திருநாவலூர் அருகே ஆடு மேய்த்தவர் வேன் மோதி பலி

திருநாவலூர் அருகே ஆடு மேய்த்தவர் வேன் மோதி பலியானார்.குணபூசணி உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .
திருநாவலூர் அருகே ஆடு மேய்த்தவர் வேன் மோதி பலி
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கிழக்கு மருதூர் காலனி கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி (வயது 50) அதே ஊரைசேர்ந்த குணபூசணி (வயது 52) இருவரும் கிழக்கு மருதூர் மேம்பாலம் அருகில் ரோட்டோரத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது பண்ருட்டி மார்க்கத்தில் இருந்து சேந்தநாடு சென்ற வேன் இவர்கள் மீது மோதி பலத்த காயம் அடைந்தனர். ராணி சம்பவ இடத்திலே இறந்தார். குணபூசணி உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .

மேலும்இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்அசோகன் சம்பவ இடத்திற்கு சென்று ராணியின் உடலை கைப்பற்றி உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வேன் ஓட்டுநர் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com