search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "knife"

    • மதுக்கடையில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.92 ஆயிரம் பறிக்கப்பட்டது.
    • மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வலையபட்டியில் மதுக்கடை உள்ளது. இங்கு விற்பனையாளராக ேவலை பார்ப்பவர் முருகேசன் (வயது40). நேற்று இரவு விற்பனையை முடித்து விட்டு பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். அவருடன் விற்பனை யாளர்கள் அய்யனார், தனசேகர் ஆகியோர் இருந்தனர்.

    அப்போது 3 மர்மநபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென கத்தியை காட்டி மிரட்டி பணத்தை தருமாறு கேட்டனர். ஆனால் முருகே சன் பணம் தராமல் பெட்டியை மறைக்க முயன்றார். உடனே அந்த மர்ம நபர்கள் அவரை தாக்கி கண்ணிமைக்கும் நேரத்தில் பணப் பெட்டியை பறித்தனர். பின்னர் தாங்கள் கொண்டு வந்தி ருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். பணப்பெட்டியில் ரூ.92 ஆயிரம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பெருங்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விற்பனையாளர்களிடம் விசாரணை நடத்தினர். ேமலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மதுக்கடை விற்பனையாளர் முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காண்டிராக்டரிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்யப்பட்டது.
    • அவரை கைது செய்த போலீசார் எதற்காக ஆயுதங்களை வைத்திருந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மதிச்சியம் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பானுகோபன்(வயது36). கட்டிட காண்டிரக்டரான இவர், சம்பவத்தன்று இரவு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்துச் சென்றான். இதுகுறித்த புகாரின் பேரில் மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், வழிப்பறியில் ஈடுபட்டது ஆழ்வார்புரம் வைகை வடகரையை சேர்ந்த மாரிமுத்து மகன் விஜய்(27) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை தெற்குவாசல் போலீசார் சம்பவத்தன்று மகால் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மகால் 4-வது தெருவில் காளவாசலை சேர்ந்த பாண்டி மகன் நாகேந்திரன்(19) என்பவர் வாளுடன் சுற்றித்திரிந்தார். அவரை கைது செய்த போலீசார் எதற்காக ஆயுதங்களை வைத்திருந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கத்தியை காட்டி வழிப்பறி செய்த வாலிபரை கைது செய்தனர்.
    • எதற்காக கத்தியுடன் சுற்றித்திரிந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை செல்லூர்அருள்தாஸ்புரத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 55).இவர் செல்லூர் 50 அடி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்லபாண்டியிடம் இருந்து ரூ. 1300- ஐ பறித்து சென்றார்.

    இந்த சம்பவம் குறித்து செல்லப்பாண்டி செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட செல்லூர் குலமங்கலம் மெயின் ரோடு அன்னை சத்யா நகரை சேர்ந்த ஜெயம் மகன் கழுவ நாதன் என்ற ரஞ்சித் குமாரை (27) கைது செய்தனர்.

    சுப்பிரமணியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ரகுநாத் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது முத்துப்பட்டி பகுதியில் கத்தியுடன் பதுங்கியிருந்த சதீஷ்குமார்(32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் எதற்காக கத்தியுடன் சுற்றித்திரிந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோஷின், மனைவி மற்றும் குழந்தையுடன், ஆண்டிபாளையம் முல்லை நகரில் வசித்து வருகிறார்.
    • அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம்.

    திருப்பூர் :

    மது போதையில் தனக்கு தானே கத்தியால் குத்திக்கொண்ட நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பீகாரை சேர்ந்த மோஷின், (36). மனைவி மற்றும் குழந்தையுடன், ஆண்டிபாளையம் முல்லை நகரில் வசித்து வருகிறார்.

    பனியன் தொழிலாளியான அவருக்கு மதுப்பழக்கம் உள்ளது. அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம். நேற்றும் வழக்கம் போல் மது அருந்தி விட்டு வந்த அவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.

    சிறிது நேரத்தில் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து தன்னைத் தானே பல இடங்களில் குத்திக் கொண்டு மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிமருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து திருப்பூர் மத்திய பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரில் வந்த கும்பல் சத்யபிரகாஷை கத்தியால் குத்தி உருட்டுக்கட்டையால் தாக்கியது.
    • டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் பேரையூர் சமத்துவ புரத்தை சேர்ந்தவர் சங்கரன். இவரது மகன் சத்யபிரகாஷ் (வயது23). கல்லூரி மாணவரான இவர் சம்பவத்தன்று ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் ஆடுகள் மீது மோதுவது போல் சென்றது. இதனை சத்யபிரகாஷ் தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த காரில் வந்த கும்பல் சத்யபிரகாஷை கத்தியால் குத்தி உருட்டுக்க ட்டையால் தாக்கியது.

