என் மலர்
நீங்கள் தேடியது "யூ டியூப்"
- பாகிஸ்தானில் 27 பேரின் யூ டியூப் சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
- வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் சமீப காலமாக அரசாங்கத்தின் கொள்கைகளை சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, அரசு அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் பதிவுகளை பதிவிட்டனர்.
இதனால் அரசின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டு வந்தது. எனவே அந்த சேனல்களை தடைசெய்ய வேண்டும் என கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து முன்னாள் பிரதமர் இம்ரான்கான், பத்திரிகையாளர்கள் உள்பட 27 பேரின் யூ டியூப் சேனல்களுக்கு இடைக்கால தடை விதித்து இஸ்லாமாபாத் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதனை மீறி அரசினை விமர்சித்தால் அந்த யூடியூப் சேனல்கள் நிரந்தரமாக முடக்கப்படும் எனவும் கோர்ட்டு தெரிவித்துள்ளது. இதனையடுத்து வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
யூ டியூப் சேனல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடையால் மக்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. இது கருத்து சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கும் என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே இதனை எதிர்த்து அவர்கள் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் யூடியூப் சேனல் முடக்கப்பட்ட விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அமீர் கான் தற்பொழுது சித்தாரே ஜமீன் பர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகிறது.
அமீர் கான் தற்பொழுது சித்தாரே ஜமீன் பர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான சாம்பியன் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை ஆர்.எஸ் பிரசன்னா இயக்கியுள்ளார். படத்தை அமீர் கான் தயாரித்துள்ளார்.
அமீர் கானுடன் ஜெனிலியா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் அமீர் கான் இந்த படத்தை எந்த ஓடிடி தளங்களிலும் விற்க மாட்டேன் என்ற முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்படம் வெளியாகி 2 மாதங்கள் கழித்து யூடியூபில் பே பெர் வியூ என்ற ஆப்ஷனில் வெளியிடப்போவதாக கூறியுள்ளார். இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படி செய்தல் டிஜிடெல் விற்பனையில் இது ஒரு புது முயற்சியாக கருதப்படும்.
- பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவின் கடைசி பாடல் யூ டியூப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
- பதிவேற்றம் செய்யப்பட்டதிலிருந்து இந்தப் பாடல் 33 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது.
சண்டிகர்:
பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார் இந்த கொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்றாா். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சித்து மூஸ் வாலா சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு இசையமைத்த இந்த பாடல் சட்லஜ்-யமுனா இணைப்பு கால்வாயைப் பற்றிப் பேசுகிறது. இந்த இசை வீடியோ கடந்த ஜூன் 23 அன்று யூடியூப்பில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், பஞ்சாபி பாடகரான சித்து மூஸ் வாலாவின் கடைசி பாடலான பஞ்சாபின் தண்ணீர் பிரச்சினை குறித்து பேசும் எஸ்ஒய்எல் (SYL) என்ற பாடல் யூ டியூப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
பதிவேற்றம் செய்யப்பட்டதிலிருந்து இந்தப் பாடல் தற்போது வரை 2.7 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது மற்றும் 33 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






