என் மலர்
நீங்கள் தேடியது "சிதாரே ஜமீன் பர்"
- லால் சிங் சத்தா' படத்தின் தோல்விக்குப் பின் உடைந்து போய்விட்டேன்.
- சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது.
அமீர் கான் நடிப்பில் உருவாகியுள்ள சித்தாரே ஜமீன் பர் என்ற திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான சாம்பியன் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை ஆர்.எஸ் பிரசன்னா இயக்கியுள்ளார். படத்தை அமீர் கான் தயாரித்துள்ளார். இப்படத்தில் அமீர் கானுடன் ஜெனிலியாவும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது.
இந்நிலையில், சித்தாரே ஜமீன் பர் படம் தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டதாக அமீர் கான் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசிய அமீர் கான், "லால் சிங் சத்தா' படத்தின் தோல்விக்குப் பின் உடைந்து போய்விட்டேன். அதனால் நடிப்பிலிருந்து பிரேக் எடுத்துக்கொள்ள விரும்பினேன். இது குறித்து இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னாவிடம் தெரிவித்தேன். ஒரு நடிகராக இல்லாமல் தயாரிப்பாளராக திரைத்துறையில் தொடருங்கள் என்று அவர் என்னிடம் சொன்னார். நான் அதற்கு ஒப்புக் கொண்டேன்.
பின்னர் ஃபர்ஹான் அக்தர் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரிடம் சித்தாரே ஜமீன் பர் படத்தில் நடிக்க பேசினோம். அவர்களுக்கு இப்படத்தின் கதை மிகவும் பிடித்திருந்தது.இந்தி மற்றும் தமிழில் இப்படத்தை எடுக்க திட்டமிட்டு, இருவரின் கால்சீட் தேதிகளை வாங்கினோம்.
இப்படத்தின் கதை விவாதத்தின் போதுதான் நாம் ஏன் இந்தப் படத்தில் நடிக்கக் கூடாது என எனக்கு தோன்றியது. அந்த அளவுக்கு இப்படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தது. நான் இப்படத்தில் நடிக்க இயக்குனர் ஆர்.எஸ்.பிரசன்னா ஒப்புக் கொண்டார். பின்னர் பர்ஹான் அக்தர் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரிடமும் பேசி இதுகுறித்து மன்னிப்பு கோரினேன். அவர்களுக்கு இது முதலில் ஏமாற்றமாக இருந்தாலும் பின்னர் எனது சூழ்நிலைமையை புரிந்துக் கொண்டார்கள்" என்று அமீர் கான் தெரிவித்தார்.
- சிதாரே ஜமீன் பர் படத்தை அமீர் கான் தயாரித்துள்ளார்.
- இப்படத்தில் அமீர் கானுடன் ஜெனிலியாவும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
அமீர் கான் நடிப்பில் உருவாகியுள்ள சித்தாரே ஜமீன் பர் என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான சாம்பியன் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை ஆர்.எஸ் பிரசன்னா இயக்கியுள்ளார். படத்தை அமீர் கான் தயாரித்துள்ளார். இப்படத்தில் அமீர் கானுடன் ஜெனிலியாவும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், அமீர் கானின் சித்தாரே ஜமீன் பர் படத்தை சச்சின் டெண்டுல்கர் பாராட்டி பேசி வீடியோ வெளியியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், சித்தாரே ஜமீன் பர் மிகவும் நல்ல படம். இப்படம் உங்களை சிரிக்கவும் வைக்கும் அழவும் வைக்கும். விளையாட்டு நமக்கு எல்லாவற்றையும் கற்று கொடுக்கும் சக்தி கொண்டது என்று நான் எப்போதும் கூறி வருகிறேன்" என்று பேசினார்
- அமீர் கான் தற்பொழுது சித்தாரே ஜமீன் பர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகிறது.
அமீர் கான் தற்பொழுது சித்தாரே ஜமீன் பர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான சாம்பியன் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை ஆர்.எஸ் பிரசன்னா இயக்கியுள்ளார். படத்தை அமீர் கான் தயாரித்துள்ளார்.
அமீர் கானுடன் ஜெனிலியா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் அமீர் கான் இந்த படத்தை எந்த ஓடிடி தளங்களிலும் விற்க மாட்டேன் என்ற முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்படம் வெளியாகி 2 மாதங்கள் கழித்து யூடியூபில் பே பெர் வியூ என்ற ஆப்ஷனில் வெளியிடப்போவதாக கூறியுள்ளார். இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படி செய்தல் டிஜிடெல் விற்பனையில் இது ஒரு புது முயற்சியாக கருதப்படும்.
- அமீர்கானுடன் ஜெனிலியா முதல் முறையாக இப்படத்தில் ஜோடியாக இணைந்து உள்ளார்.
- அமீர்கான் - ஜெனிலியா படப்பிடிப்பின் போது உற்சாகமாக அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி உள்ளது.
பிரபல இந்தி நடிகர் அமீர்கான்- ஜெனிலியா தேஷ்முக் ஜோடியாக நடிக்கும் இந்தி படம் 'சிதாரே ஜமீன் பர்'. இந்த படத்தை இயக்குனர் பிஆர்.எஸ்.பிரசன்னா இயக்கி வருகிறார்.
'லால் சிங் சதா' படத்தை தொடர்ந்து ஒரு வருட இடைவெளிக்கு பின் தற்போது இந்த புதிய படத்தில் அமீர்கான் நடிக்க தொடங்கி உள்ளார்.மேலும் இந்த படத்தின் நடிகர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியிடப்பட வில்லை.அமீர்கானுடன் ஜெனிலியா முதல் முறையாக இப்படத்தில் ஜோடியாக இணைந்து உள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இப்படம் வெளியிடப்படுகிறது.இந்நிலையில் அமீர்கான் - ஜெனிலியா இருவரும் படப்பிடிப்பின் போது செட்டில் உற்சாகமாக அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி உள்ளது.
அந்த புகைப்படத்தில் ஜெனிலியா வெள்ளை நிற மேலாடை மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து மிக உற்சாகமாக சிரிப்பது போன்றும் அமீர்கான் கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்து அருகில் அமர்ந்து இருப்பது போன்றும் காணப்படுகிறது.இந்த புகைப்படத்தை இணையதளத்தில் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
2008 -ல், ஜெனிலியா இம்ரான் கானுடன் 'ஜானே து...யா ஜானே' படத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது அமீர்கானுடன் இப்படத்தில் நடித்து வருகிறார்
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






