என் மலர்
நீங்கள் தேடியது "Weight Lose"
- மாணவன் சக்தீஷ்வர் உடல் பருமனால் அவதியுற்று வந்துள்ளார்.
- உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் குறித்து யூடியூபில் தேடியுள்ளார்.
குளச்சல்:
குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பர்ணட்டிவிளையை சேர்ந்தவர் நாகராஜன், சுங்கவரி துறையில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் சக்தீஷ்வர் (வயது17). இவர் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று என்ஜினீயரிங் கல்லூரியில் சேர தயாராகி வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்த சக்தீஷ்வர் திடீரென மூச்சு திணறி மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை பெற்றோர் மீட்டு அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குளச்சல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.
அதாவது மாணவன் சக்தீஷ்வர் உடல் பருமனால் அவதியுற்று வந்துள்ளார். தற்போது மேற்படிப்பிற்காக கல்லூரிக்கு செல்ல இருந்த நிலையில் உடல் பருமனை பார்த்து சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்யலாம் என நினைத்துள்ளார். எனவே உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் குறித்து யூடியூபில் தேடியுள்ளார். அதில் கிடைத்த தகவலின்படி கடுமையான உணவு கட்டுப்பாடுகளை கடைபிடித்து வந்துள்ளார்.
அதாவது கடந்த 3 மாதங்களாக திட உணவு சாப்பிடாமல் பழச்சாறு மட்டும் குடித்து உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். தொடர்ந்து பழச்சாறு குடித்து வந்ததால் சளித் தொல்லைக்கு ஆளாகி மூச்சு விட சிரமப்பட்டு உள்ளார்.
இந்தநிலையில் நேற்று காலையில் அதிக சளி தொல்லையால் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, உடல் பருமனை குறைக்க முறையாக அங்கீகாரம் பெற்ற சிறப்பு டாக்டர்களை அணுகி அவர்களின் பரிந்துரை அடிப்படையில் மட்டுமே உடல் பயிற்சி உள்ளிட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர். இதற்கிடையே இறந்த மாணவரின் இரு கண்களையும் பெற்றோர் தானம் செய்துள்ளனர்.
யூடியூப் பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற மாணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
- வாழ்வியல் முறையை மாற்ற வேண்டும்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மாவுச்சத்து, சர்க்கரை சத்து அதிமாக உள்ள உணவுப்பொருட்கள், அசைவ உணவுகள் குறிப்பாக இறைச்சியை தவிர்க்க வேண்டும். மதுப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்.
தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தேவையான அளவு ஓய்வு எடுக்க வேண்டும். வாழ்வியல் முறையை மாற்ற வேண்டும்.
உடம்பில் எங்காவது புற்றுநோய் இருந்தாலும், சிறுநீரகப் பிரச்சனை இருந்தாலும், தொடர்ந்து நீண்ட நேரம் விரதம் இருந்தாலும், இனிப்பு பண்டங்கள் அதிகமாக சாப்பிட்டாலும் யூரிக் அமிலம் அதிகமாகலாம்.
தினமும் போதுமான அளவு உடற்பயிற்சி செய்தல், ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல் போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.
பாகற்காய், பீர்க்கங்காய், மஞ்சள் பூசணிக்காய், புடலங்காய், கேரட், புரோக்கோலி, வாழைப்பழம், வெள்ளரிக்காய், எலுமிச்சைச் சாறு, ஆரஞ்சுப் பழம், அன்னாசி, சாத்துக்குடி போன்றவற்றை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.
- உணவுப்பொருட்களுக்கு பதிலாக முழு தானியங்களை உட்கொள்வது பசியை கட்டுப்படுத்தும்.
- உடல் எடை மேலாண்மையை பேணுவதற்கு உடற்பயிற்சி அவசியமானது.
உடல் பருமன் பிரச்சினையை தவிர்ப்பதற்கும், அதிகரித்த உடல் எடையை பாதுகாப்பாக குறைப்பதற்கும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இவை..
உணவு-உடல் செயல்பாடு
உணவு பழக்கம் மற்றும் உடல் செயல்பாடு இவை இரண்டும் உடல் எடை குறைப்பு விஷயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உணவு உட்கொள்ளும் விஷயத்தில் கட்டுப்பாடுகளை பின்பற்றுவதுடன், உடல் இயக்க செயல்பாடுகளை தொடர்ச்சியாக பின்பற்றுவதும், கண்காணிப்பதும் உடல் எடை குறைவதற்கு உதவும் என்று ஆய்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன.
சர்க்கரை-கார்போஹைட்ரேட்
இன்றைய உணவு வழக்கத்தில் சர்க்கரையும், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளும் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளன. அவை உடல் பருமனுடன் தொடர்புடையவை. குறிப்பாக வெள்ளை அரிசி, வெள்ளை ரொட்டி, பாஸ்தா போன்ற கார்போஹைட்ரேட் கலந்த சுத்திகரிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை விரைவாக அதிகரிக்க செய்யும். உடலில் கொழுப்பு சேர்வதை ஊக்குவிக்கும், இன்சுலின் வெளியிட்டை தூண்டும். எனவே இத்தகைய சுத்திகரிக்கப்பட்ட உணவுப்பொருட்களுக்கு பதிலாக முழு தானியங்களை உட்கொள்வது பசியை கட்டுப்படுத்தும். அதிக கலோரிகள் உட்கொள்வதை தடுக்கும். உடல் எடையை சீராக நிர்வகிக்க உதவும்.
நார்ச்சத்து
நார்ச்சத்து என்பது தாவர அடிப்படையிலான கார்போஹைட்ரேட் ஆகும். இது உடல் எடை நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது வயிறு நிறைவாக உட்கொண்ட திருப்தியை தரும். கலோரிகளை உட்கொள்ளும் அளவை குறைக்கும். முழு தானியங்களில் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், பட்டாணி, பருப்பு மற்றும் நட்ஸ் வகைகள் போன்ற நார்ச்சத்து நிரம்பப்பெற்ற பொருட்களை உட்கொள்வது நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்கும் உணர்வை கொடுக்கும். அதிகமாக சாப்பிடுவதை தடுக்கும்.
உடற்பயிற்சி
உடல் எடை மேலாண்மையை பேணுவதற்கு உடற்பயிற்சி அவசியமானது. ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற ஏரோபிக் பயிற்சிகளில் ஈடுபடலாம். அத்துடன் உடற்பயிற்சி வல்லுனர்களின் வழிகாட்டுதல்படி வலு தூக்குதல் உள்ளிட்ட கடினமான பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். இந்த இரண்டு வகை பயிற்சிகளும் கலோரிகளை எரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும், உடல் எடை குறைப்பை ஊக்குவிக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.
பானங்கள்
சர்க்கரை கலந்த பானங்கள், மது, அதிக கலோரி கொண்ட காபி போன்ற பானங்கள் ஊட்டச்சத்து நன்மைகளை வழங்காமல் கலோரிகளை அதிகரிக்க செய்யலாம். கலோரி உட்கொள்ளலை குறைக்கவும், உடல் எடையை குறைக்கவும் தண்ணீர், மூலிகை தேநீர் அல்லது கருப்பு காபியை தேர்வு செய்யலாம்.






