search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Serious injury"

  • ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு சென்ற பஸ் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
  • அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  திண்டுக்கல்:

  செங்கல்பட்டு மாவட்டம் அச்சிரபாக்கம் அருகே அம்மணம்பாக்கத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் குழுவினர் ஒரு வேனில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு நேற்றிரவு புறப்பட்டனர். இன்று காலை 3 மணியளவில் திண்டுக்கல் பைபாஸ் சாலை மீனாட்சிநாயக்கன்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு சென்ற பஸ் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

  இந்த விபத்தில் வேனின் முன்பகுதி முழுவதும் உடைந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் அம்மணம்பாக்கத்தை சேர்ந்த திருவேங்கடம்(36), அவரது மகள் ஹரிணி(8), ஜெகதாம்பாள்(50), விநாயகம் (40), கோவிந்தராஜ்(27), ஹரிகரன்(16), சுதர்சன்(17), சுகுமாறன்(37). சங்கரலிங்கம்(31) உள்பட 23 அய்யப்ப பக்தர்கள் படுயாமடைந்தனர்.

  அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குபதிவு செய்து வேன் டிரைவர் ராம்கியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

  • சுவர் இடிந்து விழுவதைப் பார்த்ததும் வினோத்குமார் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.
  • அதிர்ஷ்டவசமாக பாண்டி மீனாவை அங்கிருந்து வினோத்குமார் வெளியேற்றியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

  வருசநாடு:

  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கீழபூசனூத்து பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 35). கூலித் தொழிலாளி. இவர் தனது மனைவி பாண்டி மீனா மற்றும் மகளுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக இவரது மண் வீடு இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது கர்ப்பிணி மனைவியான பாண்டி மீனா தனது மகளுடன் உறங்கிக் கொண்டு இருந்தார். சுவர் இடிந்து விழுவதைப் பார்த்ததும் வினோத்குமார் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.

  அப்போது அவருக்கும் அவரது மகளுக்கும் காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பாண்டி மீனாவை அங்கிருந்து வினோத்குமார் வெளியேற்றியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து வருசநாடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

  மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • காயம் அடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
  • பத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

  குன்னம்:

  சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு நேற்றிரவு ஒரு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டு வந்தது. பஸ்சை நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள சிவந்திபுரத்தை சேர்ந்த லத்தீஷ்(வயது 37) என்பவர் ஓட்டினார்.

  பஸ் இன்று அதிகாலை 3.30 மணியளவில் திருச்சி-பெரம்பலூர் மாவட்ட எல்லையான பாடாலூர் கொண்டகாரபள்ளம் என்ற இடத்தில் வந்தது. அப்போது முன்னால் கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் இருந்து திருச்சிக்கு இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. இந்த லாரியை திருச்சி மாவட்டம் முசிறி மலையபுரம் சிந்தாமணி குறுக்கு தெருவை சேர்ந்த சரவணன்(31) என்பவர் ஓட்டினார்.

  எதிர்பாராத விதமாக ஆம்னிபஸ் லாரியின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த குமரி மாவட்டம் கல்குளம் அருகே உள்ள பழவிளையை சேர்ந்த பால்ராஜ் மகன் பிரதீஷ்(30) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

  பஸ்சில் வந்த மற்ற பயணிகள் விருதுநகர் மாவட்டம் சிவந்திப்புரத்தை சேர்ந்த அந்தோணிராஜ்(52), நெல்லை மாவட்டம் மதுராநத்தம் நெடுங்கல் பகுதியை சேர்ந்த ஞானராஜ்(38), தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டை சேர்ந்த இசக்கியம்மாள்955), அவரது உறவினர்கள் லட்சுமி(45), ஜோதி(47), குமரன்(50), லாரி டிரைவர் சரவணன், ஆம்னி பஸ் டிரைவர் லத்தீஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

  அவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அந்தோணிராஜ் பரிதாபமாக இறந்தார்.

  இதை தொடர்ந்து காயம் அடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

  இந்த விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இதுபற்றி தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரிசெய்தனர்.

