search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Arumuganeri"

  • தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி அனைத்து துறைகளையும் பார்வையிட்டு குறை, நிறைகளை கேட்டறிந்தார்.
  • இதன்படி காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு 2,5,6,13 ஆகிய வார்டு பொதுமக்கள் பயனடைந்தனர்.

  ஆறுமுகநேரி:

  தமிழகத்தின் 138 நகராட்சி களில் தேர்வு செய்யப்பட்ட 8 நகராட்சிகளில் 'மக்களுடன் முதல்வர்' நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது.

  இதனை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கானொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இவற்றில் காயல்பட்டினம் நகராட்சியும் ஒன்று ஆகும்.

  காயல்பட்டினம் நகராட்சி யின் சார்பில் ஜலாலியா மண்ட பத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் வருவாய்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, மருத்துவத்துறை, காவல்துறை, மாவட்டத் தொழில் துறை, சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் உள்பட 18 அரசு துறையினர் கலந்துக்கொண்ட னர்.

  இதில் பொதுமக்களின் குறைகள் மற்றும் புகார் மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கணினி மூலம் அனுப்பி ரசீது வழங்கப்பட்டது. இதன் மூலம் 465 மனுக்கள் பெறப்பட்டன. அனைத்தும் முதல்- அமைச்ச ரின் நேரடி பார்வைக்கு அனுப்பி வைக்கப்ப ட்டன. அப்போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி அனைத்து துறைகளையும் பார்வையிட்டு குறை, நிறைகளை கேட்டறிந்தார். இதன்படி காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு 2,5,6,13 ஆகிய வார்டு பொதுமக்கள் பயனடை ந்தனர்.நிகழ்ச்சியில் மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் சொர்ணலதா, நகராட்சி மண்டல நிர்வாக இயக்குநர் விஜயலெட்சுமி, நகராட்சி மன்ற தலைவர் முத்துமுகம்மது, துணை த்தலைவர் சுல்தான்லெப்பை, ஆணை யாளர் குமார்சிங், திருச்செந்தூர் தாசில்தார் வாமணன், ஆதிதிராவிடர் நலத்துறை சிறப்பு தாசில்தார் கோபால கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் பொங்கலரசி, தமிழ்நாடு வணிக நல வாரிய உறுப்பினரும் நகராட்சி கவுன்சிலருமான ரெங்கநாதன் என்ற சுகு, ஆறுமுகநேரி பேரூராட்சி துணை த்தலைவர் கல்யாணசுந்தரம், மின்வாரிய செயற்பொறியாளர் இளங்கோ வன், மேற்பார்வை யாளர் குருவம்மாள், சாகுபுரம் உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், உதவி மின்பொறியாளர் ஜெபஸ்சாம், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், காயாமொழி வட்டார மருத்துவ அலுவலர் ஹமீதுஹீல்மி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஹெப்சிபா லைட் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை சமூக பாதுகாப்பு திட்ட சிறப்பு துணை கலெக்டர் ரகுமான் தொகுத்து வழங்கினார்.

  இதன் பிறகு காயல்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கீழ லட்சுமிபுரம் ஆதிதிராவிடர் நல விடுதி ஆகிய இடங்களுக்கு மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

  • மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சிக்கு தமிழக முஸ்லிம் ஜமாஅத் மாநில தலைவர் செய்யது அப்துர்ரகுமான் தலைமை தாங்கினார்.
  • பள்ளி, கல்லூரி மாணவர்களை மது உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாக்கும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  ஆறுமுகநேரி:

  தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு சார்பில் பொன்விழா மாநாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு தைக்காதெரு மகான் சாகிப் அப்பா தர்கா வளாகத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் குர்ஆன் ஓதுதல் ஆகியவை நடந்தன. பின்னர் ஜலாலியா திருமண மண்டபம் அகீதா அரங்கத்தில் உலமாக்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது.

  தொடர்ந்து அரபிக் கல்லூரி மாணவர்களின் சங்கமம், இளைஞர்கள் கருத்தரங்கம், இஸ்லாமிய கண்காட்சி ஆகியவை நடந்தன. மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சிக்கு தமிழக முஸ்லிம் ஜமாஅத் மாநில தலைவர் செய்யது அப்துர்ரகுமான் தலைமை தாங்கினார். சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு மாநில தலைவர் முகம்மது நவ்பல் வரவேற்று பேசினார்.

