் பெனால்டி கார்னர் மூலமே அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் மோதிய 3 போட்டியில் இந்தியா 2-ல் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் 'டிரா' ஆனது.

    முன்னதாக மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 5-வது இடத்துக்கான போட்டியில் பாகிஸ்தான்-சீனா அணிகள் மோதுகின்றன.

    • முதல் பாதியில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.
    • இரண்டாவது பாதியிலும் இந்தியா கோல் மழை பொழிந்தது.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதியது.

    ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா 2 கோல் அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் இந்திய வீரர்கள் 2 கோல் அடித்து அசத்தினர்.

    இறுதியில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

    இதன் மூலம் 13 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் தொடரில் இருந்து வெளியேறியது. அரையிறுதியில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.

    • முதல் பாதியில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
    • இரண்டாவது பாதியிலும் இந்தியா கோல் மழை பொழிந்து அசத்தியது.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி மலேசியாவுடன் மோதியது.

    ஆட்டத்தின் முதல் பாதியில் 18-வது நிமிடத்தில் இந்தியா ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் இந்திய வீரர்கள் 4 கோல் அடித்து அசத்தினர்.

    இறுதியில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.

    • நாளை இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-மலேசியா அணிகள் மோதுகின்றன.
    • மலேசியா வலுவாக இருப்பதால் அந்த அணியை வீழ்த்துவது இந்தியாவுக்கு கடும் சவாலாக இருக்கும்.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பி யன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் நடப்பு சாம்பியன் தென் கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, ஜப்பான்,சீனா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ரவுண்டுக்கு ராபின் முறையில் ஒரு தடவை மோதும். 'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    2-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இந்திய அணி ஜப்பானை எதிர் கொண்டது. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.

    இதே போல் பாகிஸ் தான்- தென்கொரியா அணிகள் மோதிய ஆட்டமும் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. இன்னொரு ஆட்டத்தில் மலேசியா 5-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது.

    இன்று ஓய்வு நாளாகும். நாளை இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-மலேசியா அணிகள் மோதுகின்றன.

    ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி 1 வெற்றி, 1 டிராவுடன் 4 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. பலவீன மான ஜப்பான் அணியை நேற்று வீழ்த்த முடியாமல் போனது ஏமாற்றமே. மலேசியா வலுவாக இருப்பதால் அந்த அணியை வீழ்த்துவது இந்தியாவுக்கு கடும் சவாலாக இருக்கும்.

    மலேசிய அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருந்தது. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி கரமாக வீழ்த்தி இருந்தது. இதேபோல் இந்தியாவுக்கும் அதிர்ச்சி கொடுத்து ஹாட்ரிக் வெற்றியை பெறும் ஆர்வத்தில் மலேசியா உள்ளது.

    • முதல் பாதியில் ஜப்பான் 1-0 என முன்னிலை பெற்றது.
    • இரண்டாவது பாதியில் இந்தியா ஒரு கோல் அடித்து சமனிலை வகித்தது.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    முதல் போட்டியில் மலேசியா சீனாவை 5-1 என வீழ்த்தியது. கொரியா, பாகிஸ்தான் இடையிலான 2வது போட்டி சமனில் முடிந்தது.

    இந்நிலையில், இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானுடன் மோதியது.

    ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் ஜப்பான் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் 43வது நிமிடத்தில் இந்திய அணி ஒரு கோல் அடித்தது. இறுதியில், 1-1 என போட்டி சமனில் முடிந்தது.

    • 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை பந்தாடி வெற்றியுடன் இந்தியா கணக்கை தொடங்கியது.
    • இந்தியாவின் அதிரடி வெற்றியால் போட்டியை காண வந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன.

    தொடக்க நாளான நேற்று மூன்று ஆட்டங்கள் நடந்தது. தென்கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும், மலேசியா 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தானையும் தோற்கடித்தன. இரவு 8.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் இந்தியா-சீனா அணிகள் மோதின.

    இதில் இந்திய அணி கோல் மழை பொழிந்தது. 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை பந்தாடி வெற்றியுடன் இந்தியா கணக்கை தொடங்கியது. இந்தியா தரப்பில் கேப்டன் ஹர்மன் பிரீத் சிங், வருண்குமார் தலா இரண்டு கோலும், சுக்ஜீத் சிங், ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங் தலா ஒரு கோலும் அடித்தனர். இந்தியாவின் அதிரடி வெற்றியால் போட்டியை காண வந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

    இன்றும் மூன்று லீக் ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் தென்கொரியா-பாகிஸ்தான் அணிகளும், 6.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மலேசியா-சீனா அணிகளும் மோதுகின்றன. இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் இந்தியா, ஜப்பானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் இந்தியா ஆதிக்கம் தொடர்ந்து 2-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க ஆட்டத்தில் அதிரடி வெற்றியை ருசித்துள்ள இந்தியா, நம்பிக்கையுடன் களம் இறங்கும்.

    ஜப்பான், தனது தொடக்க ஆட்டத்தில் தோற்றதால் (தென்கொரியாவிடம்) வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்குகிறது.

    ×