search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "YouTube"

    • திவ்யா கள்ளச்சியின் போனை பிடிங்கி பார்த்த போது அதில் பல குழந்தைகளின் ஆபாச வீடியோ இருந்தது.
    • சமூக ஆர்வலர் சித்ரா ஆதாரத்துடன் திவ்யா கள்ளச்சிக்கு எதிராக புகார் தெரிவித்திருந்தார்.

    கார்த்திக் என்பவர் தன்னை காதலித்து ஏமாற்றவிட்டதாக இணையத்தில் நிறைய வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் திவ்யா கள்ளச்சி.

    இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களை பாலியல் சீண்டலில் ஈடுபட வைத்து அதனை படம்பிடித்து, அதன் மூலம் பணம் பறிக்க முயற்சித்த யூடியூபர் திவ்யா கள்ளச்சி மீது சில நாட்களுக்கு முன்பு சித்ரா என்பவர் புகார் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் யூடியூபர் திவ்யா கள்ளச்சி, கார்த்தி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் போக்சோ உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், அண்மையில் திவ்யா கள்ளச்சிக்கு எதிராக புகார் தெரிவித்திருந்த சித்ராவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    அதாவது, திவ்யா கள்ளச்சி மற்றும் கார்த்தி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ரீல்ஸ் எடுப்பதற்காக வந்துள்ளனர். கார்த்தியின் நண்பரான சித்ரா அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் இணைந்து பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போன்ற வீடியோவை எடுத்து தனக்கு அனுப்பி வைக்கும்படி அவரிடம் தெரிவித்துள்ளார்.

    அதன்படி திவ்யா கள்ளச்சி, ஆனந்த் என்பவரின் உதவியுடன் இரண்டு சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போல் படம் எடுத்து சித்ராவிற்கு அனுப்பியுள்ளார். இந்த வீடியோவை காட்டி திவ்யா கள்ளச்சியிடம் சித்ரா பணம் கேட்டு மிரட்டியதாக சொல்லப்படுகிறது. 

    • வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவோம் என மிரட்டல்.
    • போலீசார் வெடிமருத்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வில்லியனூர் அடுத்த பொறையூர்பேட் புதுநகரை சேர்ந்தவர் குருபஞ்சராவ். இவரது மகன் யோகேஷ் என்ற யோகரத்தினம் (வயது 21).

    இவர் மீது கஞ்சா, அடிதடி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி முகேஷிற்கும் இடையே முன்விரோதம் உள்ளது.

    சில வாரங்களுக்கு முன், கிராத்திற்கு செல்லும் சாலையில் முகேஷ் தனது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த யோகரத்தினத்தை நிறுத்தி தகாத வார்த்தைகளால் திட்டி, வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த யோகரத்தினம் பட்டாசு வாங்கி வந்து யூடியூப் சேனல் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்தார். அதனை தனது எதிரி ரவுடி முகேஷ், வீட்டின் சுவற்றில் வீசி வெடிக்க செய்து பரிசோதித்தார். பின்னர் தலைமறைவானார்.

    இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து புதுச்சேரி சிறப்பு அதிரடிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் யோகரத்தினத்தை தேடி வந்தனர். பொறையூரில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த யோகரத்தினத்தை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    யோகரத்தினத்திடம் இருந்து வெடிமருந்து, நூல் உருண்டை, கூழாங்கல், செல்போன் உட்பட பொருட்களை பறிமுதல் செய்து, வில்லியனூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். யோகரத்தினம் மீது வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஜிம்மி டொனால்ட்சன் என்பவர் மிஸ்டர் பீஸ்ட் சேனலை நடத்தி வருகிறார்.
    • மிஸ்டர் பீஸ்ட் யூடியூப் பக்கம் தற்போது வரை 34 கோடி சந்தாதாரர்களை கடந்துள்ளது.

    உலக அளவில், மக்களின் சுவாரஸ்யமான பொழுதுபோக்கு சமூக வலைத்தளமாக யூடியூப் விளங்குகிறது. இதில் அமெரிக்காவை சேர்ந்த மிஸ்டர் பீஸ்ட் என்ற யூடியூப் பக்கம் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது.

