காண்டிராக்டரிடம் கத்தி முனையில் வழிப்பறி

காண்டிராக்டரிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்யப்பட்டது. அவரை கைது செய்த போலீசார் எதற்காக ஆயுதங்களை வைத்திருந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
காண்டிராக்டரிடம் கத்தி முனையில் வழிப்பறி
Published on

மதுரை

மதுரை மதிச்சியம் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பானுகோபன்(வயது36). கட்டிட காண்டிரக்டரான இவர், சம்பவத்தன்று இரவு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்துச் சென்றான். இதுகுறித்த புகாரின் பேரில் மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், வழிப்பறியில் ஈடுபட்டது ஆழ்வார்புரம் வைகை வடகரையை சேர்ந்த மாரிமுத்து மகன் விஜய்(27) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை தெற்குவாசல் போலீசார் சம்பவத்தன்று மகால் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மகால் 4-வது தெருவில் காளவாசலை சேர்ந்த பாண்டி மகன் நாகேந்திரன்(19) என்பவர் வாளுடன் சுற்றித்திரிந்தார். அவரை கைது செய்த போலீசார் எதற்காக ஆயுதங்களை வைத்திருந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com