`சிதாரே ஜமீன் பர்' படத்தை ஓடிடியில் வெளியிடமாட்டேன் - அமீர் கானின் அதிரடி முடிவு

அமீர் கான் தற்பொழுது சித்தாரே ஜமீன் பர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகிறது.
`சிதாரே ஜமீன் பர்' படத்தை ஓடிடியில் வெளியிடமாட்டேன் - அமீர் கானின் அதிரடி முடிவு
Published on: 

அமீர் கான் தற்பொழுது சித்தாரே ஜமீன் பர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான சாம்பியன் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை ஆர்.எஸ் பிரசன்னா இயக்கியுள்ளார். படத்தை அமீர் கான் தயாரித்துள்ளார்.

அமீர் கானுடன் ஜெனிலியா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் அமீர் கான் இந்த படத்தை எந்த ஓடிடி தளங்களிலும் விற்க மாட்டேன் என்ற முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரைப்படம் வெளியாகி 2 மாதங்கள் கழித்து யூடியூபில் பே பெர் வியூ என்ற ஆப்ஷனில் வெளியிடப்போவதாக கூறியுள்ளார். இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படி செய்தல் டிஜிடெல் விற்பனையில் இது ஒரு புது முயற்சியாக கருதப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com