    ஜிம்மி டொனால்ட்சன் என்பவர் மிஸ்டர் பீஸ்ட் சேனலை நடத்தி வருகிறார். மிஸ்டர் பீஸ்ட் யூடியூப் பக்கம் தற்போது வரை 34 கோடி சந்தாதாரர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த யூடியூபர் தியா பூய்சென் என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக மிஸ்டர் பீஸ்ட் சேனலை நடத்தி வரும் ஜிம்மி டொனால்ட்சன் தெரிவித்துள்ளார்.

    கிறிஸ்துமஸ் தினத்தன்று தியா பூய்செனுக்கு ஜிம்மி டொனால்ட்சன் மோதிரத்தை நீட்டி தனது காதலை தெரிவித்துள்ளார். அவரும் காதலை ஏற்றுக்கொண்டதால் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயம் செய்து கொண்டனர்.

    நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் ஜிம்மி டொனால்ட்சன் பகிர்ந்துள்ளார். 

    • மாணவர்கள் தயாரித்த வெடிகுண்டைஆசிரியரின் நார்காலியின் கீழ் வைத்துள்ளனர்.
    • இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக ஆசிரியர் காயமின்றி உயிர் தப்பினார்.

    அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்ந்து தங்களது பெண் அறிவியல் ஆசிரியரின் நாற்காலியின் கீழ் பட்டாசு போன்ற வெடிகுண்டை வைத்து வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த வாரம் மாணவர்களை ஆசிரியர் கண்டித்ததையடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. யூடியூப்பில் உள்ள வீடியோக்களை பார்த்து வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்பதை மாணவர்கள் கற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

    மாணவர்கள் தயாரித்த வெடிகுண்டை ஆசிரியரின் நாற்காலியின் கீழ் வைத்துள்ளனர். ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்தவுடன் வெடிகுண்டை வெடிக்க செய்யும் கருவியை கொண்டு வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக ஆசிரியர் காயமின்றி உயிர் தப்பினார்.

    இந்த சம்பவத்தை அடுத்து 13 மாணவர்களை அரியானா கல்வித் துறை ஒரு வாரத்துக்கு சஸ்பெண்ட் செய்துள்ளது.

    • பிரணவ் மோகன்லால் இப்போது ஸ்பெயினில் ஒரு விவசாய பண்ணையில் வேலை செய்கிறார்.
    • பிரணவ் மோகன்லால் இப்போது ஸ்பெயினில் ஒரு விவசாய பண்ணையில் வேலை செய்கிறார்.

    மலையாள திரையுலகின் பிரபல நடிகராக இருக்கும் மோகன்லால், திரைப்பட தயாரிப்பாளரான கே.பாலாஜியின் மகளான சுசித்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இந்த தம்பதிக்கு விஸ்மயா மோகன்லால் என்ற மகளும் பிரணவ் மோகன்லால் என்ற மகனும் உள்ளனர்.

    FTQ வித் ரேகா மேனன் என்ற மலையாள யூடியூப் நிகழ்ச்சிக்கு சுசித்ரா மோகன்லால் பேட்டி கொடுத்துள்ளார்.

    அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், அப்பு (பிரணவ்) இப்போது ஸ்பெயினில் ஒரு விவசாய பண்ணையில் வேலை செய்கிறார். தங்குமிடம் மற்றும் உணவுக்காக சம்பவம் எதுவும் வாங்காமல் அவர் வேலை செய்து வருகிறார். அவர் அங்கிருந்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் அந்த அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்து கொள்வார்.

    எனக்கு சினிமா பட ஸ்கிரிப்ட்களைக் கேட்பது பிடிக்கும், அதனால் நான் உட்கார்ந்து கேட்கிறேன். அவர் இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் நடிக்கிறார். வருடத்திற்கு குறைந்தது 2 படங்களாவது நடிக்குமாறு நான் அவரிடம் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் அவர் சினிமா வாழ்க்கை என அனைத்தையும் பேலன்ஸ் செய்ய நினைக்கிறார்.

