என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இளைஞர்"
- அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை சார்பில் அறிவானந்தபாண்டியன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
- ஆதரவற்றோர் இல்லத்திலும், பின்னர் பசுமலையில் உள்ள இன்பா முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
மதுரை
அகில இந்திய நாடார் இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் அறிவுச்சுடர் கே.அறிவானந்த பாண்டியனின் 63-வது பிறந்த நாள் விழா பேரவை யின் அவைத்தலைவர் எஸ்.கே.மோகன் தலைமையில் சிறப்பாக கொண்டாடப் பட்டது.
நாகமலை, ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது சிலைக்கும், தெப்பக்குளம் அய்ய நாடார் ஜெயலெட்சுமி அம்மாள் பள்ளியில் உள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து காமராஜர் அறநிலையத்தில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் நடை பெற்றது. 12 மணிக்கு தெற்குவாசலில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திலும், பின்னர் பசுமலையில் உள்ள இன்பா முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேரவையின் துணைத்தலைவர் கே.மதனகோபால். பொதுச்செயலாளர் வி.பி.மணி, பொருளாளர் பா.குமார், மாநகர் தலைவர் எஸ்.எம்.மகராஜன், துணைத்தலைவர்கள் எம்.என்.ரவி, ஜி.முத்து. செயலாளர் ஏ.மதிவாணன், துணைச்செயலாளர் ஜி.பி.பாண்டி.
மதுரை நாடார் உறவின் முறை தலைவர் அனிதா ஆர்.சிவானந்தன், ஜெயராஜ் நாடார் மேல் நிலைப்பள்ளி துணைத் தலைவர் பி.செந்தில் குமார், துணைச்செயலாளர் சி.பாஸ்கரன், காமராஜர் அறநிலைய தலைவர் துணைத்தலைவர் எம்.எஸ்.சோமசுந்தரம், பொதுச் செயலாளர் கே.பி.எம்.எம்.காசிமணி, டி.பாலசுப்பிர மணியன்.
ஜெயராஜ் அன்ன பாக்கியம் மெட்ரிக்கு லேசன் பள்ளி தலைவர் ஆர். கணேசன், செயலாளர் கே.ஆனந்த், இணைச்செய லாளர் ஒய். சூசை அந்தோணி, பேரவையின் கிழக்குத் தொகுதி கதிர்வேல், முருகேச பாண்டியன், ரவிச் சந்திரன், டேனியல், கிருஷ் ணன். மணிக்குமார், மாரி யப்பன், ராஜா, மதியழகன், காமராஜ்பாபு, மத்திய தொகுதி டி.கார்த்திகை செல்வம், கணேசன், ஜவஹர். பாலன், காசி, பெத்தராஜன்.
ரவி, சந்திரசேகர். மேற்குத்தொகுதி ஏ.சிவக்குமார், ஜெய்சங்கர், சங்கர், ரவி, ராமலிங்கம். தினேஷ். முத்துராஜ். வடக்கு தொகுதி ஆர்.காசி விஸ்வநாதன், வேலாயுதம். கணேசன் தெற்கு தொகுதி நாகசேகர், வெங்கடேஷ், சுரேஷ், சரவணக்குமார், தன்ராஜ். முருகேசன், முருகானந்தம். விஜய பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பேன்சி கடை, மற்றும் கடைகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தது.
- கண்காணிப்பு கேமராவில் உள்ள உருவத்தை கடைக்காரர்களின் செல்போனுக்கு சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்தனர்.
பல்லடம்
பல்லடம் தினசரி மார்க்கெட் பகுதியில் உள்ள பேன்சி கடை, மற்றும் கடைகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இது குறித்து வியாபாரிகள் பலமுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனாலும் திருடன் சிக்கவில்லை. இதையடுத்து கடைக்காரர்கள் கடைகளுக்கு முன்னும் பின்னும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். சம்பவத்தன்று இரவு பேன்சி கடை, துணிக்கடை உள்ளிட்ட கடைகளில் சுமார் ரூ.2.500 மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனது.
கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்த போது, அதில் ஒரு வாலிபர் கடைகளில் புகுந்து திருடுவது தெரிய வந்தது. இதையடுத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளுடன் பல்லடம் போலீஸ் நிலையத்தில் வியாபாரிகள் புகார் அளித்தனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் உள்ள உருவத்தை கடைக்காரர்களின் செல்போனுக்கு சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்தனர்.
இதற்கிடையே நேற்று இரவு கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவம் கொண்ட நபர் மார்க்கெட் பகுதிக்கு வந்தார்.
