என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Villupuram Boy"

    • 5 வயதில் மகன் ஒருவர் உள்ளார்
    • ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் துளசிராம் (36). இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன் மதுரை கல்லுப்பட்டியை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது 5 வயதில் மகன் உள்ளார். துளசிராம் பி.இ. படித்து விட்டு சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வேலை இல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் மனைவி பாண்டியம்மாள், கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தாய் வீட்டிற்கு சென்று அங்கு வசித்து வந்துள்ளார். வேலை இல்லாததாலும், மனைவி பிரிந்து சென்றதாலும் விரக்தியில் இருந்த துளசிராம் பாதரசம் வாங்கி ஊசி மூலம் உடலில் செலுத்தி உள்ளார்.

    இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் விழுப்புரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம் பாண்டியன் நகரில் வசித்து வரும் சக்திவேல் என்பவருடைய 2 வயது மகன் நிகில்பிரஜன் உலக நாடுகளின் தலைநகர் பெயர்களை கூறி அசத்தி வருகிறான். #VillupuramBoy
    விழுப்புரம்:

    விழுப்புரம் பாண்டியன் நகரில் வசித்து வருபவர் சக்திவேல். விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சிந்தியா குடும்ப தலைவியாக உள்ளார். இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.

    நிகில்பிரஜன் என பெயரிட்டு அந்த குழந்தையை வளர்த்து வரும் இந்த தம்பதிகள், அவனை வெளியே அழைத்துச்சென்றால், தான் கண்ணில் கண்ட சம்பவம் குறித்தும், நடந்த இடத்தையும் எத்தனை நாள் கழித்து சென்றாலும் அதை சரியாக சொல்ல தொடங்கியதை அறிந்த பெற்றோர், தங்கள் மகனின் ஞாபக சக்தியை கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.

    மகனின் ஆற்றல் திறமையை மேம்படுத்த இந்திய வரைபடம், அதில் உள்ள 29 மாநிலங்களின் வடிவத்தை ஒன்றிணைத்து மாநிலத்தின் பெயர், அதன் தலைநகரின் பெயர் ஆகியவற்றை சொல்லி கொடுக்க தொடங்கினார்கள். அவனும் அதனை உற்று கவனித்து வடிவங்களை பார்த்து மாநிலத்தின் பெயர் அதன் தலைநகரின் பெயரை சொல்லி அசத்தினான்.

    இதனை தொடர்ந்து 196 உலகநாடுகளின் பெயர்கள் மற்றும் அதன் தலைநகர் ஆகியவற்றை பெற்றோர் சொல்லிக்கொடுக்க அதனையும் தற்போது நாடுகளின் பெயர் சொல்லி அதன் தலைநகர் பெயரை கேட்டால் உடனடியாக சரியான பதில் சொல்கிறான்.

    அது மட்டுமல்லாமல் உயிர் மெய் எழுத்துக்கள், விலங்குகளின் படத்தை பார்த்து அதன் பெயர்கள், வடிவங்களை பார்த்து வடிவங்களின் பெயர்கள், ராமாயணத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயர்கள், விண்வெளி, சூரிய குடும்பத்தின் கோள்கள், பொது அறிவில் 100 கேள்விகளுக்கு பதில் சொல்லி அசத்தி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  #VillupuramBoy
    ×