search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "brothers"

  • தாகூர் அரசு கலை கல்லூரியில் மறைந்த ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ரவிச்சந்திரன் நினைவு கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது.
  • விழாவுக்கு ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார்.

  புதுச்சேரி:

  புதுவை தாகூர் அரசு கலை கல்லூரியில் மறைந்த ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ரவிச்சந்திரன் நினைவு கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. கிரிக்கெட் போட்டியில் 70 அணிகள் பங்கேற்றன. போட்டியில் முதல் 5 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார்.

  புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. காஞ்சிபுரம் ரோஸ் பிரதர்ஸ் அணிக்கு முதல் பரிசும், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி புதுவை ரேசிங் காய்ஸ் அணிக்கு 2-ம் பரிசும், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் வேலூர் ஆற்காடு யங்ஸ்டர்ஸ் அணிக்கு 3-ம் பரிசும், கோப்பையும் வழங்கினர்.

  புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி. துணைத் தலைவர் மலர்மன்னன் புதுவை 11 பிளாஸ்டர் அணிக்கு 4-ம் பரிசும், தொழிலதிபர் ஜெயக்குமார் புதுவை பாசிட்டிவ் எனர்ஜி அணிக்கு 5-ம் பரிசும் வழங்கினர்.

  விழாவில் புதுவை பல்கலைக்கழகம் கம்யூனிட்டி கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் ஜெகதீஸ்வரி, புதுச்சேரி பல்கலைக்கழக விளையாட்டுத்துறை இயக்குனர் இளையராஜா, ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகிகள் சொக்கலிங்கம், ஞான சேகரன், தமிழ்ச்செல்வன், ஜான்சன் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

  • தேசிய அளவிலான மாடலிங் போட்டி ைஹதராபாத்தில் நடந்தது.
  • வருகிற செப்டம்பர் 21-ந் தேதி தாய்லாந்து நாட்டில் நடைபெறும் போட்டியில், பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

  திருப்பூர் :

  திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட போயம்பாளையத்தை சேர்ந்தவர் ரவிக்குமார், டெய்லர். இவரது மனைவி ஜோதிமணி. இந்த தம்பதியரின் மூத்தமகன் உபநிஷாந்த். இளையமகன் திஷாந்த். சகோதரர்கள் இருவரும் மாடலிங் துறையில் சாதிக்கவேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டுள்ளனர்.

  தேசிய அளவிலான மாடலிங் போட்டி ைஹதராபாத்தில் நடந்தது. இப்போட்டியில் 13 - 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் உபநிஷாந்த், 8 - 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் திஷாந்த் பங்கேற்றனர்.புதுமையான ஆண்கள் ஆடை ரகங்களை அணிந்து, பேஷன்ஷோவில் கேட்வாக் செய்தனர், நடனமாடினர்.அதன்பின் நேர்முகத்தேர்வில் கேள்விகளுக்கு பதிலளித்தனர். அவ்வகையில் தேசிய அளவிலான மாடலிங் போட்டியில் உபநிஷாந்த் முதலிடம், திஷாந்த் மூன்றாமிடம் பிடித்தனர்.இதனால் சர்வதேச அளவிலான மாடலிங் போட்டி வருகிற செப்டம்பர் 21-ந் தேதி தாய்லாந்து நாட்டில் நடைபெறும் போட்டியில், பங்கேற்கும் வாய்ப்பை உபநிஷாந்த், திஷாந்த் பெற்றுள்ளனர்.இருவரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் டீன் சூப்பர் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்க விரைவில் தாய்லாந்து செல்கின்றனர்.சர்வதேச போட்டியில் பங்கேற்க உள்ள மாடலிங் சகோதரர்களை திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் பாராட்டினார்.

  • கடந்த 1 மாதத்திற்கு முன்பு மாரியப்பனுக்கும், கணேசனுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
  • நேற்று மாலை கணேசன் கடையில் இருக்கும் போது, அங்கு வந்த மாரியப்பன், முருகன், முகேஷ் ஆகியோர் கணேசனை கம்பால் தாக்கினர்.