  கேரள கல்வி அமைப்பின் நிறுவனர் அப்துல் ஹக்கீம் அஸ்ஹரி தொடக்க உரையாற்றினார். தமிழக முஸ்லிம் ஜமாஅத் துணைத் தலைவர் மன்சூர், யூனுஸ், செய்யது சாதிக் அலி, மூஸா, முகைதீன் தம்பிதுரை, ஜவாஹிர், நூருல் ஹக், அப்துல் காதர், அகமது முகைதீன், அரபிக் கல்லூரி முதல்வர் காதர் சாகிபு, காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்துமுகம்மது ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

  அகமது அப்துல் காதிர், அப்துல் ஹக்கீம் இம்தாதி, தேவர்சோலை அப்துல் சலாம், நிஜாமுதீன், கமாலுதீன், தாஜுதீன், செய்யது அப்துர் ரகுமான் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் இப்ராகிம் கலீல் அல்புகாரி பிரார்த்தனை உரை நிகழ்த்தினார்.

  அரபு நாடுகளில் அதிக வேலைவாய்ப்பை பெறும் வகையில் தமிழகத்தில் கூடுதல் அரபி பல்கலைக்கழகங்களை நிறுவிடவும், 7 ஆண்டுகள் அரபி பயிலும் மாணவர்களின் சான்றிதழ்களை அரசு அங்கீகரிக்க வலியுறுத்தியும், பாலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் கொடூர போர் நடவடிக்கைகளை சர்வதேச அமைப்புகள் தடுக்க கோரியும், பள்ளி, கல்லூரி மாணவர்களை மது உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாக்கும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு மாநில பொருளாளர் முகம்மது அன்வரி நன்றி கூறினார்.

  ஏற்பாடுகளை அமைப்பின் மாநில நிர்வாகிகள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் செய்யது அப்பாஸ் அலி, முகமது ஷா, ஜெஸ்முதீன், முகம்மது ஹசீம், மன்னர் அப்துல்லா, சுஐபு ரகுமான், செய்யிது முகம்மது புகாரி, சுலைமான் உள்பட பலர் செய்திருந்தனர்.

  • சென்னையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் ரூ.25,000 ரொக்க பரிசை வழங்கினர்.
  • பரிசு பெற்ற மாணவர்களுக்கு எல்.கே மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

  ஆறுமுகநேரி:

  மேல்நிலைப் பள்ளிகளுக்கு இடையில் நடந்த புத்தாக்க மேம்பாட்டு திட்ட அறிவியல் கண்டுபிடிப்புக்கான போட்டியில் காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப் பள்ளியின் மாணவர் குழுவினர் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர். வாகன கதவு திறப்பு கண்காணிப்பு கருவி என்னும் தலைப்பில் கண்டுபிடிப்பில் வெற்றியைப் பெற்ற இந்த குழுவினர் தொடர்ந்து மாநில அளவிலும் இடம்பெற்றனர்.

  இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் ரூ.25,000 ரொக்க பரிசை வழங்கினர். பரிசு பெற்ற மாணவர்களான முகம்மது அப்துல் காதர் ஆரிஷ் ,மஹ்மூது மிக்தாத், சேக் முகம்மது அலி,நாக அனு கார்த்திக்,நாக அனு சேஷன் ஆகியோருக்கும் அவர்களுக்கு பயிற்சி அளித்த அறிவியல் ஆசிரியர் ராஜாவுக்கும் எல்.கே மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் செய்யது முகைதீன் தலைமை தாங்கினார்.ஆட்சி மன்ற குழு உறுப்பினர் லெப்பை தம்பி முன்னிலை வகித்தார். முதுகலை ஆசிரியர் சுபைர் அலி வரவேற்று பேசினார்.உதவி தலைமை ஆசிரியர்கள் முகம்மது சித்திக்,சேக் பீர் முகம்மது காமில் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் ஆசிரியர்களும், மாணவர்களும் பங்கேற்றனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் மணிகண்டன் நன்றி கூறினார்.

  • 2-வது நாளான நேற்று காலையில் சோமாஸ்கந்தர், சோமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது.
  • மாலையில் சோமநாத சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அம்பாளுக்கு தோள் மாலை மாற்றுதல் நடைபெற்றது.

  ஆறுமுகநேரி:

  ஆறுமு கநேரி சோம சுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவி லில் ஐப்பசி திருக்கல்யா ண விழா கடந்த 7-ந்தேதி முகூர்த்த கால் நாட்டுத லுடன் தொடங்கியது.

