search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய கோப்பை ஹாக்கி: தென் கொரியாவை வீழ்த்தியது மலேசியா
    X

    ஆசிய கோப்பை ஹாக்கி: தென் கொரியாவை வீழ்த்தியது மலேசியா

    • லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களில் உள்ள அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
    • கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

    சென்னை:

    சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று கடைசிகட்ட லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சீனா, ஜப்பான் அணிகள் மோதின. இரண்டு அணிகளுக்குமே இது கடைசி லீக் ஆட்டம் ஆகும். இப்போட்டியில் ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் ஜப்பான் அணி 5 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தென்கொரியா, பாகிஸ்தான் அணிகளும் 5 புள்ளிகளுடன் முறையே 3 மற்றும் 4வது இடத்தில் உள்ளன. சீனா ஒரு புள்ளி மட்டுமே பெற்று கடைசி இடத்தில் (6வது இடம்) உள்ளது.

    லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களில் உள்ள அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இன்றைய ஆட்டத்தில் ஜப்பான் வெற்றி பெற்றபோதிலும், -2 என்ற குறைவான கோல் வித்தியாசத்தின் காரணமாக அரையிறுதிக்கு முன்னேறுவது அடுத்த போட்டிகளின் முடிவை சார்ந்துள்ளது.

    இரண்டு கோல்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தாலோ அல்லது தென் கொரியா இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலோ ஜப்பான் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது.

    இந்நிலையில், தென்கொரியா-மலேசியா அணிகளுக்கிடையிலான போட்டியில் மலேசிய அணி 1-0 என வெற்றி பெற்றது. முதல் பாதியில் 22வது நிமிடத்தில் மலேசியா பீல்டு கோல் அடித்து முன்னிலை பெற்றது. அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது. அடுத்து இரு அணிகளும் கடைசி வரை போராடியும் கோல்கள் அடிக்கப்படவில்லை. இந்த வெற்றியின் மூலம் மலேசிய அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

    எனவே, ஜப்பான் அணியின் அரையிறுதி வாய்ப்பு, கடைசி லீக் போட்டியை சார்ந்துள்ளது. கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

    Next Story
    ×