  களக்காடு:

  களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகர் கீழக்காலனி, வடக்குத் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 37). இவர் அங்கு பெட்டிக் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு எதிரே ஜெ.ஜெ.நகரை சேர்ந்த முருகன் (37) ஹாலோபிளாக் செங்கல் தயாரிக்கும் நிறுவனம் வைத்துள்ளார்.

  இந்த நிறுவனத்தில் அதே ஊரைச் சேர்ந்த மாரியப்பன் (39), பறையன்குளம் மேலத்தெருவை சேர்ந்த முகேஷ் (22) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 1 மாதத்திற்கு முன்பு மாரியப்பனுக்கும், கணேசனுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை கணேசன் கடையில் இருக்கும் போது, அங்கு வந்த மாரியப்பன், முருகன், முகேஷ் ஆகியோர் கணேசனை கம்பால் தாக்கினர். இதனை தடுக்க வந்த அவரது சகோதரர் பிரகாஷையும் தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதில் காயமடைந்த கணேசன் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையிலும், பிரகாஷ் களக்காடு அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி, இதுதொடர்பாக மாரியப்பன், முகேஷை கைது செய்தனர். மேலும் முருகனை தேடி வருகின்றனர்.

  • தமிழகத்தில் மட்டுமே அனைவரும் ஜாதி மதங்களைக் கடந்து சகோதரர்களாக பழகும் மாண்பு உள்ளது.
  • 200-க்கும் மேற்பட்டோர் தங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.

  நாகப்பட்டினம்:

  நாகையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது.

  நகர் மன்ற தலைவரும், தி.மு.க நகரச் செயலாளருமான மாரிமுத்து தலைமை தாங்கினார்.

  தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவரும், நாகை மாவட்ட செயலாளருமான கவுதமன், நாகை தொகுதி மேலிட பார்வையாளர் நிரஞ்சன் துறை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  இந்த விழாவில் அ.தி.மு.க முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் ஹாஜி சுல்தான் அப்துல் காதர், முன்னாள் மகளிர் அணி செயலாளர் அஞ்சம்மாள் பரமசிவம் மற்றும் அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 200 -க்கும் மேற்பட்டோர் தங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.

  அவர்களை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், சால்வை அணிவித்து வரவேற்றார்.

  பின்னர் அவர் பேசியதாவது:-

  தமிழகம் தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ்வதால் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லாத அளவிற்கு பாதுகாப்பாக உள்ளதால் உலக முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழிற்சாலைகளை தொடங்கி வருவது தமிழக முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றி.

  தமிழகத்தில் மட்டுமே அனைவரும் ஜாதி மதங்களைக் கடந்து சகோதரர்களாக பழகும் மாண்பு உள்ளது.

  இவ்வாறு அவர் பேசினார்.

  • தூத்துக்குடி கதிர்வேல்நகரை சேர்ந்த சகோதர்கள் 3 பேரும் தங்களது மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை வீட்டிற்கு சென்றனர்.
  • அப்போது அப்பகுதி சாலையில் மதுபோதையில் இருந்த ஒரு கும்பல் மோட்டார் சைக்கிள் மீது கற்களை வீசியுள்ளனர்.

  தூத்துக்குடி:

  தூத்துக்குடி கதிர்வேல்நகரை சேர்ந்தவர் முகமது ஆரோன் (வயது 27). இவரது சகோதரர்கள் முகமதுஹசன் (30), உசேன் (32). சகோதர்கள் 3 பேரும் தங்களது மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை வீட்டிற்கு சென்றனர்.

