என் மலர்
நீங்கள் தேடியது "மலேசியா"
- சபா மாநிலத்தின் கடற்கரைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- அண்டை மாநிலமான சரவாக் பகுதியிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக
மலேசியாவின் போர்னியோ தீவில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
போர்னியோ தீவில் உள்ள சபா மாநிலத்தின் கடற்கரைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 12.57 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சபாவின் தலைநகரான கோட்டா கினபாலுவில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் பூமியின் அடியில் சுமார் 619.8 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சபாவின் மேற்கு கடற்கரை பகுதிகள் மற்றும் அண்டை மாநிலமான சரவாக் பகுதியிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கம் மிக ஆழத்தில் ஏற்பட்டதால், பெரிய அளவிலான உயிர்ச்சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை.
நிலநடுக்கத்தின் ஆழம் அதிகமாக இருப்பதால், சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தற்போதைக்கு எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
- மலேசியாவில் UPI சேவை விரைவில் தொடங்கும்.
- விரைவில் ஒரு திருவள்ளுவர் மையமும் அமைக்கப்படும்.
அரசு முறைப் பயணமாக மலேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கோலாலம்பூரில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் உரையாற்றினார்.
நிகழ்வில் அவர் பேசியதாவது, நம்பிக்கை தான் இந்தியாவின் மிகப்பெரிய கரன்சியாக மாறியுள்ளது. இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றன. இது உலகம் நம் நாட்டின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் குறிக்கிறது.
இந்தியாவின் வெற்றி மலேசியா மற்றும் ஆசியாவிற்கும் ஒரு வெற்றி. உலகில் இந்திய வம்சாவளியினர் அதிகம் இருக்கும் இரண்டாவது நாடு மலேசியா. இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு புலம்பெயர்ந்தோர் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வலுவான பாலமாக நிற்கிறார்கள்.
குறிப்பாக, தமிழ் சமூகம் இங்கு பல நூற்றாண்டுகளாக தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றனர். தமிழ் மொழி, உலகிற்கு இந்தியா அளித்த கொடை. தமிழ் இலக்கியம் இறவா தன்மை கொண்டது. தமிழ் கலரச்சாரம் உலகலவியது. தமிழர்கள் தங்கள் திறமைகளால் மனித குலத்துக்கு சேவை செய்கின்றனர்.
மலாயா பல்கலைக்கழகத்தில் ஒரு திருவள்ளுவர் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்த விரைவில் ஒரு திருவள்ளுவர் மையமும் அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக பிரதமர் மோடி மற்றும் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும் சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, இப்போது மலேசியாவிலும் இந்தியாவின் UPI பணபரிமாற்ற முறையை தொடங்க முடிவு எட்டப்பட்டது. விரைவில் மலேசியாவில் UPI சேவைகள் தொடங்கும் என மோடி தெரிவித்துள்ளார்.
- எனது நண்பரும் மலேசியப் பிரதமருமான அன்வர் இப்ராஹிமின் அழைப்பின்பேரில் மலேசியா செல்கிறேன்.
- நமது புலம்பெயர்ந்தோருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும்.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று மலேசியா புறப்பட்டு சென்றார். இந்த சுற்றுப்பயணத்தின்போது மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
எனது நண்பரும் மலேசியப் பிரதமருமான அன்வர் இப்ராஹிமின் அழைப்பின்பேரில் மலேசியா செல்கிறேன்.
அன்வர் இப்ராகிமுடனான பேச்சுவார்த்தை மூலம் இருநாடுகளுக்கிடையே ஏற்பட போகும் வலுவான உறவை எதிர்பார்த்துள்ளேன்.
இந்தப் பயணம் நமது விரிவான மூலோபாய கூட்டாண்மையை அதிகரிக்கும் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும்.
மலேசியா துடிப்பான இந்திய புலம்பெயர்ந்தோரின் தாயகமாகும். அங்கு நமது புலம்பெயர்ந்தோருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் மலேசியப் பயணத்தின்போது செமிகண்டக்டர் துறையில் இணைந்து செயல்பட ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
- அமைச்சரின் இந்த கருத்துக்கு மலேசியாவில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
- அமைச்சரின் கருத்து Misinformation என மனித உரிமை ஆர்வலர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
வேலை அழுத்தத்தால் இளைஞர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறுவதாக மலேசிய அமைச்சர் சுல்கிஃப்லி ஹசன் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மலேசிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டு அமைச்சர் சுல்கிஃப்லி ஹசன், "வேலையில் ஏற்படும் அழுத்தமும் சமூகத்தின் தாக்கமும் ஓரினச் சேர்க்கை உள்ளிட்ட LGBT சார்ந்த மனநிலைக்கு இளைஞர்கள் செல்ல முக்கிய காரணங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்த கருத்துக்கு மலேசியாவில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் இதனை தவறான தகவல் என குறிப்பிட்டு மனித உரிமை ஆர்வலர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
- தமிழ்ப் பாடம் கற்பிப்பதுடன் மற்ற பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கப்படுகின்றன.
- கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு சங்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இந்தியப் பண்டிகைகள் உலகின் ஒவ்வொரு மூலையிலும் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகின்றன.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நமது சகோதர சகோதரிகள், அனைத்து வகையான கலாச்சாரத்தையும் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
மலேசியாவில் உள்ள நமது இந்தியச் சமூகமும் இது தொடர்பாக பாராட்டத்தக்க பணியைச் செய்து வருகிறது. மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. தமிழ்ப் பாடம் கற்பிப்பதுடன் மற்ற பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கப்படுகின்றன.
மேலும், தெலுங்கு, பஞ்சாபி மொழிகளுடன் மற்ற இந்திய மொழிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு சங்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அதன் பெயர் 'மலேசியா இந்திய பாரம்பரிய சங்கம்'. கடந்த மாதம், மலேசியாவில் 'லால் பாட் சேலை'அணிவகுப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சேலைக்கு நமது வங்காளக் கலாச்சாரத்துடன் ஒரு சிறப்புத் தொடர்பு உண்டு.
இந்த நிகழ்வு, இந்தச் சேலையை அதிக எண்ணிக்கையிலான மக்கள் அணிந்ததற்காக ஒரு சாதனையை நிகழ்த்தியது, இது மலேசிய சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதல் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் ஆதிக்கம்
- மலேசியாவை 297 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
2025 யு19 ஆசியக்கோப்பை தொடர் இன்று துபாயில் தொடங்கியது. இத்தொடரில் 8 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, மலேசியா ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, மலேசியா ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் இன்று ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகள் போட்டியைத் தொடங்கின. அதன்படி இந்திய அணி, யுஏஇயையும், பாகிஸ்தான் மலேசிய அணியையும் எதிர்கொண்டன. முதல் போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 433 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 434 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய யுஏஇ அணி தொடக்கம் முதலே சரிவைச் சந்தித்தது. இறுதியில் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 234 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது. இந்திய அணி தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது.
மறுபுறம், தொடரின் இரண்டாவது போட்டியில் மலேசிய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மலேசியா, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் எடுத்தது.
பின்னர் 346 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய மலேசியா, 19.4 ஓவர்களிலேயே 48 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம் 297 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தானும் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
- அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய ஹிட் படங்களை கொடுத்தவர் சிறுத்தை சிவா.
- அஜித் குமாருடன் சிறுத்தை சிவா கடந்த சில நாட்களாக நேரம் செலவிட்டு வருகிறார்.
நடிகர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய ஹிட் படங்களை கொடுத்தவர் சிறுத்தை சிவா. விவேகம் படம் மட்டும் சொதப்பியது.
தொடர்ந்து சூர்யாவை வைத்து சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா படமும் பிளாப் ஆனது. இதன்பின் புதிய படங்களை இயக்காமல் இருந்த சிவா பொதுவெளியில் அதிகம் காணப்படவில்லை.
இந்நிலையில் மலேசியாவில் கார் பந்தயத்திற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வரும் அஜித் குமாருடன் சிறுத்தை சிவா கடந்த சில நாட்களாக நேரம் செலவிட்டு வருகிறார். அங்கு அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவுடன் சிறுத்தை சிவா இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இதனால் சிறுத்தை சிவா அஜித்துக்கு கதை சொல்ல அங்கு சென்றுள்ளதாகவும், இருவரின் கூட்டணியில் புதிய படம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் ஊகங்கள் எழுந்துள்ளது.
அஜித்தின் ரேஸிங் வாழ்க்கை பற்றி ஆவணப்படம் ஒன்று உருவாக இருப்பதாக தகவல்கல் வெளியாகி வந்த நிலையில் அந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
குட் பேட் அக்லி வெற்றிக்கு பிறகு அஜித் அடுத்ததாக மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
- அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார்.
- மலேசியாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித்குமார் கலந்துகொள்ளவுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார்.
அவ்வகையில் மலேசியாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள அஜித்குமார் மலேசியா சென்றுள்ளார்.
இந்நிலையில் மலேசியாவில் அஜித்துடன் செல்பி எடுத்துக்கொண்ட ரசிகை ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், முதல்ல நான் போட்டோ எடுக்க முயற்சி பண்ணப்போ அஜித் சார் என்ன திட்டிட்டாரு. ஆனா அதுக்கு அப்புறம் அவரே கூப்பிட்டு ஒரு செல்பி எடுத்து கொடுத்தாரு. என் வாழ்நாள் கனவு நனவாகிடுச்சி. அந்த ஒரு நொடி எனக்கு உலகத்தையே மறக்க வச்சிருச்சு'' என்று ஆனந்த கண்ணீருடன் மலேசிய ரசிகை பேசியுள்ளார்.
- மலேசியாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித்குமார் கலந்துகொள்கிறார்.
- இதே கோவிலில் அவர் நடித்த "பில்லா" படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார்.
அவ்வகையில் மலேசியாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள அஜித்குமார் மலேசியா சென்றுள்ளார்.
இந்நிலையில், 24H சீரிஸ் கார் பந்தயத்திற்கு முன்பாக, பத்து மலை முருகன் கோயிலில் அஜித்குமார் சாமி தரிசனம் செய்தார். இதே கோவிலில் அவர் நடித்த "பில்லா" படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
- சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
- ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது.
உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது. சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
இதனிடையே 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்கவோ, பயன்படுத்தவோ ஆஸ்திரேலியா அரசு தடை விதித்துள்ளது. இது வரும் டிசம்பர் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.
நிதி மோசடிகள், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற ஆன்லைன் அபாயங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் வகையில் வழிமுறைகளை வகுத்து வருவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
ஏற்கனவே டென்மார்க், நார்வே உள்ளிட்ட நாடுகள் 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கடலில் தத்தளித்து கொண்டிருந்த 13 பேரை பத்திரமாக மீட்டனர்.
- படகில் சென்ற நூற்றுக்கணக்கான அகதிகள் மாயமாகிவிட்டனர்.
மியான்மர் நாட்டில் இருந்து ஏராளமான ரோஹிங்கியர்கள் சட்டவிரோதமாக படகுகள் மூலம் மலேசியாவுக்கு அகதிகளாக செல்கின்றனர். நேற்று முன்தினம் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு கப்பலில் மியான்மரில் இருந்து புறப்பட்டனர்.
தாய்லாந்து- மலேசியா எல்லைக்கு அருகில் அவர்கள் கப்பலில் இருந்து இறங்கி 3 படகுகளில் மலேசியா புறப்பட்டனர். மலேசியா அருகே கடல் பகுதி எல்லையான லங்காவியில் சென்றபோது திடீரென ஒரு படகு கடலில் கவிழ்ந்தது. இதனால் அதில் பயணம் செய்த பயணிகள் கடலில் மூழ்கினார்கள்.
இதுபற்றி அறிந்ததும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் தத்தளித்து கொண்டிருந்த 13 பேரை பத்திரமாக மீட்டனர்.
பெண்கள், குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்துவிட்டதாக மலேசியா கடல் சார் நிறுவனம் தெரிவித்து உள்ளது. மேலும் படகில் சென்ற நூற்றுக்கணக்கான அகதிகள் மாயமாகிவிட்டனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. உயிர் பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மற்ற 2 படகுகளும் எங்கு சென்றது என தெரியவில்லை.
- வளர்ப்பு தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை தாயாரிடம் தெரிவித்துள்ளனர்.
- தாயார் அளித்த புகாரின் பேரில் வளர்ப்பு தந்தை உடனடியாக கைது செய்யப்பட்டார்.
மலேசியாவில் தனது 2 வளர்ப்பு மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்த 35 வயது நபருக்கு, 104 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு பெண்களும் 2020 ஆம் ஆண்டு முதல் வளர்ப்பு தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை கடந்த மாதம் தங்களது தாயாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தாயார் அளித்த புகாரின் பேரில் வளர்ப்பு தந்தை உடனடியாக கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 35 வயது நபருக்கு, 104 ஆண்டுகள் சிறை மற்றும் 18 பிரம்படி தண்டனைகள் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது






