என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Youth"

    விளாத்திகுளத்தில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் செயல்பட்டு வருகிறார் என அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் காய்கறி மார்க்கெட் அருகில் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் சட்டமன்ற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய தி.மு.க. நிர்வாகிகளுக்கு  மார்க்கண்டேயன்  எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் அமைச்சர் கீதாஜீவன் 1 பவுன் தங்க மோதிரம் வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    அகில இந்திய அளவில் நம்பர் ஒன் முதல்வராக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார். அந்த அளவிற்கு தமிழகத்தில் நல்லாட்சி புரிந்து வருகிறார்.

    தேர்தலின் போது கொடுத்த 570 வாக்குறுதிகளில் 270 வாக்குறுதிகளை ஆட்சி பொறுப்பு ஏற்றதும் நிறைவேற்றியுள்ளார். தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டும், மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும், தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் செயல்பட்டு வருகிறார்.


    மாற்றுத்திறனாளிகளுக்கு தனி தேர்வு நடத்தப்பட்டுள்ளது. எல்லா இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.டெல்டா மாவட்டங்களில் மட்டும் ரூ. 3ஆயிரத்து 300 கோடி மதிப்பில் தூர்வரும் பணிகள் நடைபெற்றுள்ளது. இவ்வாறு  அவர் பேசினார்.

    இதில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, மும்மூர்த்தி செல்வராஜ், பேரூராட்சி தலைவர் அயன் ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி, தலைமை கழகப் பேச்சாளர்கள் சரத்பாலா, ஆரணிமாலா, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

     நிகழ்ச்சி ஏற்பாடு விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக செய்யப்பட்டிருந்தது.
    தாரமங்கலம் அருகே விபத்தில் காயம் அடைந்த வாலிபர் பலியானார்.
    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள சிக்கம்பட்டி பெட்ரோல் பங்க் அருகே கடந்த 26-ந்தேதி இரவு 2 மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதியதில் குறுக்குப்பட்டி பகுதியை சேர்ந்த கொத்தனார் சந்திரசேகரன் (40) என்பவர் பலியானார். 

    இந்த விபத்தில்  மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த பெரியகாடம்பட்டி பகுதியை சேர்ந்த சந்திரன்  மகன் சிவா (வயது21) என்பவர் பலத்த காயம் அடைந்தார்.

    உடனே அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபற்றி தாரமங்கலம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் இன்று நெல்லை சந்திப்பு ெரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    நெல்லை:

    அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் இன்று நெல்லை சந்திப்பு ெரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

    மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் மாவட்ட துணைத்தலைவர் பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு 90 சதவீத வேலை வழங்கிடவும், தமிழ்நாடு அரசு பணி இடங்களை தமிழக இளைஞர்களுக்கு முழுமையாக வழங்கிட வேண்டும் எனவும், மத்திய, மாநில அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் நிர்வாகிகள் ஷிபானா, ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    சேலத்தில் வாலிபர் திடீர் மாயமானார்.
    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி என்.மேட்டுத்தெரு   தடிக்காரன்காடு பகுதியை சேர்ந்தவர் கோபிசங்கர்(வயது30). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 28-ந்தேதி ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. 

    அக்கம்பக்கத்தில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி கோபிசங்கரின் தந்தை சிவகுமார் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்கு பதிவு செய்து கோபிசங்கர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று விசாரித்து வருகிறார்கள். 

    கோபிசங்கர் காணாமல் போன அன்று சந்தன கலர் கோடு போட்ட அரை கை சட்டையும், புளூ கலர் டிராயரும் அணிந்திருந்தார். அவரது இடது கண் பார்வை இல்லை. வலபுறமாக சாய்ந்து நடக்கும் பழக்கம் கொண்டவர். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • ஈரோடு மரப்பாலம் ஆலமரத்து வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் . இவர் திருட்டு வழக்கில் சூரம்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • தொடர்ந்து திருட்டு, அடிதடியில் ஈடுபட்டு வருவதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் கலெக்டரிடம் பரிந்துரை செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மரப்பாலம் ஆலமரத்து வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவர் திருட்டு வழக்கில் சூரம்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    தொடர்ந்து திருட்டு, அடிதடியில் ஈடுபட்டு வருவதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் கலெக்டரிடம் பரிந்துரை செய்தனர். இதனை ஏற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதனையடுத்து மணிகண்டன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

    • மதுரையில் கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்கள் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

    மதுரை

    எஸ்.எஸ். காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேரரசி கோச்சடை மெயின்ரோட்டில் ரோந்துப் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது சந்தேகப்படும்படி நின்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரித்து சோதனை செய்தார். அவர்கள் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் விருதுநகர் மாவட்டம் பாறைப்பட்டியை சேர்ந்த முருகக்கடவுள் மகன் அரவிந்த் குமார் (20), குறிஞ்சி நகரை சேர்ந்த கருப்பு என்று தெரியவந்தது.

    இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    • இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • இளம்பெண் மேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை மேலூர் அருகே உள்ள கீழவளவு கக்கன் காலனியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது35). கூலி வேலை பார்த்து வரும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்தநிலையில் அவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் வாட்சாம் பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு தனது பகுதியை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தண்ணீர் பிடித்து கொண்டிருந்ததை பார்த்தார்.

    அவரிடம் தனியாக பேச வேண்டும் என கூறியுள்ளார். ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் சிவக்குமாருக்கும், அந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அந்த இளம்பெண் சிவக்குமாருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    அப்போது அவரை அங்குள்ள சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து சென்று சிவக்குமார் கற்பழித்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த இளம்பெண் மேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.தன்னை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று கற்பழித்ததாக அந்த இளம்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    அதன்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி சிவக்குமாரை கைது செய்தனர்.

    • பொருளாதார நெருக்கடியாலும், உரிய வழிகாட்டுதல் இல்லாததாலும் மாணவர்கள் வேலை தேடி செல்கின்றனர்.
    • மாணவர்கள் தங்கி பயிலக்கூடிய போட்டித்தேர்வு பயிற்சி மைய கட்டடம் கட்டி தர வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரிடம் மாரிமுத்து எம்.எல்.ஏ அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,

    தமிழகத்திலேயே ஏழை,எளிய மக்கள் நிறைந்த பகுதியாக டெல்டா மாவட்டம் உள்ளது. அதில் திருத்துறைப்பூண்டி தொகுதி உழைக்கும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக உள்ளது.

    இப்பகுதியில் ஆதிதிராவிடர் பட்டியல் சமூக மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.

    இவர்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். இத்தொகுதியில் பெரிய தொழில் சாலைகள், தொழில் நிறுவனங்கள் ஏதும் இல்லை. இயற்கையின் பல இன்னல்களுக்கு மத்தியில் இப்பகுதி இளைஞர்கள் படித்து பட்டம் பெற்றுள்ளனர்.

    பொருளாதார நெருக்கடியாலும், உரிய வழிகாட்டுதல் இல்லாததாலும், பல மாணவ மாணவிகள் உயர்கல்வியை தொடராமல் அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலத்திற்கு வேலை தேடி செல்கின்றனர்.

    இதனால் அவர்களின் கல்வியும் வேலைவாய்ப்பும் கேள்விக்குறியாக உள்ளது. மிகவும் பின்தங்கிய இப்பகுதியில் படித்த இளைஞர்கள் அரசு வேலைக்கு செல்வது எட்டாக்கனியாக உள்ளது.

    ஆகையால் இப்பகுதியில் படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் வகையில் அவர்களுக்கு வழிகாட்டியாக தேர்வுகளை எதிர்கொள்ள விடுதியுடன் கூடிய போட்டித்தேர்வு பயிற்சி மையம் துவங்கினால் பேருதவியாக இருக்கும்.

    இப்பகுதியில் பயிற்சி மையம் துவங்கினால் ஆதிதிராவிட பட்டியல் இன சமூக மாணவர்களும், பிற சமூக மாணவர்களும் பெரும் பயனடைவார்கள்.

    ஆகையால் திருத்துறைப்பூண்டி, கோட்டூர், முத்துப்பேட்டை ஆகிய வட்டாரங்களில் 100 மாணவர்கள் தங்கிப் பயில கூடிய போட்டித்தேர்வு பயிற்சி மைய கட்டடம், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கட்டித்தர வேண்டியும் அதே போல கோட்டூரில் மேற்ப்படி துறையின் மூலம் சமுதாயக்கூடம் கட்டடம் கட்டித்தர நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டியும்.

    ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரிடம் மாரிமுத்து எம்.எல்.ஏ கோரிக்கை மனு அளித்தார்.

    • காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் சிங்கித்துறையைச் சேர்ந்தவர் ஜெனோஸ்டன் ( வயது 22).
    • கடல் அலையின் வேகம் காரணமாக அந்த படகு திடீரென ஜெனோஸ்டன் மேல் மோதியது.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் சிங்கித்துறையைச் சேர்ந்தவர் ஜெனோஸ்டன் ( வயது 22). மீன் பிடி தொழில் செய்து வந்தார்.

    நேற்று அதிகாலையில் ஜெனோஸ்டன் தனது சகோதரரான எனோஸ்டன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கிராஸ்வின், ரெவஞ்சி ஆகிய 4 பேரும் வழக்கம்போல் கடலுக்குச் சென்றனர்.