  முன்னதாக விநாயகர் பூஜை நடந்தது. மாலையில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், திருகாப்பு கட்டுதல் மற்றும் தீபாரதனை நடைபெற்றன.

  2- வது நாளான நேற்று காலையில் சோமாஸ்கந்தர், சோமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக தீபாரா தனை நடந்தது. பின்னர் சோமசுந்தரி அம்பாள் தவக்கோலத்தில் பூஞ்சப்ப ரத்தில் எழுந்தருளி தபசு மண்டபத்தில் அருள் பாலித்தார்.

  மாலையில் சோமநாத சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அம்பாளுக்கு தோள் மாலை மாற்றுதல் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி- அம்பாளுக்கு சேர்க்கை தீபாராதனையும், கதிர் குளிப்பு அபிஷேகமும் நடந்தன.

  பின்னர் மங்கல வாத்தி யம் முழங்க அம்பாளுக்கு சுவாமி திருமாங்கல்யம் பூட்டுதல் நடைபெற்றது. பூஜை வைபவங்களை ஆலய பூஜகர் அய்யப்ப பட்டர், சண்முகம் பட்டர், பிரகாஷ், விக்னேஷ், விஜய், ஓதுவார்கள் சங்கர நயினார், தெரிசை அய்யப்பன், இளைய பெருமாள் குழு வினர் செய்திருந்தனர். மண்டகப்படிதாரர்கள் அரிகிருஷ்ணன், பூபால் ராஜன், தியாகராஜன், பேராசிரியர் அசோக்குமார், தங்கபாண்டியன், பால விக்னேஸ்வரன், அபிஷேக், கீழவீடு பாஸ்கர், முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன்ராஜ், ஜீவா, அனந்த நாராயணன், விநாயக மூர்த்தி, சுவாமி முருகன், டாக்டர் வேல்குமார், சுப்பிர மணியன், அய்யப்பன் மற்றும் தங்கமணி, அமிர்த ராஜ், சைவ வேளாளர் சங்க நிர்வாகிகள் சங்கரலிங்கம், நடராஜன், கற்பக விநாயகம், நடராஜ தேவார பக்த ஜன சபை செயலாளர் ராமச் சந்திரன், மோகன், சேகர், ஐகோர்ட் துரை உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  இன்று காலையில் அபிஷேகம் மற்றும் பட்டின பிரவேசம் நடைபெற்றது. தொடர்ந்து 3 நாட்கள் பொன்னூஞ்சல் நடை பெறுகிறது. நிறைவாக தீபாவளியன்று காலை சுவாமி- அம்பாளுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், மாலையில் பூஞ்சப்பரபவனி, பைரவர் பூஜை ஆகியவையும் நடைபெறுகின்றன.

  விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் மணியம் சுப்பையா செய்து வருகிறார்.

  • காயல்பட்டினம் கடற்கரையில் எல்.கே. மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் பனை விதைகள் நடப்பட்டன.
  • தேசிய மாணவர் படையினர் 100 பேர் உள்ளிட்ட மாணவர்கள் ஆயிரம் பனை விதைகளை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடவு செய்தனர்.

  ஆறுமுகநேரி:

  தூத்துக்குடி தேசிய மாணவர் படை தரை பிரிவு அதிகாரி லெப்டினன் கர்னல் பிரதோஷ் உத்தரவின்படி காயல்பட்டினம் கடற்கரையில் எல்.கே. மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் பனை விதைகள் நடப்பட்டன.

  இதன் தொடக்க நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் செய்யது மைதீன் பனை மரத்தின் அவசியம் மற்றும் பயன்களை பற்றி பேசினார். தேசிய மாணவர் படையினர் 100 பேர் உள்ளிட்ட மாணவர்கள் ஆயிரம் பனை விதைகளை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடவு செய்தனர். ஏற்பாடுகளை பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரும், தேசிய மாணவர் படை அலுவலருமான ஷேக் பீர் முகம்மது காமில் செய்திருந்தார்.

  • ஒரு விபத்தில் வரலட்சுமி தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
  • வரலட்சுமியை போலீசார் தேடி கண்டு பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

  ஆறுமுகநேரி:

  ஆறுமுகநேரி காந்தி தெருவை சேர்ந்தவர் பிரம்ம நாயகம். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு வரலட்சுமி (வயது30) என்ற மகள் உள்ளார்.