அவரை வியாபாரிகள் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்த போது அவர் கடைகளில் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு தர்ம அடி கொடுத்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் இது குறித்து பேன்சி கடை நடத்தி வரும் நாகராஜன் (வயது59) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்ததில் அவன் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாரதி புத்தி பதார் என்பவரது மகன் ராஜு என்கிற சிந்தாமணி (வயது 28) என்பது தெரிய வந்தது.
அவனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- வீடு அருகே குடிபோதையில் வாலிபர் ஒருவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
- ஈஸ்வரன் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பல்லடம்:
பல்லடம் பனப்பாளையம் பகுதியை சேர்ந்த ராமன் என்பவரது மனைவி பழனியம்மாள் (வயது 52). நேற்று அவர் வீடு அருகே குடிபோதையில் வாலிபர் ஒருவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதனை தட்டி கேட்ட பழனியம்மாளை அந்த வாலிபர் கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த பழனியம்மாள் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார் பழனியம்மாளை தாக்கிய அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்கிற ஈஸ்வரன் (வயது 37) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- 5 ஆண்டுகளாக வெள்ளகோவிலில் தங்கி செல்போன் கடை நடத்தி வருகின்றார்.
- ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான 10 செல்போன்கள் திருட்டு போனது தெரியவந்தது.
வெள்ளகோவில்:
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த பயாஸ் அகமது (வயது 38) என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக வெள்ளகோவிலில் தங்கி செல்போன் கடை நடத்தி வருகின்றார். சம்பவத்தன்று வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
மீண்டும் காலையில் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான 10 செல்போன்கள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுக்க ப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது வெள்ளகோவில் பகுதியில் ஹோட்டலில் வேலை செய்து வந்த சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியை சேர்ந்த உலகநாதன் மகன் திருமுருகன் என்பவர் செல்போன் கடையில் திருடியது தெரியவந்தது.
தஞ்சாவூரில் பதுங்கி இருந்த திருமுருகனை வெள்ளகோவில் போலீசார் பிடித்து அவரிடம் இருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான செல்போன்களை கைப்பற்றி, திருமுருகனை காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- வடமாநில தொழிலாளர்கள் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.
- வாடகை ஆட்டோவில் வந்த 2 வட மாநில வாலிபர்ளை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள அருள்புரம், சின்னக்கரை பகுதிகளில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால், அந்தப் பொருட்கள் விற்பனை அந்தப் பகுதிகளில் ஜோராக நடைபெற்று வருகிறது. பலமுறை போலீசார் நடவடிக்கை எடுத்தும் இதனை முழுமையாக தடுக்க முடியவில்லை .
இந்தநிலையில் பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை சோதனை சாவடியில் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட போது வாடகை ஆட்டோவில் வந்த 2 வட மாநில வாலிபர்ளை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதையடுத்து அவர்களிடம் சோதனை மேற்கொண்ட போது அவர்கள் வைத்திருந்த பேக்கில் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ்யம் பத்ரா என்பவரது மகன் பிஸ்வாம்பர் பத்ரா(23) மற்றும் ஹோட்டாக்கர்மி என்பவரது மகன் ரஞ்சன் கர்மி(31) என தெரியவந்தது.
2 பேரும் திருப்பூர் அருகே உள்ள இடுவம்பாளையம் பகுதியில் தங்கி கஞ்சா விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பள்ளி மாணவன் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யும் முறைகள் குறித்து விளக்கினான்.
- சமூக மற்றும் சுற்றுச்சூழல் இயல்புடைய பல கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய முடியும்
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பொறியியல் பிரிவு சார்பில் உலக இளைஞர் திறன் தினவிழா நடைபெற்றது. விழாவுக்கு பொறுப்பு தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் பாஸ்கரன், தெய்வ சகாயம், சக்கரபாணி, தமிழ்ச்செல்வி, விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தொழில் கல்வி பயிற்றுனர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் தொழிற்கல்வி ஆசிரியர் முகமது ரபிக் கலந்து கொண்டு பேசுகையில்:-
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 15-ந் தேதி உலக இளைஞர் திறன் தினத்தை அறிவித்தது. இந்த நாள் "உள்ளடக்கிய மற்றும் சமமான தரமான கல்வியை உறுதி செய்து அனை வருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை ஊக்குவிக்கவும்" என்று பரிந்துரைக்கிறது.