    அதே சமயம் அவரது அப்பாவுடன் அப்பு சேர்ந்து நடிப்பதை நான் விரும்பவில்லை. இருவரையும் ரசிகர்கள் ஒப்பிட்டு பார்ப்பது தனக்கு பிடிக்காது" என்று தெரிவித்தார்.

    2022 ஆம் ஆண்டு வெளியான ஹிருதயம் திரைப்படத்தின் மூலம் பிரணவ் மலையாள ரசிகர்களிடையே புகழ்பெற்றார். இந்த ஆண்டு ஏப்ரலில் வெளியான வர்ஷங்கல்க்கு ஷேஷம் என்ற மலையாளப் படத்தில் அவர் கடைசியாக நடித்திருந்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கம்ப்யூட்டர் பிரிண்டரில் ரூ.10 ஸ்டாம்ப் பேப்பர்களில் போலி 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டுள்ளனர்.
    • அனைத்து போலி ரூபாய் நோட்டுகளும் ஒரே வரிசை எண்ணைக் கொண்டிருந்தன.

    உத்திரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் 30,000 ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சதீஷ் ராய் மற்றும் பிரமோத் மிஸ்ரா ஆகியோர் கம்ப்யூட்டர் பிரிண்டரில் ரூ.10 ஸ்டாம்ப் பேப்பர்களில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை அச்சடித்து வந்துள்ளனர். மிர்சாபூரில் இருந்து முத்திரைத்தாள் வாங்கி இந்த மோசடியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    புழக்கத்தில் இருந்து 20 ரூ.500 கள்ளநோட்டுகளை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அனைத்து ரூபாய் நோட்டுகளும் ஒரே வரிசை எண்ணைக் கொண்டிருந்தன. இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சதீஷ் ராய், பிரமோத் மிஸ்ரா ஆகியோரை போலீசார் செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் மினரல் வாட்டர் விளம்பரங்களை அச்சிட்டு வந்துள்ளனர். பின்னர் யூடியூப் வீடியோக்களை பார்த்து கள்ளநோட்டுகளை அச்சிட கற்றுக்கொண்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

    ரூ.500 கள்ளநோட்டுகள் தவிர, ஆல்டோ கார், நோட்டுகளை அச்சடிக்கப் பயன்படுத்திய உபகரணங்கள், லேப்டாப், பிரிண்டர், 27 முத்திரைத் தாள்கள் ஆகியவற்றை கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • பாபா சித்திக் கொலை தொடர்பாக இதுவரை 4 பேரை மும்பை போலீஸ் கைது செய்துள்ளது.
    • அவரின் வீடு மற்றும் அலுவலகத்தை 25 நாட்களாக இவர்கள் நோட்டம் விட்டுள்ளனர்.

    கான்டிராக்ட் - பாபா சித்திக் 

    துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு கைதானவர்கள், என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து, பாபா சித்திக்கை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக புனேவைச் சேர்ந்த பிரவின் லொங்கார் என்பவரும் மூன்றாவதாக கைது செய்யப்பட்டார். 

    மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான பாபா சித்திக் கடந்த சனிக்கிழமை அன்று மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையை பிரபல தாதா லாரன்ஸ் பிஸ்னோய் கும்பல் கான்டிராக்ட் கில்லர்கள்  மூலம் நடத்தியதாக நம்பப்படுகிறது. 

    பாலிவுட் நடிகர் சல்மான் கானை குறிவைக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் அவருக்கு உதவி செய்ததாகப் பாபா சித்திக்கை கொன்றுள்ளது. சல்மானுக்கு உதவும் அனைவருக்கும் இதே கதிதான் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாபா சித்திக் கொலை தொடர்பாக இதுவரை 4 பேரை மும்பை போலீஸ் கைது செய்துள்ளது.

