search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Village Council Meeting"

    • கருவேலம்பட்டி பழங்குடியினர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • பள்ளிக்கு தலைமை ஆசிரியரும், உதவி ஆசிரியரும் சரியாக வராததை கண்டித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் அருகே கீழ்மலை வடகவுஞ்சி ஊராட்சி கருவேலம்பட்டி பழங்குடியினர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    வடகவுஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் தோழி ஆனந்தன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சிவபாலன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் துளசிதாசன் வரவேற்று பேசினர்.

    கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 15-ந்து மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் ஒருவர் பணியாற்ற வேண்டும். ஆனால் தலைமை ஆசிரியரும், உதவி ஆசிரியரும் சரியாக வராததை கண்டித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பள்ளிக்கு வந்திருந்த உதவி ஆசிரியர் புனிதன் கூறுகையில் இப்பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் வீரராம்பிரபு கள்ளக்கிணறு ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு மாற்றப்பட்டார். கருவேலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தற்போது தலைமை ஆசிரியர் இல்லை. நான் ஒருவர் மட்டும் தான் உள்ளேன்.

    நான் அலுவலக வேலையாக செல்வது. கல்வி உயர் அதிகாரிகள் பல பணிகளை செய்ய சொல்வதால் என்னாலூம் இவ்வளவு தூரம் பள்ளிக்கு வந்து செல்ல முடியவில்லை என்றார்.

    பின்னர் பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு கொடுத்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஆட்சியர் நீ சரியாகதான் பேசினாய் என்று பதில் அளித்தார்
    • போலீசார் அங்கிருந்து அழைத்து சென்று வெளியே விட்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம் கிரிசமுத்திரம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    இதில் ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன், ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் குறைகளைக் கேட்டனர்.

    அப்போது அங்கு மது போதையில் வந்த வாலிபர் ஒருவர் கலெக்டரை பார்த்து இங்கு நடைபெறும் பணிகள் சரியாக நடைபெறுகிறதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து நான் தவறாக பேசி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்றும் மன்னிப்பு கேட்டு அலப்பறை செய்தார்.

    இதற்கு மாவட்ட ஆட்சியர் நீ சரியாகதான் பேசினாய் என்று பதில் அளித்தார். பின்னர் எழுந்து நின்ற மாவட்ட ஆட்சியரிடம் கையை பிடிக்க சென்ற அந்த மது போதை வாலிபரை போலீசார் அங்கிருந்து அழைத்து சென்று வெளியே விட்டனர்.

    இதனால் அங்கு சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது.

    • கலெக்டர் எச்சரிக்கை
    • திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட கிரிசமுத்திரம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்லவநாதன் முன்னிலை வகித்தார்.

    அப்போது அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் எழுந்து நின்று தினமும் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடந்து பள்ளிக்கும் பல்வேறு பணிகளுக்கு செல்கின்றனர்.

    இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சைக்கிளில் சென்ற மாணவர்கள் மீது கார் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

    எங்கள் பிள்ளைகளுக்கு அந்த நிலை வர கூடாது மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என அவர் கண்ணீர் கண்ணீர் மல்க இருகரம் கூப்பி மாவட்ட வேண்டுகோள் வைத்தார்.

    அதனை தொடர்ந்து பேசிய கலெக்டர் பேசியதாவது:-

    குழந்தை திருமணம் செய்வது கூடாது அப்படி செய்யும் பட்சத்தில் குழந்தை திருமணம் நடத்தியவர்கள், கலந்து கொண்டவர்கள், திருமண விருந்து சாப்பாடு சாப்பிட்டவர்கள், என அனைவரின் மீதும் வழக்குபதிவு செய்யப்படும்.

    அதே நேரத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. இதனை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பெண் சிசு பாலினத்தை கண்டறிந்து அவற்றை போலி மருத்துவர் மூலம் கருக்கலைப்பு செய்வகின்றனர்.

    இதனால் பெண் பிள்ளைகள் பிறப்பு குறைவாக உள்ளதாகவும் அதற்கு துணை போகும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயகுமாரி,சப் கலெக்டர், ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி, துணைத்தலைவர் பூபாலன், வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, தாசில்தார் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடந்தது
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த சின்னசேரி ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணை தலைவர் கீதா லோகநாதன் முன்னிலை வகித்தார்.

    பின்னர் ஊராட்சி செயலர் விஷ்ணுபதி தீர்மானங்களை வாசித்தார்,

    இதில் ஒருமனதாக 30 -க்கும் மேற்ப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன முன்னதாக பேசிய பொதுமக்கள் அவர்களது பகுதிகளில் நீண்ட நாட்களாக நிறை வேற்றப்ப டாத கோரிக்கைகளான புதிய அங்கன்வாடி மையம், இலவச வீட்டு மனை பட்டா, சாலைகள், கழிவுநீர் கால்வாய், தெருவிளக்குகள், ஏரி கால்வாய்கள் தூர்வார வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து பேசிய ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி, சின்னச்சேரியில் குடிநீர் தட்டுப்பாட்டை குறைக்க ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக மேல் நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு தட்டுப்பாடற்ற குடிநீர் வினியோக செய்யப்படும்.