ஐ.நா.வை பொறுத்தவரை வேலைவாய்ப்பு, ஒழுக்கமான வேலை மற்றும் தொழில் முனைவோர் ஆகியவற்றிற்கு தேவையான திறன்களை இளைஞர்கள் மற்றும் பெரியவர்க ளிடையே வளர்க்க உதவுவதன் மூலம் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் இயல்புடைய பல கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய முடியும் என்றார்.
பின், பள்ளி மாணவன் தவச்செல்வன் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யும் முறைகள் குறித்து விளக்கினான். மாணவன் லோகேஸ்வரன் பாதுகாப்பான முறையில் மின் சாதனங்களை கையாளும் வழிமுறைகள் குறித்து பேசினார். முடிவில் தொழில் கல்வி ஆசிரியர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
இதில் ஆசிரியை அஜிதா கனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஐஸ் பெட்டிகளில் வைத்து கொண்டு வரப்படும் மீன்களை விட கிராமத்து குளங்களில் அவ்வப்போது மீன்களை பிடித்து சமைப்பது கூடுதல் சுவை தருவதாகும்.
- பால் (பந்து) தூண்டில்கள் எனப்படும் இந்தவகை தூண்டில்களில் மீன்களுக்கு உணவாக சத்துமாவு, கோதுமைமாவு மற்றும் முட்டை கலந்த கலவையை பயன்படுத்துகிறோம்.
குடிமங்கலம்:
குடிமங்கலத்தை அடுத்த புதுப்பாளையம் பகுதி இளைஞர்கள் பயனுள்ள பொழுதுபோக்காக மீன்பிடித்து வருகின்றனர்.
அவர்கள் கைத்தூண்டில், நிலத் தூண்டில், வலை என பல விதங்களில் மீன்களைப்பிடித்து வருகிறார்கள். அதேநேரத்தில் மாவு உருண்டை தூண்டில் மூலம் நூதன முறையில் மீன் பிடிப்பது ரசிக்க வைப்பதாக உள்ளது.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
ஐஸ் பெட்டிகளில் வைத்து கொண்டு வரப்படும் மீன்களை விட கிராமத்து குளங்களில் அவ்வப்போது மீன்களை பிடித்து சமைப்பது கூடுதல் சுவை தருவதாகும். ஆனால் பெரும்பாலான கிராமத்து குளங்களில் மீன் பிடிக்கும் உரிமை ஏலம் விடப்படுவதால் குத்தகைதாரர்கள் தவிர மற்றவர்களை மீன் பிடிக்க அனுமதிப்பதில்லை. ஒருசில சிறிய குளங்கள் மட்டுமே ஏலம் விடப்படாமல் உள்ளது. அந்த குளங்களில் மட்டுமே மீன் பிடிக்க முடிகிறது.
பொதுவாக தூண்டில்களில் மீன்களுக்கு இரையாக மண் புழுக்களை பயன்படுத்துவது வழக்கமாகும். ஆனால் சமீப காலங்களாக ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் விளைநிலங்களில் மண் புழுக்களைப் பார்ப்பதே அரிதான விஷயமாக உள்ளது. அதனால் தூண்டில்களில் மீன்களுக்கு இரையாக கறிக்கடையிலிருந்து கோழி குடல்களை வாங்கி வந்து பயன்படுத்துகிறோம். இதுதவிர மாவு உருண்டை தூண்டில்களை பயன்படுத்தி விரைவாக மீன்களை பிடிக்க முடிகிறது. பால் (பந்து) தூண்டில்கள் எனப்படும் இந்தவகை தூண்டில்களில் மீன்களுக்கு உணவாக சத்துமாவு, கோதுமைமாவு மற்றும் முட்டை கலந்த கலவையை பயன்படுத்துகிறோம். ஒரு ஸ்பிரிங்கை சுற்றி மாவை உருண்டையாக வைத்து அதனுள் தூண்டில்களை புதைத்து வைக்கிறோம்.
மேலும் மாவு உருண்டை தூண்டில் நீருக்குள் மூழ்குவதற்காக ஒரு இரும்பு நட்டு அதற்கு மேலே சற்று இடைவெளியில் பிளாஸ்டிக் பந்து இணைத்து இந்த தூண்டிலை தயாரிக்கிறோம். இந்த தூண்டிலை கயிற்றுடன் இணைத்து ஒரு முனையை பிடித்துக்கொண்டு தூண்டிலை தண்ணீருக்குள் வீசி விட்டு காத்திருந்தால் மாவைத் தின்னும் மீன்கள் தூண்டிலில் சிக்கிக் கொள்ளும். இந்த முறையில் மீன்கள் அதிக அளவில் சிக்குகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்