    இதுகுறித்த புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியர் பாலமுருகன், பாறைப்பட்டி முனியாண்டி உள்பட 4 பேரிடம் விசார ணை நடத்தி வருகின்றனர்.

    • தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது செய்யப்பட்டார்.
    • திருவிழாவில் சாமி கும்பிட்டு விட்டு பூர்விக வீட்டிற்கு சென்றனர்.

    விருதுநகர்

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது42). இவர்களது அண்ணன் இவரது அண்ணன் சோமு (53). இவர்களுக்கு விருதுநகர் அருகே உள்ள பாவாலி சங்கரநாராயணபுரத்தில் பூர்வீக வீடு உள்ளது. இந்த நிலையில் இவர்கள் குடும்பத்துடன் விருதுநகர் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவிற்காக சென்றனர்.

    திருவிழாவில் சாமி கும்பிட்டு விட்டு பூர்விக வீட்டிற்கு சென்றனர். அங்கு வைத்து சுந்தர், சோமு இருவரும் மது குடித்துள்ளனர். அப்போது குடும்பப் பிரச்சனை தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றிய கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த சோமு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுந்தரை குத்தினார்.

    உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுந்தரின் மகன் அரவிந்த் ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சோமுவை கைது செய்தனர்.

    • மனைவியுடன் தொழிற்சாலை விடுதியில் தங்கி உள்ளார்.
    • பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் பகுதியில் தனியார் தொழிற்சாலை செயல்படுகிறது. இங்கு தென்காசியை சேர்ந்த சுடலை முத்து என்பவரது மகன் கனி(வயது 21) என்பவர் கடந்த 4 மாதமாக வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் தேவகோட்டையைச் சேர்ந்த முஸ்தபா என்பவரது மகன் அசாருதீன்(24) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். அசாருதீனுக்கு திருமணம் ஆகிவிட்டது. மனைவியுடன் தொழிற்சாலை விடுதியில் தங்கி உள்ளார். அதன் அருகே உள்ள அறையில் கனி தங்கி உள்ளார். சம்பவத்தன்று அசாருதீனுக்கும் அவர் மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் அவரது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதனை அருகில் இருந்த கனி ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அசாருதீன் வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து கனியின் முகம் மற்றும் கழுத்து ஆகிய இடங்களில் குத்தியுள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

    மற்ற தொழிலாளர்கள் ஓடிவந்து கனியை காப்பாற்றி பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • வீச்சரிவாளுடன் வந்து பைக் திருடிய வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    • தலைமறைவான அவர்களை தேடி வருகிறார்கள்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள தினையத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்தி. இவரது மகன் ரமேஷ்.

    இவர் வழக்கம் போல் தனது இரு சக்கர வாகனத்தை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்கச் சென்றுவிட்டார். காலை எழுத்து பார்த்தபோது பைக் காணவில்லை.

    பக்கத்து வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு காமிராவை ரமேஷ் ஆய்வு செய்தபோது 2 வாலிபர்கள் வீச்சரிவாளு டன் நள்ளிரவில் பைக்கை திருடிச் சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து தொண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த வாலிபர்கள் திருட்டை தடுக்கச் சென்றால் வீச்சரி வாளால் கொலை செய்ய வும் தயங்க மாட்டார்கள் என்ற நிலை உள்ளதாக இந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்த திருடர்கள் யார்? வேறு திருட்டு அல்லது கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளவர்களா? என தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறை வான அவர்களை தேடி வருகிறார்கள்.

    • குடிபோதையில் தகராறு செய்த மகனை, தந்தை கத்தியால் வெட்டிார்.
    • கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள எஸ்.ராமச்சந்திராபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் மலைச்செல்வன். இவரது மனைவி கல்யாணி. இவர்களுக்கு சூர்யபிரகாஷ்(வயது21) என்ற மகன் உள்ளார். சம்பவத்தன்று சூர்யபிரகாஷ் வீட்டிற்கு குடித்துவிட்டு வந்து தாய் கல்யாணியிடம் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து மலைச்செல்வனுக்கு, அவர் போனில் தகவல் தெரிவித்தார்.

