என் மலர்
நீங்கள் தேடியது "Request"
- அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஊராட்சிக்குட்பட்ட மாணிக்கவாசகர் நகர், அம்பாள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிகளில் முறையான சாலை வசதிகள் இல்லாமலும், வடிகால்வாய்க்கால் தூர்வாரப்படாமல் கழிவு நீர் தேங்கியும் கானப்படுகிறது. மேலும் ஆங்காங்கே குப்பைத்தொட்டிகள் பராமரிக்கப்படாமல் தெரு ஓரம் மற்றும் குளக்கரைகளில் குப்பைகள் கொட்டப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து எதிர் வருகின்ற மழைக்காலத்திற்குள் சாலைகள் அமைத்தும், வடிகால்வாய்க்கால் மற்றும் குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சாலை வசதி செய்துதர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- கலெக்டரிடம் மனு அளித்தனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே வடக்குமாதவி கிராமத்தில் ஏரிக்கரையிலிருந்து ஊருக்குள் செல்வதற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வடக்குமாதவி 8-வது வார்டு உறுப்பினர் சந்தோஷ் தலைமையில் 100க்கு மேற்பட்டோர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், பெரம்பலூர் அருகே வடக்கு மாதவி கிராமத்தில் ஏரிக்கரை பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நாங்கள் பயன்படுத்தி வந்த தனி நபருடையது. அந்த பாதையை ஒருவர் கிரையம் செய்து வாங்கிவிட்டார். ஆகையால் அந்தபாதையை பயன்படுத்தமுடியவில்லை. ஆகையால் ஏரிக்கரையிலிருந்து வடக்குமாதவி ஊருக்குள் செல்வதற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
- ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- கே.புதூரில் பயன்பாடின்றி கிடக்கும் மருத்துவமனை கட்டிடத்தில் துவங்க வேண்டும்
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே கீழப்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட கே.புதூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில் கீழப்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட கே.புதூர் கிராமத்தில் 1983ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை ஊராட்சி ஒன்றிய அலோபதி மருத்துவமனை வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த மருத்துவ மனைக்கு சொந்த கட்டிடம் கட்ட அரசு 2006ம் ஆண்டு நிதி ஒதுக்கியது. இதற்காக ஊர் மக்கள் சார்பில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அந்த இடத்தில் மருத்துவமனை கட்டிடடம் கட்டப்பட்டு 2013ம்ஆண்டு வரை அலோபதி மருத்துவமனை இயங்கி வந்தது. அரசின் உத்தரவின்பேரில் இந்த மருத்துவமனை மூடப்பட்டது, தற்போது இந்த மருத்துவமனை கட்டிடம் பயன்பாடின்றி கிடக்கிறது. இந்நிலையில் கீழப்பூலியூரில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மருத்துவமனையை கே.புதூரில் பயன்பாடின்றி கிடக்கும் மருத்துவமனை கட்டிடத்தில் துவங்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.
- மர்ம காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது
- இதனால் மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் மர்ம காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், பெரியோர்கள், குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே இந்த மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் மருத்துவக் குழுவினருடன் சேர்ந்து ஆலங்குடி பகுதியில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கூடுதல் பஸ் வசதி இயக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காணியாளம்பட்டி வழியாக இயக்கப்படும்
கரூர்:
கரூர் மாவட்டம், கடவூர் பஞ்சாயத்து யூனியன், காணியாளம்பட்டியில், அரசு பாலிடெக்னிக் கல்லுாரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. கரூர் மாவட்டத்தின், பல்வேறு கிராமப் பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இந்த பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், கரூர், குளித்தலை, கடவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, காணியாளம்பட்டி வழியாக இயக்கப்படும் பஸ்கள், மாணவ, மாணவியர்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே, காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அமைந்துள்ள வழித்தடம் வழியாக கூடுதல் பஸ்களை இயக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குண்டடம் மற்றும் ருத்ராவதி ஆகிய பகுதிகளில் நிா்வாக காரணங்களுக்காக மின் அளவீடு மேற்கொள்ள முடியவில்லை.
