என் மலர்
நீங்கள் தேடியது "student death"
- விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டன.
- தனியார் பள்ளிகள் இன்று முதல் இயங்காது என்று தனியார் பள்ளி கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டது.
விழுப்புரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் மாணவி மர்மமாக இறந்தது குறித்து போராட்டக்காரர்களால் பள்ளி சூறையாடப்பட்டது. இதனை கண்டித்து தனியார் பள்ளிகள் இன்று முதல் இயங்காது என்று தனியார் பள்ளி கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டது. மேலும் தமிழக அரசு மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் கூறுகையில் தனியார் பள்ளிகள் எந்தவித அறிவிப்பும் இன்றி விடுமுறை தெரிவித்தால் அந்த பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளி சி.பி.எஸ்.இ., ஆங்கில இந்தியன் இன்டர்நேஷனல் உள்ளிட்ட தனியார் மற்றும் அரசு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின. விழுப்புரம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்க கூடிய அரசு மற்றும் தனியார் பள்ளிகளாக 89 மெட்ரிகுலேஷன் பள்ளி 3 சிறப்பு பள்ளி 26 சி.பி.எஸ்.இ. பள்ளி 19 சுயநிதி பள்ளி மற்றும் 17 நகராட்சி பள்ளி, 64 ஆதிதிராவிடர் நலப்பள்ளி, 1 பழங்குடியினர், அரசு நிதி உதவி பெறும் பள்ளி 197, நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி 140 உள்ளிட்ட 1806 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இயங்கின என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த பழவூர் அருகே உள்ள சிவஞானபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்த்(வயது 41). கூலி தொழிலாளி. இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகள் இந்துஜா(15), ஆவரைகுளத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் வசந்த் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அந்த பகுதியில் உள்ள பூக்கடை அருகே ஒரு குளிர்பான கடைக்கு சென்றார். அங்கு அனைவரும் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர்.
பின்னர் மீதம் இருந்த ஒரு பாட்டிலை வீட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். மறுநாள் காலையில் இந்துஜா, அந்த குளிர்பானத்தை எடுத்து குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாகி கொண்டே போனதால் அவரை மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு சிறுமி இந்துஜா பரிதாபமாக இறந்தார்.
ஆஸ்பத்திரியில் சிறுமி அனுமதிக்கப்பட்டதில் இருந்தே, அவரது உடலில் விஷம் கலந்துள்ளது என டாக்டர்கள் தெரிவித்து வந்தனர். நேற்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன்முடிவு வந்த பின்னரே சிறுமியின் உயிரிழப்புக்கு காரணம் என்ன என்பது தெரியவரும். இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிறுமி குடித்த குளிர்பானத்தில் ஏதேனும் கலப்படம் இருந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விழுப்புரம் அருகே உள்ள பொய்யப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகள் சுஜிதா (வயது 14). அதே கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த இவர் நேற்று முன்தினம் மாலை மாதிரிமங்கலத்தில் உள்ள பம்பை ஓடையில் செல்லும் தண்ணீரில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி மாணவி சுஜிதா இறந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் பெரியார் நகரை சேர்ந்தவர் சண்முகையா, இவர் பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சதீஷ்குமார் என்கிற செந்தில் குமார் (17), ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு தனது தந்தையுடன் திரிசூலம் ரெயில் நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது ரோட்டோரம் சென்று கொண்டிருந்த பாம்பு சதீஷ் குமாரை கடித்தது. உடனே அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
பல்லடம்:
பல்லடம் கரைப்புதூர் அவரப்பாளையத்தில் உள்ளது மீனாம்பிகை நகர். இந்த பகுதியை சேர்ந்தவர் விஜய். டெய்லர். இவரது மனைவி ஆனந்தி. இவர்களது மகள் சன்மதி (வயது 17). பிளஸ்-2 தேர்ச்சி பெற்று மேல்படிப்புக்கு செல்ல தயாராக இருந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஆனந்தி சமையல் செய்தார். திடீரென கியாஸ் தீர்ந்து விட்டது. இதனையடுத்து மண்எண்ணை அடுப்பை பற்ற வைக்குமாறு மகளிடம் ஆனந்தி கூறினார்.
