கூடுதல் பஸ் வசதி இயக்க மாணவர்கள் கோரிக்கை

கூடுதல் பஸ் வசதி இயக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காணியாளம்பட்டி வழியாக இயக்கப்படும்
கூடுதல் பஸ் வசதி இயக்க மாணவர்கள் கோரிக்கை
Published on

கரூர்:

கரூர் மாவட்டம், கடவூர் பஞ்சாயத்து யூனியன், காணியாளம்பட்டியில், அரசு பாலிடெக்னிக் கல்லுாரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. கரூர் மாவட்டத்தின், பல்வேறு கிராமப் பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இந்த பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், கரூர், குளித்தலை, கடவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, காணியாளம்பட்டி வழியாக இயக்கப்படும் பஸ்கள், மாணவ, மாணவியர்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே, காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அமைந்துள்ள வழித்தடம் வழியாக கூடுதல் பஸ்களை இயக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com