     

    கில்லர்ஸ் 

    இதில் தொடர்புடைய மேலும் மூவர் தலைமறைவாகியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தற்போது கைது செய்யப்பட்ட நால்வரின் பாபா சித்திக்கை சுட்ட உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குர்மைல் பல்ஜித் சிங் (23), மற்றும்அரியானாவைச் சேர்ந்த தர்மராஜ் ராஜேஷ் காஷ்யப் (19) ஆகிய இருவர் முக்கிய குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொலை நடந்த அன்றைய தினம் பாபா சித்திக் , பாந்திரா தொகுதி எம்.எல்.ஏ வான ஜீஸ்கான் உடைய அலுவலகத்தில் வெளியே வந்துகொண்டிருந்தபோது காவலர்களை திசை திருப்ப பட்டாசு வெடித்துள்ளனர்.

    யூடியூப் பள்ளி 

    கொலையாளிகள் 6 ரவுண்டுக்குள் துப்பாக்கியால் சுட்டதில் 3 பாபா சித்திக் மீது பட்டுள்ளது. மற்றொரு குண்டு அருகில் இருந்தவரரின் காலில் பட்டுள்ளது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 7.62 mm துப்பாக்கி போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே கொலையாளிகளிடம் நடந்து வரும் விசாரணையில் உண்மை ஒவ்வொன்றாக வெளியே வந்த வண்ணம் உள்ளது.

    இந்த கொலையை கச்சிதாக செய்துமுடிக்க கொலையாளிகள் குர்மைல் சிங் மற்றும் தர்மராஜ் இருவரும் யூடியூப் வீடியோக்களை பார்த்து துப்பாக்கி சுட கற்றுக்கொண்டதாக விசாரணையில் வந்துள்ளது. மேகசின் இல்லாத துப்பாக்கியை வைத்து பல நாட்களாக பயிற்சி எடுத்துவந்துள்ளனர். கொலையை நிகழ்த்திய கும்பலுக்கு பாபா சித்திக்கை அடையாளம் காட்டுவ தற்காக அவரது புகைப் படத்தை வழங்கி உள்ளனர். வாட்சப் இன்ஸ்டாகிராம் மூலம் தகவல் பரிமாற்றம் நடந்துள்ளது.

     

    டீலர் 

    பாபா சித்திக் கொலை செய்யும் அந்த நாளுக்கு முன்னதாகவே அவரின் வீடு மற்றும் அலுவலகத்தை 25 நாட்களாக இவர்கள் நோட்டம் விட்டுள்ளனர். இஅவ்ர்களைத் தவிர உ.பி.யை சேர்ந்த ஹரிஷ்குமார் பாலாக்ராம் என்றனவர் இவர்களுக்கு கொலைக்கான பொருளாதார உதவிகளை அளித்து கொலைக்கான மூளையாக செயல்பட்டதாக கைது செய்யவிட்டார். இவர் புனேவில் பழைய இரும்புகளை வாங்கி விற்கும் டீலர் என்றும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே சல்மான் கான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உச்சநீதிமன்றத்தின் சேனலில் தற்போது கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
    • ஹேக் செய்யப்பட்ட சேனலை மீட்கும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்

    உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள் மற்றும் விசாரணைகளை ஒளிபரப்பு செய்துவந்த அதிகாரப்பூர்வ யுடியூப் சேனலை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் சேனலில் தற்போது கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்கள் ஒளிபரப்பாகி வருவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    தற்போது அந்த சேனல் நேரலையில் ரிப்பிள் லேப்ஸ் உருவாக்கிய கிரிப்டோகரன்சியான எக்ஸ்ஆர்பியை விளம்பரப்படுத்தும் வீடியோ ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் உச்சநீதிமன்றத்தில் நாடாகும் விசாரணைகளின் நேரலை பாதிக்கப்ட்டுள்ளது. ஹேக் செய்யப்பட்ட சேனலை மீட்கும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் ஹேக்கர்களை அடையாளம் காணும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே சக்திவாய்ந்த அதிகார மையமாக விளங்கும் உச்சநீதிமன்றத்தின் பயன்பாட்டில் உள்ள சேனலே ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் டிஜிட்டல் பாதுகாப்பு மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது.

    • மகாவிஷ்ணுவை போலீசார் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்தனர்.
    • அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.

    கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார்.

    இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை போலீசார் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதனையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகாவிஷ்ணுவை வருகிற 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கை பரப்பி மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசிய மகா விஷ்ணுவின் வீடியோ, அவரது பரம்பொருள் அறக்கட்டளை யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

    • சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போலி மருத்துவர் தலைமறைவானார்.
    • இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் பித்தப்பை கல்லை அகற்றுவது எப்படி என யூடியூபைப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவரால் 15 வயது சிறுவன் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

    தங்களது ஒப்புதலின்றி 'மருத்துவர்' அஜித்குமார் பூரி அறுவை சிகிச்சையைத் தொடங்கியதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போலி மருத்துவர் தலைமறைவானார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    • யூட்யூப்-ல் உ.பி. அரசுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டால் 4 முதல் 8 லட்சம் வரை வழங்கப்படும்.
    • அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உ.பி. அரசு அறிவிப்பு.

    உத்தரபிரதேச பாஜக அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்களுக்கு மாதம் 8 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    மாநில தகவல் தொலைத்தொடர்பு துறையாழ் தயாரிக்கப்பட்ட உத்தரபிரதேச டிஜிட்டல் மீடியா பாலிசி 2024க்கு உ.பி. மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

    இந்த புதிய கொள்கையின்படி எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் உ.பி. அரசுக்கு ஆதரவாக வீடியோ, போஸ்ட். ட்வீட், ரீல்ஸ் பதிவிடுபவர்களுக்கு அவர்களின் பாலோயர்கள் அடிப்படையில் 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டு ரூ.5 லட்சம், 4 லட்சம், 3 லட்சம் மற்றும் 2 லட்சம் வழங்கப்படும்.

    யூட்யூப்-ல் வீடியோ, ஷார்ட்ஸ் பதிவிடுபவர்களுக்கு அவர்களின் சப்ஸ்க்ரைபர்கள் அடிப்படையில் 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டு ரூ.8 லட்சம், 7 லட்சம், 6 லட்சம் மற்றும் 4 லட்சம் வழங்கப்படும்.

    உத்தர பிரதேசம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைய முடியும்

    மேலும் சமூக வலைத்தளங்களில் அரசுக்கு எதிராக, ஆட்சேபனைக்குரிய செய்திகளை வெளியிடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உ.பி. அரசு அறிவித்துள்ளது.

    • family Plan சேவைக்கான மாதாந்திர பிரீமியம் கட்டணம் ரூ.189ல் இருந்து ரூ.299 ஆக உயர்வு.
    • தனிப்பட்ட ப்ரீமியம் சேவைக்கான கட்டணம் ரூ.129ல் இருந்து ரூ.149 ஆக உயர்வு.

    வீடியோக்களுக்கான உலகின் முன்னணி வலைத்தளமாக யூடியூப் செயல்படுகிறது. இணையத்தில் விளம்பரங்களை தடுக்க செய்யும் ஆட் பிளாக்கர் (Ad Blocker) சேவைகளை எதிர்கொள்ளும் நோக்கில் யூடியூப் தனது பிரீமியம் சந்தாவில் (Premium Subscription) சேரும் படி பயனர்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இந்நிலையில் யூடியூப் தனது பிரீமியம் சந்தா கட்டணத்தை உயர்த்தியுள்ளது. Family Plan சேவைக்கான மாதாந்திர பிரீமியம் கட்டணம் ரூ.189ல் இருந்து ரூ.299 ஆகவும், மாணவர் மாதாந்திர பிரீமியம் கட்டணம் ரூ.79ல் இருந்து ரூ.89 ஆகவும், தனிப்பட்ட ப்ரீமியம் சேவைக்கான கட்டணம் ரூ.129ல் இருந்து ரூ.149 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    தனிநபருக்கான ப்ரீபெய்ட் மாதாந்திர கட்டணம் ரூ.139ல் இருந்து ரூ.159 ஆகவும், தனிநபருக்கான ப்ரீபெய்ட் காலாண்டு (3 மாதம்) கட்டணம் ரூ.399ல் இருந்து ரூ.459 ஆகவும், தனிநபருக்கான ஆண்டு கட்டணம் ரூ.1290ல் இருந்து ரூ.1490 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    சேவையை தொடங்கி 5 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    ×