இதனையடுத்து சன்மதி மண்எண்ணை அடுப்பை பற்ற வைத்தபோது எதிர்பாராதவிதமாக சன்மதியின் ஆடை மீது தீ பற்றியது. தீ மளமளவென உடல் முழுவதும் பற்றி எரிந்தது. அதிர்ச்சியடைந்த சன்மதி அலறிசத்தம்போட்டார். ஆனந்தி ஓடி வந்து தீயை அணைத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சன்மதிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சன்மதி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள தொங்குட்டிபாளையம் ஊராட்சி ஆண்டிபாளையம் ஏ.டி. காலனியை சேர்ந்த சேமன் மகன் தமிழரசன் (வயது 16),
அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தர். இவரது மாமா காங்கேயம் படியூர் சண்முகத்தின் மகன் பூபதி (18), கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
தற்போது கோடை விடுமுறை என்பதால் பூபதி தமிழரசனின் வீட்டில் தங்கியுள்ளார். நேற்று மாலை இருவரும் ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது நீச்சல் தெரியாததால் பூபதி தண்ணீர் அடித்து செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற தமிழரசனையும் தண்ணீர் இழுத்து சென்றுள்ளது.
இதனை பார்த்த அப்பகுதியில் குளித்துக் கொண்டு இருந்தவர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்றுள்ளனர். நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் சிறுவர்கள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டனர். இது குறித்து பல்லடம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் சிறு வர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார்3 கி.மீ. தூரத்தில் உள்ள சேமலை கவுண்டன்பாளையம், கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் சிறுவர்களின் சடலங்களை தீயணைப்பு துறையினர் உதவியுடன் அவிநாசி பாளையம் போலீசார் மீட்டனர். இருவரின் சடலமும் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் குறித்து அவி நாசிபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் நீச்சல் தெரியாதவர்கள் தண்ணீரின் வேகத்தால் அடித்து செல்லப்பட்டு உயிரிழப்பது வாடிக்கையாகி விட்டது.
எனவே பொதுமக்கள் வாய்க்காலில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அவிநாசிபாளையம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த கடப்பேரி பகுதியை சேர்ந்தவர் கோதண்டன். இவரது மகன் பிரகாஷ் (வயது 18). பிளஸ்-2 முடித்து உள்ளார்.
இவர், நண்பர்களான பிளஸ்-2 முடித்த மதுராந்தகத்தை சேர்ந்த எழிலரசன், அரவிந்தன் ஆகியோருடன் குரோம்பேட்டையில் உள்ள தனியார் கலை கல்லூரியில் விண்ணப்பம் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் தாம்பரத்தில் இருந்து சென்று கொண்டிருந்தனர்.
கடப்பேரி பகுதி அருகே ஜி.எஸ்.டி. சாலையில் சென்றபோது வண்டலூரில் இருந்து பிராட்வே நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பிரகாஷ் உள்பட 3 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
இதில் அரசு பஸ்சின் சக்கரம் பிரகாஷின் தலையில் ஏறி இறங்கியது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் எழிலரசன், அரவிந்தன் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து பஸ் டிரைவரான தண்டையார்பேட்டையை சேர்ந்த பூபதியை கைது செய்தனர்.
சிங்காநல்லூர்:
கோவை சிங்காநல்லூர் நீலிகோணாம் பாளையம் தாமோதரசாமி நாயுடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா (வயது 46). இவரது மனைவி சித்ரா(37). இவர்களுக்கு பாலாஜி(14) என்ற மகனும், ராஜேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.
பாலாஜி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10-ந் தேதி தனது வீட்டு மாடியில் பரீட்சைக்காக படித்து கொண்டிருந்தார். அப்போது அவரது தங்கை துணி காயபோடுவதற்காக மாடிக்கு வந்தார். அவருக்கு உதவியாக பாலாஜி துணியை எடுத்து அங்குள்ள கம்பியில் காய போட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக செல்லும் மின் கம்பியில் தெரியாமல் கை வைத்து விட்டார். இதில் எதிர்பாராத விதமாக அவர்மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்ககாக மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சக்திநகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் மோசின் (வயது 14). இவன் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்தநிலையில் நேற்று இரவு அப்துல்மோசின் அவரது உறவினர் பாலமுருகன் (28) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் விருத்தாசலத்தில் இருந்து வடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது நெய்வேலி அருகே உள்ள ஊ.மங்கலம் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பாலமுருகன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அப்துல்மோசின் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். பாலமுருகன் படுகாயம் அடைந்தார்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாலமுருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஊ.மங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெய்ஹிந்த்தேவி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.