  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் வரலட்சுமி தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

  இதனிடையே அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வரலட்சுமியை தேடி கண்டு பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

  இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வரலட்சுமி வெளியே சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

  இதுபற்றி பிரம்மநாயகம் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வர லட்சுமியை தேடி வருகின்ற னர்.

  • விழா நாட்களில் தினசரி காலையிலும், மாலையிலும் வழக்கமான பூஜையும், இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.
  • நிறைவு நாளான நேற்று இரவு பூஜையை தொடர்ந்து அம்மனின் பூஞ்சப்பரபவனி தொடங்கியது.

  ஆறுமுகநேரி:

  ஆறுமுகநேரியில் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோவிலில் தசரா திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது.

  விழா நாட்களில் தினசரி காலையிலும், மாலையிலும் வழக்கமான பூஜையும், இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. ஒவ்வொரு நாளும் கிருஷ்ணராகவும், சுப்பிரமணியராகவும், மகாலட்சுமியாகவும், பராசக்தியாகவும், அன்னபூரணியாகவும், சரஸ்வதியாகவும் அம்பாளின் காட்சியருளல் நடந்தது. நிறைவு நாளான நேற்று இரவு பூஜையை தொடர்ந்து அம்மனின் பூஞ்சப்பரபவனி தொடங்கியது. முக்கிய வீதிகளின் வழியாக சென்ற சப்பரபவனி இன்று காலையில் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் தனசேகரன், ராதாகிருஷ்ணன், தங்கப்பாண்டியன் உள்பட பலர் செய்திருந்தனர்.

  • சாலையை ஒட்டிய இடத்தில் இருந்த அந்த மின் கம்பத்தில் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன.
  • இதனை ஆறுமுகநேரி மின்வாரிய உதவி பொறியாளர் ஜெபஸ்சாம், மின்பாதை ஆய்வாளர் மோகன் மற்றும் ஊழியர்கள் சரி செய்தனர்.

  ஆறுமுகநேரி:

  ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பிற்கும் மத்திய பஜார் ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இரும்பிலான மின் கம்பம் ஒன்று போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தது. சாலையை ஒட்டிய இடத்தில் இருந்த அந்த மின் கம்பத்தில் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. எனவே குறிப்பிட்ட அந்த மின் கம்பத்தை அகற்றுமாறு பொதுநல அமைப்புகளின் சார்பில் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

  இந்நிலையில் நேற்று அந்த இடத்தின் அருகே நடந்த கார் விபத்தின் காரணமாக மற்றொரு மின்கம்பம் சேதமடைந்தது.இதனை ஆறுமுகநேரி மின்வாரிய உதவி பொறியாளர் ஜெபஸ்சாம், மின்பாதை ஆய்வாளர் மோகன் மற்றும் ஊழியர்கள் சரி செய்தனர். தொடர்ந்து அவர்கள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு அங்கு புதிய மின்கம்பத்தை அமைத்தனர். அப்போது அருகில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நின்றிருந்த இரும்பு மின் கம்பத்தையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மின்வாரியத்தின் சார்பில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை அப்பகுதி வியாபாரிகளும், பொதுமக்களும் பாராட்டினர்.

  • திருச்செந்தூர் வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் ஆழ்வார்தோப்பு கிராம உதயம் அமைப்பின் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் ஆறுமுகநேரியில் நடந்தது.
  • நிகழ்ச்சியில் கிராம உதயம் சார்பில் 200 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

  ஆறுமுகநேரி:

  திருச்செந்தூர் வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் ஆழ்வார்தோப்பு கிராம உதயம் அமைப்பின் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் ஆறுமுகநேரியில் நடந்தது. திருச்செந்தூர் சார்பு நீதிபதியும், வட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான வசந்குமார் வழிகாட்டுதலின்படி நடந்த இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவர் வரதராஜன் கலந்து கொண்டு பேசினார். மேலும் வக்கீல் சங்க தலைவர் ஜேசுராஜ், துணைத்தலைவர் முத்துக்குமார், அரசு வக்கீல் சாத்ராக், மூத்த வக்கீல்கள் எட்வர்ட், முத்துவேல், பிரித்திவிராஜ், கிராம உதயம் மேலாளர் வேல்முருகன் ஆகியோர் பேசினர்.

  முகாம் ஏற்பாடுகளை கிராம உதயம் அலுவலர் ஆனந்த், திருச்செந்தூர் சட்ட உதவி மைய நிர்வாக அலுவலர் அருள்மணிராஜ் மற்றும் தன்னார்வலர் ராஜேஷ் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கிராம உதயம் சார்பில் 200 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.