ஜெனிலியா - அமீர்கான் ஜோடியாக நடிக்கும் 'சிதாரே ஜமீன் பர் ' படம் புது 'அப்டேட்'

அமீர்கானுடன் ஜெனிலியா முதல் முறையாக இப்படத்தில் ஜோடியாக இணைந்து உள்ளார்.அமீர்கான் - ஜெனிலியா படப்பிடிப்பின் போது உற்சாகமாக அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி உள்ளது.
ஜெனிலியா - அமீர்கான் ஜோடியாக நடிக்கும் 'சிதாரே ஜமீன் பர் ' படம் புது 'அப்டேட்'
Published on

பிரபல இந்தி நடிகர் அமீர்கான்- ஜெனிலியா தேஷ்முக் ஜோடியாக நடிக்கும் இந்தி படம் 'சிதாரே ஜமீன் பர்'. இந்த படத்தை இயக்குனர் பிஆர்.எஸ்.பிரசன்னா இயக்கி வருகிறார்.

'லால் சிங் சதா' படத்தை தொடர்ந்து ஒரு வருட இடைவெளிக்கு பின் தற்போது இந்த புதிய படத்தில்  அமீர்கான் நடிக்க தொடங்கி உள்ளார்.மேலும் இந்த படத்தின் நடிகர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியிடப்பட வில்லை.அமீர்கானுடன் ஜெனிலியா முதல் முறையாக இப்படத்தில் ஜோடியாக இணைந்து உள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இப்படம் வெளியிடப்படுகிறது.இந்நிலையில் அமீர்கான் - ஜெனிலியா இருவரும் படப்பிடிப்பின் போது செட்டில் உற்சாகமாக அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி உள்ளது.

அந்த புகைப்படத்தில் ஜெனிலியா வெள்ளை நிற மேலாடை மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து மிக உற்சாகமாக சிரிப்பது போன்றும் அமீர்கான் கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்து அருகில் அமர்ந்து இருப்பது போன்றும் காணப்படுகிறது.இந்த புகைப்படத்தை இணையதளத்தில் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

2008 -ல், ஜெனிலியா இம்ரான் கானுடன் 'ஜானே து...யா ஜானே' படத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது அமீர்கானுடன் இப்படத்தில் நடித்து வருகிறார்               

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com