ரேஷன் கடைகளை சரியான நேரத்துக்கு திறக்க வேண்டுகோள்

வடக்குப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் காலை 10 மணிக்கு மேல் திறந்து, மதியம் ஒரு மணிக்குள் அடைத்து விடுகின்றனர். ரேஷன் கடைகளை உரிய நேரத்தில் திறந்து, மக்களுக்கு பொருட்கள் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

திருப்பூர்:

அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு பொதுச்செயலாளர் சரவணன் திருப்பூர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

திருப்பூரில் உள்ள ரேஷன் கடைகள் சரியான நேரத்துக்கு திறப்பதில்லை. வடக்குப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் காலை 10 மணிக்கு மேல் திறந்து, மதியம் ஒரு மணிக்குள் அடைத்து விடுகின்றனர். மாலை, 4 மணிக்கு திறந்து 5:30 மணிக்குள் அடைத்து விட்டு செல்கின்றனர். மாதந்தோறும் 1, 30, 31-ந் தேதிகளில் கடைகளை திறப்பதே இல்லை. போயம்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் 31ந் தேதி விடுமுறை என இரண்டு நாட்களுக்கு முன்னரே தகவல் பலகையில் எழுதி வைத்து விடுகின்றனர். ரேஷன் கடைகளை உரிய நேரத்தில் திறந்து, மக்களுக்கு பொருட்கள் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com