    படகு மோதியது

    பின்னர் மதியம் சிங்கித்துறை கடற்கரைக்கு திரும்பினர். படகை கடலிலிருந்து தரை பகுதிக்கு இழுக்கும் வேலையில் ஈடு பட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது கடல் அலையின் வேகம் காரணமாக அந்த படகு திடீரென ஜெனோஸ்டன் மேல் மோதியது. இதனால் நெஞ்சில் பலத்த அடிபட்ட நிலையில் வலி தாங்காமல் அவர் அலறி உள்ளார்.

    உடனே அருகில் இருந்தவர்கள் அவரை திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜெனோஸ்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இந்த விபத்து குறித்து ஜெனோஸ்ட்டனின் தாய் லதா (42) அளித்த புகாரின் பேரில், திருச்செந்தூர் கடல் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கோமதி நாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • 200 தன்னார்வலர்களுக்கு 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு அதன் ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.
    • இளைஞர்களுக்கு பேரிடர் மீட்பு உபகரண பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    வேளாங்கண்ணியில் பேரிடர் கால பயிற்சி வகுப்பில், மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது:

    மாவட்ட கலெக்டர் பங்கேற்பு மழை வெள்ளம் புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் அதிகம் பாதிக்கும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை, வெள்ளம், புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் குறித்த நாட்கள் பயிற்சி வகுப்பு வேளாங்கண்ணியில் நடைபெற்றது.மீட்பு பணியில் ஈடுபட தேர்வு செய்யப்பட்ட 200 தன்னார்வலர்களுக்கு 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு அதன் ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.

    இதில் இக்கட்டான சூழலில் சிக்கித் தவிப்போருக்கு எவ்வாறு மருத்துவ உதவி செய்ய வேண்டும், உயிருக்கு போராடும் நபருக்கு முதலுதவி செய்வது மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து இதில் பயிற்சி பெற்ற 200 இளைஞர்களுக்கும் தலா 9000 மதிப்பிலான பேரிடர் மீட்பு உபகரண பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பங்கேற்று எதிர்வரும் மழைக்காலத்தில் இளைஞர்கள் தங்களது பணியை சிறப்பாக மேற்கொள்ளவும், சிறப்பாக பணிபுரியருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் கூறினார்.

    • மாணவ-மாணவிகளுக்கு சைபர்கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    • குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு சமூகத்தில் நடக்கும் குற்றங்கள் குறித்து விளக்கமளித்தார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை, திருவாரூர் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் ஏ.ஆர் .ஜெ. பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து நடத்திய விழிப்புணர்வு முகாம் ஏ.ஆர்.ஜெ பொறியியல் கல்லூரி அரங்கத்தில் நடை பெற்றது.

    இதில் ஏ.ஆர்.ஜெ. கல்வி குழுமத்தின் துணைத்த லைவரும் தாளாளருமான டாக்டர். ஜீவகன் அய்யநா தன் தலைமை தாங்கினார்.

    பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு பேசினார் .

    இதில் திருவாரூர் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ஸ்ரீபிரியா கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விளக்கி கூறினார் .

    மாவட்ட சமூக நலத்துறை சீப் கன்சஸ்டன்ட் மெர்லின் குழந்தைகளுக்கு மற்றும் இளைஞர்களுக்கு சமூகத்தில் நடக்கும் குற்றங்கள் குறித்து விளக்கி கூறினார்.

    நாம் நம்மில் மாற்றம் நிறுவனர் ஏ. ஆரோக்கியஜான் அமர்தாஸ் கலந்து கொண்டு பேசினார்.

    இதில் முனைவர் கே. செல்வராஜ் மேலாண்மை இயக்குனர் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு அடைந்தனர் .

    முன்னதாக துணை முதல்வர் முனைவர் ஜீ. மீனாட்சிசுந்தரம் வரவேற்புரையாற்றினார்.

    என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் சந்துரு நன்றி கூறினார்.

    • சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரை அடுத்த தென்மலையை சேர்ந்தவர் வேலு. இவரது மகன் வைரமுத்து(வயது 33).
    • கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள பருவக்குடி விலக்கு அருகே சென்றபோது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக வைரமுத்துவின் மொபட் மீது மோதியது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரை அடுத்த தென்மலையை சேர்ந்தவர் வேலு. இவரது மகன் வைரமுத்து(வயது 33).

    இவர் நேற்று சங்கரன்கோவில்-ராஜபா ளையம் சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள பருவக்குடி விலக்கு அருகே சென்றபோது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக வைரமுத்துவின் மொபட் மீது மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட வைரமுத்து தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். தகவல் அறிந்த கரிவலம்வந்த நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வைரமுத்து உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவரான ஆலங் குளம் அருகே உள்ள ஊத்துமலையை சேர்ந்த ஜெயக்குமார்(45) என்பவ ரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×