என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை
    X

    அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை

    • அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
    • நகர மன்ற உறுப்பினர்களின் கூட்டம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர்மன்ற அலுவலகத்தில் நகர மன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமை வகித்தார்.

    நகராட்சி ஆணையர் மூர்த்தி வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சியில் ஒவ்வொரு வார்டு களையும் நான்கு பகுதியாக பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சபை குழுவினர், மற்றும் நான்கு வார்டுகளுக்கும் ஒரு செயலாளர் அமைக்க வேண்டுமென்று ஜெயங்கொண்டம் நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் நகராட்சி உறுப்பினர்கள் செல்வராஜ், அம்பிகாபதி, ரெங்கநாதன், ஜோதிலட்சுமி, மனோன்மணி, பூபதி, சுப்ரமணியன், சேகர், கிருபாநிதி, வெற்றி வேல், பாண்டியன், துர்கா, ஆனந்த், சமந்தா, பாய், மீனாட்சி, நடராஜன் மற்றும் நகராட்சி பொறியாளர் ராஜகோபாலன் பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் உறுப்பினர் ரங்கநாதன் பேசும் போது, பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகள் தூய்மைப்படுத்த வேண்டும். மேலும் அனைத்து பகுதிகளில் உள்ள வார்டுகளில் சாலைகள் மிக மோசமாக உள்ளது அதை உடனடியாக செப்பனிட வேண்டும் எனக் கூறினார்.

    மற்ற உறுப்பினர்களும் அவரவர் வார்டுகளில் உள்ள அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினர்.

    கூட்டத்தின் இறுதியில் நகராட்சி மேலாளர் அன்புச்செல்வி நன்றி கூறினார்.

    Next Story
    ×