  அப்போது அப்பகுதி சாலையில் மதுபோதையில் இருந்த ஒரு கும்பல் மோட்டார் சைக்கிள் மீது கற்களை வீசியுள்ளனர். இது குறித்து முகமது ஹசன், அவர்களிடம் சென்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அவரை தாக்கி உள்ளனர். இது தொடர்பாக அவரது சகோதரர்கள் தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது அந்த கும்பல், வாளால் 3 பேரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்ட னர். அங்கிருந்தவ ர்கள் அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சிப்காட் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வின்சென்ட் அன்பரசி சப்-இன்ஸ்பெ க்டர்கள் வசந்த், சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அம்பை அருகே உள்ள தனியார் பள்ளியில் பூதத்தான் 2020-ம் ஆண்டு 11-ம் வகுப்பும், சிவசண்முகம் 9-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
  • கொரோனா பரவல் காரணமாக அப்போதைய அரசு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவித்தது. ஆனால் இவர்கள் இருவரையும் பள்ளி நிர்வாகம் தேர்ச்சி என அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

  நெல்லை:

  நெல்லை மாவட்டம் அம்பையை சேர்ந்தவர் பூவலிங்கம். இவரது மகன்கள் பூதத்தான் ( வயது 17), சிவ சண்முகம் ( 15).

  அம்பை அருகே உள்ள தனியார் பள்ளியில் பூதத்தான் 2020-ம் ஆண்டு 11-ம் வகுப்பும், சிவசண்முகம் 9-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

  கொரோனா பரவல் காரணமாக அப்போதைய அரசு அனைத்து மாணவர்க ளும் தேர்ச்சி என அறிவித்தது. ஆனால் இவர்கள் இருவரையும் பள்ளி நிர்வாகம் தேர்ச்சி என அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அவர்கள் காரணம் கேட்டபோது சரியான தகவல் கூறவில்லை என தெரிகிறது.

  போராட்டம்

  இதைத்தொடர்ந்து அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் அம்பையில் உள்ள குடிநீர் தொட்டியில் ஏறிநின்று தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயர் அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

  தற்கொலை மிரட்டல்

  இந்நிலையில் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு சென்ற சகோதரர்கள் அங்குள்ள மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்தனர்.

  தகவல் அறிந்ததும் மாநகர துணை கமிஷனர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர் வாசிவன் மற்றும் பாளை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • கரடிவாவி ரோட்டில் 13.5 சென்ட் வீட்டுமனை இடத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு வாங்கியுள்ளனர்.
  • ரோட்டில் வீட்டுமனை இடம் உள்ளதாக தெரிவித்த கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  பல்லடம் :

  கோவை மாவட்டம் சூலூர் தாலுகா வி.மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 43).இவரது சகோதரர் வெங்கடாசலம்(40). சகோதரர்கள் இணைந்து அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரிடமிருந்து, திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் க.கிருஷ்ணாபுரம் ஊராட்சி காமநாயக்கன்பாளையம் கரடிவாவி ரோட்டில் 13.5 சென்ட் வீட்டுமனை இடத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு வாங்கியுள்ளனர்.

  தற்போது வீடு கட்டுவதற்காக, இடத்தை அளவீடு செய்ய கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடியிடம் மனு அளித்தனர். நிலத்தை அளவீடு செய்ய வந்த கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி காமநாயக்கன்பாளையம் - கரடிவாவி ரோட்டின் மையப்பகுதியில் அளவீடு செய்து இதுதான் உங்களது வீட்டுமனை இடம் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், தங்களது நிலத்தை முறையாக அளவீடு செய்து தரக்கோரி பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தனர். தாசில்தார் இல்லாததால் மண்டல துணை தாசில்தாரிடம் மனு அளித்து தங்களது இடத்தை உரிய அளவீடு செய்து ஒப்படைக்க வேண்டுமாறு வேண்டுகோள் விடுத்தனர். ரோட்டில் வீட்டுமனை இடம் உள்ளதாக தெரிவித்த கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

  இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் விளக்கம் கேட்க முயன்றபோது அவர் செய்தியாளரின் அழைப்பை ஏற்கவில்லை. இந்த சம்பவத்தால் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

  • வியாபாரியை கத்தியால் குத்திய அண்ணன்- தம்பி கைது செய்யப்பட்டனர்.
  • ரூ.10ஆயிரம் வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளை விற்றுள்ளார்

  மதுரை

  ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்தவர் விமல் ஆனந்த் (வயது 30). இவர் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். அவரிடம் சோழவந்தானை சேர்ந்த நவீன் ரூ.10ஆயிரத்துக்கு மோட்டார் சைக்கிளை விற்றார்.