    மேலும் ஒவ்வொருவரின் கோரிக்கைகளும் நிதிநிலைக்கு ஏற்ப படிப்படியாக சரி செய்து தரப்படும் என்றார்.

    • கிராம சபை கூட்டம் நடந்தது
    • ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த வேப்ப ங்குப்பம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

    ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா உமாபதி தலைமை தாங்கினார். ஊராட்சியில் தொடர்ந்து ஓய்வின்றி பணி யாற்றிக் கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து கவுர விக்கப்பட்டது. மேலும் மழைக்காலங்களில் பாதுகாப்புடன் பணியாற்ற அவர்களுக்கு முன்னெச்ச ரிக்கை உபகரண பொ ருட்கள் வழங்கப்பட்டன.

    இந்த கூட்டத்தில் வேப்பங்குப்பம் ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஏரியை தூர்வாரி, கரையை பலப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய சிறுகுடி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
    • ஊராட்சி மன்ற தலைவர் சேதமடைந்த நியாயவிலை கடையை சரி செய்து தரும்படி சார் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய சிறுகுடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் போதும் பொன்னு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பு கண்ணன் வரவேற்றார்.

    முதுகுளத்தூர் தாசில்தார் சடையாண்டி, ஆணையாளர் ஜானகி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசுல் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். சிறுகுடி ஊராட்சி மன்ற தலைவர் சேதமடைந்த நியாயவிலை கடையை சரி செய்து தரும்படி சார் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தார். மேலும் காவிரி கூட்டு குடிநீர் போதிய அளவில் வரவில்லை எனவும், கூடுதலாக தண்ணீர் தேவைப்படுகிறது என கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதில் அளித்த சார் ஆட்சியர் விரைவில் குடிநீர் வசதி செய்து தரப்படும் என உறுதி அளித்தார்.

    • இன்று 3- வது முறையாக சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது.
    • கூட்டத்தை புறக்கணித்ததால் தீர்மானம் எதுவும் நிறைவேற்ற முடியாமல் போனது.

    சென்னை:

    சென்னையை அடுத்து பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி மற்றும் அக்டோபர் 2-ந்தேதி நடந்த கிராம சபை கூட்டத்தை ஏகனாபுரம் கிராம மக்கள் புறக்கணித்தனர். இதையடுத்து இன்று 3- வது முறையாக சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதற்காக அந்த ஊர் முழுவதும் நோட்டீசுகள் வழங்கப்பட்டது.

    இன்று காலை கிராமசபை கூட்டம் தொடங்கியது. இதில் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆனால் கிராம மக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்ததால் தீர்மானம் எதுவும் நிறைவேற்ற முடியாமல் போனது.

    • கிராம சபை கூட்டத்தில் விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலாளரின் ஆதரவாளர் கைது செய்யப்பட்டார்.
    • இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார் குளம் ஊராட் சிக்கு உட்பட்ட கங்கர் குளத்தில் காந்தி ஜெயந்தியை யொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் ஊராட்சி செயலாளரின் பதவி காலம் குறித்து விவசாய சங்க பிரதிநிதி அம்மையப்பன் கேள்வி எழுப்பினார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி செயலாளர் தங்க பாண்டியன், அம்மை யப்பனை காலால் எட்டி உதைத்தார். அவருக்கு ஆதரவாக தேவேந்திரபுரத்தை சேர்ந்த ராசு (42) என்பவர் அவரது கண்ணத்தில் அறைந்தார்.

    மான்ராஜ் எம்.எல்.ஏ., வட்டார வளர்ச்சி அலுவலர் முன்பாக இந்த சம்பவம் நடந்ததால் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதையடுத்து தங்க பாண்டியனின் ஊராட்சி செயலாளர் பதிவியில் இருந்து பணி யிடை நீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டார். இந்த சம்பவம் குறித்து வன்னி யம்பட்டி போலீசில் அம்மையப்பன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து தங்கபாண்டியன் மற்றும் ராசுவை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ராசுவை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். ேமலும் தலைமறைவாக உள்ள தங்கபாண்டியனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஊராட்சி செயலாளர் அம்சவேணி ஊராட்சியில் நடைபெறும் திட்டங்களை பொதுமக்களுக்கு தெரிவித்தார்.
    • ஒன்றியக்குழு தலைவர் மகேஷ்குமார் கலந்துகொண்டு அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

    காங்கம்:

    காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் பொத்தியபாளையம் ஊராட்சி குருக்களியம்பாளையத்தில் காந்திஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.ஒன்றியக்குழு தலைவர் மகேஷ்குமார் கலந்துகொண்டு அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். இந்த கூட்டத்தில் ஊராட்சிமன்ற தலைவர் சந்திரசேகர்,துணைததலைவர் திருநாவுக்கரசு, வார்டு உறுப்பினர்கள், அனைத்துதுறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். ஊராட்சி செயலாளர் அம்சவேணி ஊராட்சியில் நடைபெறும் திட்டங்களை பொதுமக்களுக்கு தெரிவித்தார்.