  பலியான பிரதீஷ், அந்தோணிராஜ் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான பிரதீஷ் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

  காயம் அடைந்த ஞானசேகர் வள்ளியூரில் வேளாண் அதிகாரியாக உள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அவருக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

  • கார் எதிர்பாராத விதமாக சரக்கு லாரியின் பின்னால் மோதி பயங்கர விபத்திற்குள்ளானது.
  • சாலை விபத்தில் 3 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  சூளகிரி:

  சூளகிரி அருகே பயங்கரம் சாலையோரமாக நிறுத்த முயன்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடன் வந்த மற்ற 2 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

  கிருஷ்ணகிரி மாவட்டம் பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலை சூளகிரியை அடுத்த கோனேரிப்பள்ளி என்னுமிடத்தில் இன்று அதிகாலை சரக்கு லாரி வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரியை ஓட்டி சென்ற டிரைவர் எந்த ஒரு முன் அறிவிப்பு இன்றி சாலையோரமாக உள்ள கடையின் அருகே நிறுத்த முயன்றார்.

  அப்போது அந்த வழியாக 5 பேர் பயணித்த கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த கார் எதிர்பாராத விதமாக சரக்கு லாரியின் பின்னால் மோதி பயங்கர விபத்திற்குள்ளானது.

  இந்த விபத்தில் காரில் வந்த சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகினர். மேலும் காரில் இருந்த 2 வாலிபர்கள் பலத்த காயமடைந்தனர்.

  இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 2 வாலிபர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  பின்னர் சம்பவ இடத்தில் காரில் உயிரிழந்த 3 வாலிபர்களின் உடல்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

  இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், திருச்சியை சேர்ந்த சந்தோஷ், திருப்பூரைச் நரேன்யஷ்வந்த், சேலம் மாவட்டம் தாரமங்கலம் தமிழ்அன்பன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்கள் என்பதும், காயமடைந்த வாலிபர்கள் மேட்டூர் தர்வின், திருச்சியைச் சேர்ந்த பர்வின் ஆகியோர் என்பது தெரியவந்தது. காரில் வந்த 5 பேரும் கர்நாடாக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர் என்பதும், அவர்கள் திருப்பூரில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் புறப்பட்டு இன்று அதிகாலை சூளகிரி அருகே வந்தபோது விபத்துக்குள்ளானது என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

  • ரேஷ்மா தனது பாட்டி வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி யில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
  • எதிரே வந்த தனியார் பள்ளி பஸ் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

  கள்ளக்குறிச்சி:

  தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் காட்டுக் கொட்டாய் பகுதியை சேர்ந்த வர் முருகன் (வயது 36). கூலித் தொழிலாளி. இவரது மகள் ரேஷ்மா சங்கராபுரம் அருகே மூரார்பாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி யில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் முருகன் தனது மகளை அழைத்து வர பிரிதிவிமங்கலத்தில் இருந்து மூரார்பாளையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சித்தேரிப்பட்டு அரசு பள்ளி அருகே சென்ற போது, எதிரே வந்த தனியார் பள்ளி பஸ் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்தில் இறந்து போனார்.

  தகவல் அறிந்த தியாகதுரு கம் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். இதுகுறித்து முருகன் மனைவி ராதா கொடுத்த புகாரின் பேரில் பஸ் டிரை வர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். விடு முறைக்காக தனது மகளை அழைத்து வர சென்ற தந்தை விபத்தில் இறந்து போன சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

  சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு, தனது சைக்கிளில் வரிச்சிக்குடி ரோட்டில் சென்றபோது, காரைக்கால் மாதாகோவில் வீதியைச்சேர்ந்த சங்கர் (52) என்பவர் வேகமாக காரில் வந்து மோதியதில், தூக்கி வீசப்பட்ட பாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார்.

  புதுச்சேரி:

  காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடி காந்திநகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது51). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு, தனது சைக்கி ளில் வரிச்சிக்குடி ரோட்டில் சென்றபோது, காரைக்கால் மாதாகோவில் வீதியைச்சேர்ந்த சங்கர் (52) என்பவர் வேகமாக காரில் வந்து மோதியதில், தூக்கி வீசப்பட்ட பாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார்.