  இந்தநிலையில் அச்ச ம்பத்து பாக்கியலட்சுமி நகரை சேர்ந்த முத்துப்பாண்டி மகன்கள் ஜெயபால்(22), கோபால் (26) ஆகியோர் விமல் ஆனந்தை தேடி வந்தனர்.

  அவர்கள், சோழவந்தான் நவீன் விற்ற மோட்டார் சைக்கிள் எங்களுக்கு சொந்தமானது என்றுகூறி அதை தந்துவிடுமாறு கேட்டனர். அதற்கு விமல் ஆனந்த், "என்னிடம் அவர் ரூ.10ஆயிரம் வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளை விற்றுள்ளார். அந்த பணத்தைப் பெற்றுத்தந்தால் மோட்டார் சைக்கிளை தருவதாக கூறினார்.

  இதனை தொடர்ந்து அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.ஆத்திரம் அடைந்த 2 பேரும் விமல் ஆனந்தை கத்தியால் குத்தி விட்டு தப்பினர். இது குறித்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணன்-தம்பி ஜெயபால்,கோபால் ஆகியோரை கைது செய்தனர்.

  தூத்துக்குடியில் அண்ணன்- தம்பிக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  முள்ளக்காடு:

  தூத்துக்குடி சிலோன்காலனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30), இவரது தம்பி சிவசக்தி (22). அண்ணன், தம்பி இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த  பிரபு என்பவருக்கும் கால்நடைகள் வளர்ப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.

  இந்நிலையில் சிவசக்தி நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பிரபு வளர்த்து வரும் பூனை மீது சிவசக்தியின் மோட்டார் சைக்கிள் மோதியதாக தெரிகிறது.

  இதனால் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரபு கத்தியால் சிவசக்தி மற்றும் மணிகண்டனை குத்தினார். இதில் காயமடைந்த அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

  இது தொடர்பாக அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பிரபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தன்னை மணிகண்டன் மற்றும் பிரபு தாக்கியதாக பிரபுவும் கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  போலி ஆவணம் கொடுத்து வங்கியில் ரூ.1 கோடி மோசடி செய்த வழக்கில் கைதான சகோதர்களை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
  திருப்பூர்:

  ஈரோடு ரெயில்வே காலனியை சேர்ந்தவர் செந்தில்(வயது 58). இவருடைய தம்பி ரவிச்சந்திரன்(56). இவர்கள் இருவரும் சேர்ந்து கோவை மாவட்டம் காரமடையில் பாலித்தீன் சாக்குப்பை தயாரிக்கும் நிறுவனம் தொடங்கினார்கள்.

  இந்த நிறுவனத்தின் தேவைக்காக இருவரும் திருப்பூர் கொங்குநகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.1 கோடி கடன் கேட்டனர்.

  இதற்காக ஈரோட்டில் தங்கள் பெயரில் உள்ள 1¼ ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தின் ஆவணங்களை வங்கியில் அடமானமாக வைத்து கடந்த 2008-ம் ஆண்டு ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் பெற்றனர். அதன்பிறகு கடனுக்கான தவணைத்தொகையை உரிய முறையில் திருப்பி செலுத்தாமல் இருந்துள்ளனர்.

  ஒரு கட்டத்தில் கடன் தொகையை செலுத்தாததால் அவர்களுடைய நிலத்தை ஜப்தி செய்து ஏலம் விடுவதற்கான நடவடிக்கையில் வங்கி அதிகாரிகள் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று வங்கி அதிகாரிகள் பார்த்தபோது, அந்த ஆவணங்களில் குறிப்பிட்டபடி அங்கு நிலம் எதுவும் இல்லை. இதனால் வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். செந்தில், ரவிச்சந்திரன் இருவரும் வங்கியில் அடமானம் வைத்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என்பதும், இருவரும் திட்டமிட்டே போலி ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

  இதைத்தொடர்ந்து வங்கியின் உதவி பொது மேலாளர் ஜெகத்ரட்சகன் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல், போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட செந்தில், அவருடைய தம்பி ரவிச்சந்திரன் ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு கைது செய்தனர். பின்னர் அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews