என் மலர்

  நீங்கள் தேடியது "Asian Champions Trophy"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் ஜப்பானை 3-2 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது இந்தியா. பைனலில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
  ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் அரையிறுதி ஒன்றில் இந்தியா - ஜப்பான் அணிகள் மோதின. ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் இந்தியாவின் குர்ஜந்த் சிங் முதல் கோலை பதிவு செய்தார். 22-வது நிமிடத்தில் ஜப்பான் பதில் கோல் போட்டது. இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலைப் பெற்றது.

  44-வது நிமிடத்தில் சின்லென்சானா கோல் அடிக்க இந்தியா 2-1 என முன்னிலைப் பெற்றது. 55-வது நிமிடத்தில் இந்தியாவின் தில்ப்ரீத் சிங் ஒரு கோல் அடிக்க இந்தியா 3-1 என முன்னிலைப் பெற்றது. 56-வது நிமிடத்தில் ஜப்பான் ஒரு கோல் அடிக்க ஸ்கோர் 3-2 என ஆனது.

  கடைசி நான்கு நிமிடத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் இந்தியா 3-2 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் உடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் கடைசி லீக் ஆட்டத்தில் ஓமனை வீழ்த்திய ஜப்பான் அணி, அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியாவை எதிர்கொள்கிறது. #AsianChampionsTrophy2018
  ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது. இதில் ஜப்பான் அணி தனது கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் உள்ளூர் அணியான ஓமனை எதிர்கொண்டது. இதில் ஜப்பான் 5 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

  இந்த போட்டியுடன் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. இந்த சுற்று முடிவடைவதற்கு முன்னதாகவே புள்ளிகள் அடிப்படையில் இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அதன்பின்னர் லீக் சுற்று முடிந்ததும் அரையிறுதியில் விளையாடும் அணிகள் முடிவு செய்யப்பட்டன.  அதன்படி நாளை நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஜப்பான் அணி, நடப்பு சாம்பியனான இந்தியாவை எதிர்கொள்கிறது. முதல் அரையிறுதியில் மலேசியா-பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன. #AsianChampionsTrophy2018 #HockeyIndia #IndianHockey
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் ஜப்பானை 9-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெற்றது. #AsianHockey #India #Japan
  5-வதுஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது.

  இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஓமனை 11-0 என்ற கோல் கணக்கிலும், 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது.

  நேற்று ஜப்பானுடன் இந்தியா மோதியது. இதில் தொடக்கம் முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தி கோல் மழை பொழிந்தது. ஆட்ட நேர முடிவில் இந்தியா 9-0 என்ற கோல் கணக்கில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது. மன்தீப்சிங், ஹர்மன்பிரீத் சிங், லலித் உபத்யாவ் தலா 2 கோலும், குருஜந்த் சிங், கோஜத்சிங், அக்‌ஷய் தீப் தலா 1 கோல் அடித்தனர்.

  அடுத்து இந்திய அணி நடப்பு சாம்பியனான மலேசியாவுடன் நாளை பலப்பரீட்சை நடத்துகிறது. #AsianHockey #India #Japan
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. #AsianHockey
  மஸ்கட்:

  5-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஆண்கள் ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது.
   
  முதல் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 11-0 என்ற கோல் கணக்கில் ஓமனை ஊதி தள்ளியது. இந்திய அணி தரப்பில் தில்பிரீத்சிங் 3 கோலும், லலித் உபாத்யாய், ஹர்மன்பிரீத் சிங், நீலகண்ட ஷர்மா, கேப்டன் மன்தீப்சிங், குர்ஜந்த் சிங், ஆகாஷ்தீப் சிங், வருண்குமார், சிங்லென்சனா ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

  இந்நிலையில், நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.

  ஆட்டத்தின் தொடக்கத்தில் பாகிஸ்தான் அணி வீரர் இர்பான் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப் படுத்தினார்.  இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணியை சேர்ந்த மன்பிரித் பவார் 24-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டு வந்தார். தொடர்ந்து இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

  ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் மந்தீப் சிங் ஒரு கோலும், 42-வது நிமிடத்தில் தில்பிரித் ஒரு கோலும் அடித்து 3-1 என முன்னிலைக்கு கொண்டு வந்தனர். அதன்பின்னர் ஆட்டம் முடியும் வரை இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

  இறுதியில், இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. #AsianHockey
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் மலேசிய அணியை வீழ்த்தி இந்திய பெண்கள் ஹாக்கி அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. #AsiaHockey #AsianWCT
  டோங்கா சிட்டி:

  தென்கொரியாவின் டோங்கா சிட்டியில் பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி தொடர் நடந்து வருகிறது. இத்தொடரின் முதல் இரண்டு லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி ஜப்பான் மற்றும் சீனாவை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது.

  இந்நிலையில், இன்று நடைபெற்ற மலேசியாவிற்கு எதிரான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி மலேசியாவை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.  இந்திய வீராங்கனைகள் குர்ஜித் கர்(17 வது நிமிடம்), வந்தனா கத்ரியா (33) மற்றும் லால்ரீம்சியாமி(40) தலா ஒரு கோல் அடித்தனர். கொடுக்கப்பட்ட பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்திய குர்ஜித் இந்தியாவிற்கு முதல் கோலை பெற்று தந்தார். சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகள் மலேசியாவின் பெனால்டி பாலை லாவகரமாக தடுத்தனர். இதனால் இந்தியா எளிதான தங்கள் வெற்றியை பெற்றது.

  இது இந்தியாவிற்கு கிடைத்த ஹாட்ரிக் வெற்றியாகும். இறுதி போட்டிக்கு தகுதி பெற்றாலும், 19-ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்திய அணி தென்கொரியா அணியுடன் மோதுகிறது. இறுதி போட்டி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. #AsiaHockey #AsianWCTc
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தென்கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் சீனாவை 3-1 என இந்தியா வீழ்த்தியது. #AsiaHockey #AsianWCT
  தென்கொரியாவின் டோங்கா சிட்டியில் பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இருந்தது.

  இந்தியா இன்று தன்னை விட அதிக தரவரிசையில் உள்ள சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 3-1 என வெற்றி பெற்றது. வந்தனா கட்டாரியா 4-வது மற்றும் 11-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். குர்ஜித் கவுர் பெனால்டி கார்னரை பயன்படுத்தி கோல் அடித்தார். சீன வீராங்கனை வென் டான் 15-வது நிமிடத்தில் ஒரு கோல்அடித்தார். இதனால் இந்தியா தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது.

  உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்தியா, நாளை அடுத்த போட்டியில் மலேசியாவை எதிர்கொள்கிறது. 19-ந்தேதி தென்கொரியாவை எதிர்கொள்கிறது.

  இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் மலேசியா 3-2 என ஜப்பானை வீழ்த்தியது. 
  ×