என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "application"

    • "செங்கோட்டை மட்டும் ஏன்? ஆக்ரா, பதேபுர் சிக்ரி போன்ற இடங்களில் கோட்டைகள் ஏன் இல்லை”
    • தவறான எண்ணத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு என்று தெரிவித்தனர்.

    முகலாயர் ஆட்சி காலத்தில் டெல்லியில் புகழ்பெற்ற செங்கோட்டை கட்டப்பட்டது. இந்தநிலையில் கடைசி முகலாய அரசர் பகதுார் ஷா ஜாபரின் வாரிசு என்று கூறிக்கொண்டு சுல்தானா பேகம் என்ற பெண் டெல்லி செங்கோட்டை தனக்குத்தான் சொந்தம் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

    "செங்கோட்டை மட்டும் ஏன்? ஆக்ரா, பதேபுர் சிக்ரி போன்ற இடங்களில் கோட்டைகள் ஏன் இல்லை" என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர் தவறான எண்ணத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு என்று கூறி சுப்ரீம் கோர்ட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    கடந்த ஆண்டு டெல்லி ஐகோர்ட்டில் இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2022-23-ம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
    • சமூக நல செயல்பாடுகளில் பங்கேற்றல் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில், மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் ஊரக மற்றும் நகர்புற கூட்டமைப்புகளுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் 2022-23 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும், கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள சுயஉதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளலிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுயஉதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகியவற்றிற்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் மணிமேகலை விருது வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மணிமேகலை விருது பெற தகுதியுள்ள சுயஉதவி குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் நகர்புறங்களில் சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவை முறையான கூட்டம் நடத்துதல், சேமிப்பு செய்ததை முறையாக சேமித்தல், வங்கி கடன் பெற்று இருத்தல், குழு உறுப்பினர்கள் பொருளாதார மேம்பாடு அடைதல், உறுப்பினர்கள் திறன் வளர்ப்பு மற்றும் வாழ்வாதார பயிற்சி பெற்றிருத்தல், சமூக நல செயல்பாடுகளில் பங்கேற்றல் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    மேலும், மணிமேகலை விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தகுதியான கிராமப்புற சமுதாய அமைப்புகள் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த வட்டார இயக்க மேலாளரிடமும், நகர்ப்புற சமுதாய அமைப்புகள் சம்மந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, சமுதாய அமைப்பாளர்களிடம் தொடர்புகொண்டு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்ட தகவலை தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    • மது கடை ஏலம் எடுப்பதற்கான விண்ணப்பத்தை 1.32 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
    • சரூர் நகர் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு மட்டும் 10,908 பேர் விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள 2,620 மதுக்கடைகள் ஏலம் விடுவதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி கடந்த 4-ந் தேதி தொடங்கியது.

    விண்ணப்பபடிவத்திற்கு ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் எனவும், விண்ணப்பத்திற்கு செலுத்தப்பட்ட பணத்தை திரும்ப பெற முடியாது எனவும் அறிவித்து இருந்தனர்.

    அதன்படி மது கடை ஏலம் எடுப்பதற்கான விண்ணப்பத்தை 1.32 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். தெலுங்கானா மாநிலத்தின் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் ஏராளமானவர்கள் போட்டி போட்டு விண்ணப்பித்து இருந்தனர்.

    தெலுங்கானா மாநிலத்தவர்கள் மட்டுமின்றி ஆந்திராவை சேர்ந்தவர்களும் விண்ணப்பித்தனர்.

    விண்ணப்ப படிவம் மூலம் தெலுங்கானா அரசுக்கு ரூ.2,639 கோடி வருவாய் கிடைத்தது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பம் வழங்கிய போது 69 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதன் மூலம் ரூ.1.370 கோடி வசூலானது. கடை உரிமை கட்டணம் மூலம் ரூ.3,500 கோடி வருவாய் கிடைத்தது.

    தற்போது தலைநகர் ஐதராபாத்தில் மட்டும் 615 கடைகள் உள்ளது. ஐ.டி கார்டரில் உள்ள செரிலிங்கம், விமான நிலையம் அமைந்துள்ள ஷம்ஷாபாத் பகுதியில் உள்ள கடைகளுக்கு கடும் கிராக்கி நிலவியது.

    சரூர் நகர் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு மட்டும் 10,908 பேர் விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒரு சொட்டு மது கூட விற்பனை செய்யாமல் ரூ.2,639 கோடி அள்ளியுள்ளனர்.

    ×