  அங்கிருந்தோர், பாலகிருஷ்ணனை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து பாலகிருஷ்ணனின் மகன் மணிபாலன், காரைக்கால் போக்குவரத்து போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • சிறுமி சத்தம் போடவே அவரது பெற்றோர்கள் ஓடிச்சென்று சிறுமியை மீட்டனர்.
  • படுகாயம் அடைந்த சிவக்குமாருக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

  கும்பகோணம்:

  கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை ரெயில்வே கேட் அருகில் காலனி தெருவில் வசித்து வருபவர் சிவக்குமார் (வயது35).

  இவர் ஆடுதுறை ரெயில் நிலையத்தின் வெளியே உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் வேலை பார்த்து வருகிறார்.

  சம்பவத்தன்று அந்த சைக்கிள் ஸ்டாண்டுக்கு வந்த 11 வயது சிறுமியிடம், சிவகுமார் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

  அப்போது சிறுமி சத்தம் போடவே சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிச்சென்று சிறுமியை மீட்டனர்.

  மேலும் சிவகுமாரை தாக்கி உள்ளனர்.

  இதில் படுகாயம் அடைந்த அவருக்கு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

  இதுகுறித்த புகாரின்பேரில் திருவிடைமருதூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரை கைது செய்தனர்.

  • இவர்கள் இருவரும் மாநகராட்சி பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செய்து வந்தனர்.
  • இதில் பலத்த காயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  கடலூர்:

  சென்னை திருவெற்றியூர் விம்கோ நகரை சேர்ந்தவர் விவேகானந்தன். தி.மு.க பிரமுகர். இவரது மகன் காமராஜ் (வயது 35) இவர்கள் இருவரும் மாநகராட்சி பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செய்து வந்தனர். கடந்த மாதம் 26-ந் தேதி காமராஜ் தனது அலுவகத்தில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் காமராஜை சரமாரி வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

  இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை எண்ணூரை சேர்ந்த அரவிந்தன்(25), இளந்தமிழன்(23), தினேஷ்(31), மனோ என்கிற மணவாளன்(29),காந்தி(23), திருவள்ளுர் மாவட்டம் கவுண்டர்பாளையம் ஜமாலுதின்(31) ஆகியோர் இன்று கடலூர் ஜே.எம். எண்.3 நீதிபதி ரகோத்தம்மன் முன்னிலையில் சரணடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க எண்ணூர் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

  • காரில் சிக்கி இருந்தவர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
  • விபத்து குறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  தஞ்சாவூர்:

  தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் நடராஜன்.

  இவர் தனது குடும்பத்தினர் 7 பேருடன் இன்று கோயம்புத்தூருக்கு காரில் புறப்பட்டார்.

  காரை டிரைவர் நடராஜன் என்பவர் ஒட்டினார்.

  கார் தஞ்சாவூர் அருகே உள்ள 8 கரம்பை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது.

  அப்போது எதிரே லாரி வந்து கொண்டிருந்தது.

  இதனால் டிரைவர் காரை சாலையோரம் ஒதுக்கியுள்ளார்.

  ஆனால் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கொட்டி வைத்திருந்த நெல் குவியல் மீது மோதி வயலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாது.

  இந்த விபத்தில் 3 பேர் காரை விட்டு வெளியே வந்தனர்.

  நடராஜன், டிரைவர் நடராஜன், ஜெயலட்சுமி, சுலோட்சனா ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

  அப்போது அவ்வழியே சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விபத்தை பார்த்துவிட்டு காரில் சிக்கிக் கொண்டவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர்.

  இதனையடுத்து காயம் அடைந்தவர்களை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

  அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

  இந்த விபத்து குறித்து கள்ளப்பெரும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  இந்நிலையில் விபத்தை கண்டு உடனடியாக ஆம்புலன்ஸை நிறுத்தி மீட்ட ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

  • அடுத்தடுத்து வந்த 2 கார்கள் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது.
  • விபத்தில் ராஜேஸ்வரி பலத்த காயம் அடைந்தார்.

  அம்மாப்பேட்டை:

  கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர் எடவாக்குடி 100 நாள் பணித்தள பொறுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

  இந்நிலையில் இன்று சாலியமங்கலம்- பாபநாசம் நெடுஞ்சாலையில் களஞ்சேரி அருகில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடுத்தடுத்து வந்த 2 கார்கள் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் ராஜேஸ்வரி பலத்த காயம் அடைந்தார்.

  அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

  அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.