    • 46 தீர்மானங்கள் நிறைவேற்றம்
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அருகே நரசிங்கபுரம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை ஒட்டி நேற்று கிராம சபை கூட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார்.ஊராட்சிமன்ற துணை தலைவர் சபரிகிரிசன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நரசிங்கபுரம் ஊராட்சி உட்பட்ட பொது இடங்களில் கண்காணிப்பு கேமரா வைப்பது, ஊராட்சிக்கு உட்பட்ட மலைமேடு, புளியந்தாங்கல், நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் நாடக மேடை அமைப்பது, நரசிங்க புரத்தில் பழுதடைந்த ரேஷன் கடையை அகற்றிவிட்டு புதிய ரேஷன் கடை கட்டுவது, பள்ளி வளாகம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை சுற்றி சுற்றுசுவர் அமைப்பது, புளியந்தாங்கல், நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைப்பது, மண்டபகுளம் பகுதிக்கு சாலை, கழிவுநீர் கால்வாய் அமைத்தல், மலைமேடு அண்ணா நகர் கிழக்கு பகுதியில் 60ஆயிரம் லிட்டர் கொள்ளவு, எம்ஜிஆர் நகரில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நீர் தேக்க தொட்டிகள் அமைப்பது முக்கிய இடங்களில் கேமரா வைக்க முடிவு மற்றும் மலைமேட்டில் 1 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட தடைமட்ட நீர் தொட்டி அமைப்பது, நரசிங்கபுரம் விரிவாக்கம் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்வது என்பது உள்பட 46 தீர்மானங்கள் குறித்தும் ஊராட்சி செயலாளர் ராஜேஸ்வரி பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

    பின்னர் தீர்மானங்கள் பொதுமக்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது. கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் புவனேஸ்வரி பாண்டியன், பாப்பாத்தி ஜான்ஜெயபால், ஒன்றிய பணி மேற்பா ர்வையாளர் புஷ்பராணி , ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தான் பகுதியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
    • சி.புதூர், சித்தாலங்குடி, திருவேடகம், இரும்பாடி, நாச்சிகுளம், கருப்பட்டி, ரிஷபம், நெடுங்குளம், திருவேடகம் ஆகிய ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்தன.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மன்னாடிமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. வெங்க டேசன் எம்.எல்.ஏ.தலைமை தாங்கினார். கிராம மக்கள் குடிநீர், ரோடு, கழிவறை, பஸ் வசதிகள் உட்பட கிராம மக்களின் அடிப்படை வசதிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இதில் மாவட்ட வழங்கல் அதிகாரி முருகவள்ளி, தாசில்தார் மூர்த்தி, மண்டல துணை தாசில்தார் வருவாய் அலுவலர் சதீஷ், கிராம நிர்வாக அலுவலர் வெங்க டேசன், அரசு போக்கு வரத்துக் கழக என்ஜினீயர் மூர்த்தி, வனத்துறை, சுகா தாரத்துறை, கல்வித்துறை உள்பட பல்வேறு துறை யைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ஊராட்சி தலைவர் பவுன் முருகன், ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீர பாண்டி, துணைத் தலைவர் பாக்கியமெ் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணை யாளர் கதிரவன், ஊராட்சி செயலாளர் திருச்செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் காடுபட்டி ஊராட்சியில் தலைவர் ஆனந்தன், முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் தலைவர் பழனிவேல், துணைத் தலைவர் கேபிள் ராஜா, தென்கரை ஊராட்சியில் தலைவர் மஞ்சுளா அய்யப்பன், துணைத் தலைவர் கிருஷ்ணன், திருவாலவாயநல்லூர் ஊராட்சியில் தலைவர் சகுபர்சாதிக், மேலக்கால் ஊராட்சியில் தலைவர் முருகேஸ்வரி வீரபத்திரன், துணைத் தலைவர் சித்தா ண்டி ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டங்கள் நடந்தன. சி.புதூர், சித்தாலங்குடி, திருவேடகம், இரும்பாடி, நாச்சிகுளம், கருப்பட்டி, ரிஷபம், நெடுங்குளம், திருவேடகம் ஆகிய ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்தன.

    • ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • கிராம சபை கூட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    காந்தி ஜெயந்தியையொட்டி நாடு முழுவதும் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் பல்லடம் அருகே உள்ள வாவிபாளையம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் கலாமணி முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கிராம சபை கூட்டத்தில் வாலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுக்கடை பகுதியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பாதுகாப்பு ஆடை (டயாபர்) தயாரிக்கும் தொழிற்சாலை கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று கிராம சபைக்கு திரண்டு வந்த பொதுமக்கள் தொழிற்சாலை இங்கு தொடங்குவதற்கு வரைபட அனுமதி மற்றும் தொழில் அனுமதி வழங்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தனர். வாவி பாளையம் ஊராட்சி பகுதி விவசாயம் சார்ந்த பகுதியாக இருப்பதாலும், இதற்கு நிலத்தடி நீரை மட்டுமே நம்பியுள்ளதால் இங்கு தொழிற்சாலை தொடங்கப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை பாதிப்பு ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஏக மனதாக பொதுமக்கள் ஆதரவுடன் தொழிற்சாலை தொடங்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கிராம சபை கூட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×