- கணக்கீட்டுப் பணியில் குறிப்பிட்டுள்ள தொகையை அக்டோபா் மாதத்துக்கும் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம்:
தாராபுரம் கோட்டம், குண்டடம் மற்றும் ருத்ராவதி பகுதி மக்கள் கடந்த ஆகஸ்ட் மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய தாராபுரம் கோட்ட செயற்பொறியாளா் எஸ்.காா்த்திகேயன் (பொறுப்பு) விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,
தாராபுரம் கோட்டம், வடக்கு குண்டடம் பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட குண்டடம் மற்றும் ருத்ராவதி ஆகிய பகுதிகளில் நிா்வாக காரணங்களுக்காக மின் அளவீடு மேற்கொள்ள முடியவில்லை.எனவே, இப்பகுதி மின் நுகா்வோா் கடந்த ஆகஸ்ட் மாதம் கணக்கீட்டுப் பணியில் குறிப்பிட்டுள்ள தொகையை அக்டோபா் மாதத்துக்கும் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- செட்டிகுளத்தில் புதிதாக தார் சாலை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
- ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மோசமாக காட்சியளிக்கும்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் முன்பு தொடங்கி குன்னுமேடு குடியிருப்பு வழியாக சிற்றேரி கடைகாலுக்கு செல்லும் பாதை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலையாக போடப்பட்டது. தற்போது இந்த தாா் சாலை பழுதடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மோசமாக காட்சியளிக்கிறது.
மேலும் போக்குவரத்துக்கு லாயகற்ற நிலையில் உள்ளது. இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புதிதாக தார் சாலை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குப்பைகள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் உள்ள
கரூர்:
கரூர், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் மார்க்கெட் சாலை, சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக அதிகளவில் குப்பைகள் தேங்கியுள்ளன. இவற்றை அகற்றாததால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள், குப்பைகள் நிறைந்த பகுதியில் செல்ல முடியவில்லை. மேலும், தினமும், குப்பைகள் தேங்கி வருவதால், அவை அழுகி துர்நாற்றம் வீசுகிறது. எனவே, தினமும் குப்பை அகற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- நகர மன்ற உறுப்பினர்களின் கூட்டம்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர்மன்ற அலுவலகத்தில் நகர மன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமை வகித்தார்.
நகராட்சி ஆணையர் மூர்த்தி வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சியில் ஒவ்வொரு வார்டு களையும் நான்கு பகுதியாக பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சபை குழுவினர், மற்றும் நான்கு வார்டுகளுக்கும் ஒரு செயலாளர் அமைக்க வேண்டுமென்று ஜெயங்கொண்டம் நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நகராட்சி உறுப்பினர்கள் செல்வராஜ், அம்பிகாபதி, ரெங்கநாதன், ஜோதிலட்சுமி, மனோன்மணி, பூபதி, சுப்ரமணியன், சேகர், கிருபாநிதி, வெற்றி வேல், பாண்டியன், துர்கா, ஆனந்த், சமந்தா, பாய், மீனாட்சி, நடராஜன் மற்றும் நகராட்சி பொறியாளர் ராஜகோபாலன் பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உறுப்பினர் ரங்கநாதன் பேசும் போது, பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகள் தூய்மைப்படுத்த வேண்டும். மேலும் அனைத்து பகுதிகளில் உள்ள வார்டுகளில் சாலைகள் மிக மோசமாக உள்ளது அதை உடனடியாக செப்பனிட வேண்டும் எனக் கூறினார்.
மற்ற உறுப்பினர்களும் அவரவர் வார்டுகளில் உள்ள அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினர்.
கூட்டத்தின் இறுதியில் நகராட்சி மேலாளர் அன்புச்செல்வி நன்றி கூறினார்.
- வடக்குப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் காலை 10 மணிக்கு மேல் திறந்து, மதியம் ஒரு மணிக்குள் அடைத்து விடுகின்றனர்.
- ரேஷன் கடைகளை உரிய நேரத்தில் திறந்து, மக்களுக்கு பொருட்கள் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு பொதுச்செயலாளர் சரவணன் திருப்பூர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூரில் உள்ள ரேஷன் கடைகள் சரியான நேரத்துக்கு திறப்பதில்லை. வடக்குப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் காலை 10 மணிக்கு மேல் திறந்து, மதியம் ஒரு மணிக்குள் அடைத்து விடுகின்றனர். மாலை, 4 மணிக்கு திறந்து 5:30 மணிக்குள் அடைத்து விட்டு செல்கின்றனர். மாதந்தோறும் 1, 30, 31-ந் தேதிகளில் கடைகளை திறப்பதே இல்லை. போயம்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் 31ந் தேதி விடுமுறை என இரண்டு நாட்களுக்கு முன்னரே தகவல் பலகையில் எழுதி வைத்து விடுகின்றனர். ரேஷன் கடைகளை உரிய நேரத்தில் திறந்து, மக்களுக்கு பொருட்கள் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ராஜபாளையம் தொகுதியில் நடந்த கிராமசபை கூட்டங்களில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.
- பொதுமக்கள் அடிப்படை வசதி வேண்டி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தொகுதி யில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு செட்டியார்பட்டி பேரூராட்சி 9-வது வார்டு பிள்ளைமார் சமூக மண்டபத்திலும், சேத்தூர் பேரூராட்சி கோட்டைவிநாயகர் கோவில் அருகிலுள்ள மண்டபத்திலும் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ தலைமையில் கிராமசபை கூட்டங்கள் நடந்தது.
இதில் எம்.எல்.ஏ. பேசுகையில், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை நடப்பது போல் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் மக்களின் குறைகளை கண்டறிய முதல்வர் சென்னையில் பகுதி சபை கூட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார்.
இன்று கிராமங்களில் நடப்பது போல் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பகுதி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் நகர் பகுதிகளில் நடைபெறும் இந்த கூட்டம் பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து குறைகளை தீர்க்க பெரிதும் உதவியாக இருக்கும் என்றார்.
புத்தூர் ஊராட்சியிலும் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் அடிப்படை வசதி வேண்டி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்கு எம்.எல்.ஏ. பதிலளிக்கையில், பி.டி.ஓ. மூலம் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நிகழ்வில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூராட்சி சேர்மன்கள் ஜெயமுருகன், பாலசுப்பிரமணியன், ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார், செயல் அலுவலர்கள் சந்திரகலா, வெங்கிடகோபு, பேரூர் செயலாளர் இளங்கோவன், பேரூராட்சி துணை தலைவர் விநாயகமூர்த்தி, காளீஸ்வரி, ஒன்றிய துணை செயலாளர் குமார், புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ், கிளார்க் கருப்பசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக எந்நேரமும் ஆடுகள்மாடுகள் சுற்றித் திரிகின்றன.
- குடிநீர், தெருவிளக்கு போன்ற பிரச்சினைக்கு தீர்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை அளித்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி, நகராட்சி 19 வது வார்டில் பகுதி சபை கூட்டம் நகர மன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது
இதில் நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன், நகராட்சி ஆணையர் அப்துல் ஹாரிஸ்நகர மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர்கள், வார்டு பொறுப்பாளர்கள் அனைத்து கட்சியை சேர்ந்த வார்டு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 19-வது வார்டு இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் கூறுகையில் சாலைகளில் பொதும க்களுக்கும்,வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக எந்நேரமும் ஆடுகள்மாடுகள் சுற்றித் திரிகின்றன.
இதனை பிடித்து அப்புறப்படுத்துவதோடு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும் 19-வது வார்டில் அனைத்து அடிப்படை வசதிகளையும் முறையாக, உடனடியாக செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும் ஜவுளி கடை தெரு, பாரதியார் தெரு, வேதை தெருவில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்ற பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கைகளை தெரிவித்தனர்
அப்போது நகரசபை தலைவர் கவிதா பாண்டியன் பொதுமக்களின் கோரிக்கையை மனுக்களாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மற்றும் பிடாரி குளம், தச்சங்குளத்சுதை சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொ ள்ளப்பட்டது. இதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.