தந்தையின் சொத்துக்காக அண்ணன் - தம்பியை கொலை செய்த இளம்பெண்

3 பேரும் சமாதானமாகாததால், தனது அண்ணனையும், தம்பியையும் கிருஷ்ண வேணி கொலை செய்ய திட்டமிட்டார்.கிருஷ்ணவேணி, கடந்த டிசம்பர் 10-ந்தேதி கோபிகிருஷ்ணாவை அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்துள்ளார்.
கொலையான சகோதரர்கள்
கொலையான சகோதரர்கள்
Published on

திருமலை:

ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம் நகரிகல்லு யானாடி காலனியை சேர்ந்தவர் பவுலிராஜூ. இவர் அரசு பழங்குடியினர் நலப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் கோபிகிருஷ்ணா, பொல்லப்பள்ளி மண்டலம், பந்தலமோடு காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார். மகள் கிருஷ்ணவேணி, இளைய மகன் துர்காராம கிருஷ்ணா ஆகியோரும் திருமணம் முடிந்து தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், பவுலி ராஜூன் 2 மகன் மற்றும் ஒரு மகள் ஆகிய மூவரும் தங்களது துணையுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக அவர்களை பிரிந்து தந்தையுடன் வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பவுலிராஜூ உயிரிழந்தார். தந்தை உயிரிழந்ததால் பிள்ளைகள் இடையே சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல், பவுலிராஜூ அரசு ஆசிரியர் என்பதாலும், அவருக்கு அரசிடம் இருந்து வர வேண்டிய செட்டில்மெண்ட் பணம் யாருக்கு என 3 பேர் இடையே வாக்குவாதம் நடந்தது.

3 பேரும் சமாதானமாகாததால், தனது அண்ணனையும், தம்பியையும் கிருஷ்ண வேணி கொலை செய்ய திட்டமிட்டார்.

அதன்படி கிருஷ்ணவேணி, கடந்த டிசம்பர் 10-ந்தேதி கோபிகிருஷ்ணாவை அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்துள்ளார். அதன்பின்னர் தனது துப்பட்டாவை கொண்டு கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.

மேலும் அவரது தம்பியை நவம்பர் 26-ந்தேதி அன்று அங்குள்ள ஆற்று கால்வாள்ளி தள்ளி கொன்றார். இருவரது உடல்களும் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், இந்த கொலைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணவேனி தனி ஆளாக கொலை செய்திருக்க முடியாது என்பதால் அவருடன் பழகி வந்த வாலிபர் ஒருவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com