    இந்தநிலையில் இரவு மலைச்செல்வன் வீட்டிற்கு வந்தபோது சூர்யபிரகாஷ் வாசலில் குடிபோதையில் நின்று கொண்டிருந்தார். அதைப்பார்த்து மலைச்செல்வன் அவரை கண்டித்தார். ஆனால் தந்தையுடனும் சூர்யபிரகாஷ் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மலைச்செல்வன், சூர்யபிரகாஷ் வைத்திருந்த கத்தியை பிடுங்கி அவரை கை, கால்களில் வெட்டினார். சூர்யபிரகாஷின் நண்பர்கள் அவரை மீட்டு வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து கல்யாணி கிருஷ்ணன் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரூரில் வெவ்வேறு இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தனர்
    • கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கரூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த திருநாவுக்கரசர்(வயது39) கரூர் தான்தோன்றி மலை டாஸ்மார்க் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது ராயனூரை சேர்ந்த குடியரசு (22) என்பவர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.200 பறித்தார். இது குறித்த புகாரின் பேரில் குடியரசை தாந்தோணிமலை போலீசார் கைது செய்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன்(20). இவர் கரூர் காமராஜர் மார்க்கெட் அருகே நின்று கொண்டிருந்தபோது கரூர் மேற்கு பிரதட்சணம் சாலையை சேர்ந்த சண்முகசுந்தரம் (28) கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தார். இதுகுறித்து விசாரித்த கரூர் டவுன் போலீசார் சண்முகசுந்தரத்தை கைது செய்தனர்.

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த ராஜா(33) கரூர் அருகம்பாளையம் டாஸ்மார்க் கடை அருகே நின்று கொண்டிருந்தபோது நாமக்கல்லை சேர்ந்த ஸ்ரீராம் கார்த்திக்(32) அவரிடம் இருந்த பர்சை திருடி சென்றார். இதுகுறித்து வெங்கமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீராம் கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கரூர் முத்துராஜபுரத்தை சேர்ந்த குணசேகரன்(23) மக்கள் பாதை பிரிவு சாலையில் நடந்து சென்ற போது கரூர் மாவடியான் கோவில் பகுதியை சேர்ந்த வினோத்குமார்(23) அவரிடம் கத்திய காட்டி மிரட்டி பணம் பறித்தார். இதையடுத்து போலீசார் வினோத்குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    தூத்துக்குடியில் அண்ணன்- தம்பிக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    முள்ளக்காடு:

    தூத்துக்குடி சிலோன்காலனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30), இவரது தம்பி சிவசக்தி (22). அண்ணன், தம்பி இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த  பிரபு என்பவருக்கும் கால்நடைகள் வளர்ப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் சிவசக்தி நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பிரபு வளர்த்து வரும் பூனை மீது சிவசக்தியின் மோட்டார் சைக்கிள் மோதியதாக தெரிகிறது.

    இதனால் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரபு கத்தியால் சிவசக்தி மற்றும் மணிகண்டனை குத்தினார். இதில் காயமடைந்த அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இது தொடர்பாக அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பிரபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தன்னை மணிகண்டன் மற்றும் பிரபு தாக்கியதாக பிரபுவும் கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆறுமுகநேரியில் இளம்பெண் ஒருவரை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி காணியாளர் தெருவில் வசித்து வருபவர் ராஜா (வயது 35). இவரது மனைவி முத்துசெல்வி (33). இவர்களின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் மாரியப்பன் (23). மாரியப்பன் தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி ராஜாவிடம் அடிக்கடி பண உதவி பெற்று வந்தாராம். இதனிடையே இருவருக்குமிடையே கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக தகராறு நடந்து விரோதம் ஏற்பட்டுள்ளது. 

    இந்த நிலையில் நேற்று மாலை வீட்டிலிருந்த முத்துசெல்வியிடம் மாரியப்பன் உனது கணவனை எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு முத்துசெல்வி, அவர் கடைக்கு சென்றுள்ளார் என்று பதில் கூறியுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மாரியப்பன் தான் வைத்திருந்த கத்தியால் முத்து செல்வியை குத்தியுள்ளார். கையில் பலத்த காயமடைந்த முத்து செல்வி சத்தம் போட்டுள்ளார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்து பலரும் திரண்டு வந்தனர். இதனால் மாரியப்பன் அங்கிருந்து சென்றுவிட்டார்.

    உடனடியாக முத்துசெல்வி காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சப்- இன்ஸ்பெக்டர் பிரபகுமார், இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் மாரியப்பனை தேடி வருகின்றனர்.
    ×