search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை - அரையிறுதியில் இந்தியா, ஜப்பான் அணிகள் இன்று மோதல்
    X

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை - அரையிறுதியில் இந்தியா, ஜப்பான் அணிகள் இன்று மோதல்

    • ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி எழும்பூரில் நடைபெற்று வருகிறது.
    • இத்தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று நடைபெறுகின்றன.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் நேற்று முன்தினத்துடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.

    இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த மோசமான தோல்வியால் பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

    லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா முதல் இடத்தையும், மலேசியா 2-வது இடத்தையும் பிடித்தன. தென் கொரியா 3-வது இடத்தையும், ஜப்பான் 4-வது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

    இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியில் மலேசியா, நடப்பு சாம்பியன் தென் கொரியா அணிகள் மோதுகின்றன.

    இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதுகின்றன. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.

    முன்னதாக, மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 5-வது இடத்துக்கான போட்டியில் பாகிஸ்தான், சீனா அணிகள் மோதுகின்றன.

    Next Story
    ×