search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மதுக்கடை ஏல விண்ணப்பம் மூலம் ரூ.2,639 கோடி வருமானம்- ஒரு சொட்டு மது கூட விற்பனை செய்யாமல் லாபம்
    X

    மதுக்கடை ஏல விண்ணப்பம் மூலம் ரூ.2,639 கோடி வருமானம்- ஒரு சொட்டு மது கூட விற்பனை செய்யாமல் லாபம்

    • மது கடை ஏலம் எடுப்பதற்கான விண்ணப்பத்தை 1.32 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
    • சரூர் நகர் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு மட்டும் 10,908 பேர் விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள 2,620 மதுக்கடைகள் ஏலம் விடுவதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி கடந்த 4-ந் தேதி தொடங்கியது.

    விண்ணப்பபடிவத்திற்கு ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் எனவும், விண்ணப்பத்திற்கு செலுத்தப்பட்ட பணத்தை திரும்ப பெற முடியாது எனவும் அறிவித்து இருந்தனர்.

    அதன்படி மது கடை ஏலம் எடுப்பதற்கான விண்ணப்பத்தை 1.32 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். தெலுங்கானா மாநிலத்தின் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் ஏராளமானவர்கள் போட்டி போட்டு விண்ணப்பித்து இருந்தனர்.

    தெலுங்கானா மாநிலத்தவர்கள் மட்டுமின்றி ஆந்திராவை சேர்ந்தவர்களும் விண்ணப்பித்தனர்.

    விண்ணப்ப படிவம் மூலம் தெலுங்கானா அரசுக்கு ரூ.2,639 கோடி வருவாய் கிடைத்தது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பம் வழங்கிய போது 69 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதன் மூலம் ரூ.1.370 கோடி வசூலானது. கடை உரிமை கட்டணம் மூலம் ரூ.3,500 கோடி வருவாய் கிடைத்தது.

    தற்போது தலைநகர் ஐதராபாத்தில் மட்டும் 615 கடைகள் உள்ளது. ஐ.டி கார்டரில் உள்ள செரிலிங்கம், விமான நிலையம் அமைந்துள்ள ஷம்ஷாபாத் பகுதியில் உள்ள கடைகளுக்கு கடும் கிராக்கி நிலவியது.

    சரூர் நகர் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு மட்டும் 10,908 பேர் விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒரு சொட்டு மது கூட விற்பனை செய்யாமல் ரூ.2,639 கோடி அள்ளியுள்ளனர்.

    Next Story
    ×