என் மலர்
பஞ்சாப்
- போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஹர்தீப் சிங்கை மீட்டு ஜலந்தரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
- கபடி வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டம் தில்வான் பகுதியை சேர்ந்தவர் ஹர்தீப் சிங்(வயது 22). கபடி வீரரான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது பயங்கர ஆயுதங்களுடன் மர்மநபர்கள் வந்தனர்.
திடீரென்று ஹர்தீப் சிங்கை சரமாரியாக வெட்டினர். பின்னர் அவரது உடல் பாகங்களை வெளியில் வீசிய அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஹர்தீப் சிங்கை மீட்டு ஜலந்தரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வழியிலேயே ஹர்தீப் சிங் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தில்வான் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கபடி வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
- அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 276 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
மொகாலி:
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 276 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டேவிட் வார்னர் அரை சதம் அடித்து 52 ரன்களில் அவுட் ஆனர். ஜோஷ் இங்கிலிஸ் 45 ரன்னும், ஸ்மித் 41 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டும், பும்ரா, அஷ்வின், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய இந்திய அணி 48.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
சுப்மன் கில் 74 ரன், ருதுராஜ் 71 ரன், சூர்யகுமார் யாதவ் 50 ரன் மற்றும் கே.எல்.ராகுல் 58 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இந்நிலையில், வெற்றி குறித்து கேப்டன் கே.எல்.ராகுல் பேசியதாவது:
நான் கேப்டனாக இருப்பது இது முதல் முறை கிடையாது. யாரேனும் இல்லை என்றால் இந்த பொறுப்பு என்னை தேடி வந்துவிடும். இதற்கு நான் பழகிக் கொண்டு விட்டேன். இந்த பொறுப்பும் எனக்கு பிடித்திருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் எங்கள் அணி வீரர்கள் காட்டிய உத்வேகம் மிகவும் சிறப்பானது.
எங்கள் அணியில் இன்று 5 பந்துவீச்சாளர்கள் தான் இருந்தார்கள். அதனால் அனைவருமே 10 ஓவர்கள் வீச வேண்டிய நிலைமை ஏற்பட்டது. நாங்கள் பேட்டிங் செய்யும்போது கில் மற்றும் ருதுராஜ் சிறப்பான தொடக்கத்தை அளித்தார்கள். எனினும் கில் ஆட்டம் இழந்த பிறகு போட்டியில் நாங்கள் நெருக்கடியை சந்தித்தோம்.
ஏனென்றால் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த வீரர்கள் ஆட்டம் இழந்தால் எப்போதுமே பின்னால் வருபவர்களுக்கு சிக்கல்தான். நானும் சூரியகுமாரும் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்அமைத்தோம். ஒரு வீரராக இது போன்ற கடின சவால்களை சந்திக்க ஆசைப்படுகிறேன்.
அதிரடியாக ஆடி விக்கெட்டுகளை இழக்க நாங்கள் விரும்பவில்லை. போட்டியை கடைசி வரை கொண்டு சென்று வெற்றி பெற வேண்டும் என நானும் சூரியகுமாரும் பேசி வைத்து விளையாடினோம் என தெரிவித்தார்.
- முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 276 ரன்கள் சேர்த்தது.
- தொடர்ந்து ஆடிய இந்தியா 281 ரன்கள் எடுத்து வென்றது.
மொகாலி:
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 276 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய டேவிட் வார்னர் அரை சதம் அடித்து 52 ரன்களில் அவுட் ஆனர். ஜோஷ் இங்கிலிஸ் 45 ரன்னும், ஸ்மித் 41 ரன்னும், லபுசேன் 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்திய அணியின் சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டும், பும்ரா, அஷ்வின், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய இந்திய அணி 48.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
சுப்மன் கில் 74 ரன், ருதுராஜ் 71 ரன், சூர்யகுமார் யாதவ் 50 ரன் மற்றும் கே எல் ராகுல் 58 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.
ஆட்டநாயகன் விருது முகமது ஷமிக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா உடனான வெற்றிக்கு பிறகு வெளியான ஐசிசி தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
இதன்மூலம் இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
- இந்த தொடரின் முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துகிறார்.
மொகாலி:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி இன்று மொகாலியிலும், 2-வது போட்டி 24-ம் தேதி இந்தூரிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி 27-ம் தேதி ராஜ்கோட்டிலும் நடக்கிறது. இப்போட்டிகள் அனைத்தும் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் ஆட்டம் மொகாலியில் இன்று நடைபெற உள்ளது.
முதல் 2 ஆட்டங்களில் கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அஸ்வின் அணிக்கு திரும்பியுள்ளார்.
பேட்டிங்கில் சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் உள்ளனர்.
பந்து வீச்சில் பும்ரா, முகமது சிராஜ், முகமது சமி, பிரசித் கிருஷ்ணா உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர் உள்ளனர்.
இன்றைய போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ள சில வீரர்களுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இத்தொடர் பயன் உள்ளதாக இருக்கும். இதனால் அவர்கள் சிறப்பாக விளையாட முயற்சிப்பார்கள்.
ஆஸ்திரேலிய அணி, சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி விட்டு இந்தியா வந்துள்ளது. டேவிட் வார்னர், லபுசேன், மேத்யூ ஷார்ட், மிட்செல் மார்ஷ், ஸ்டோனிஸ், கேமரூன் கிரீன், ஹேசில்வுட், ஆடம் ஜம்பா, நாதன் எல்லிஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
உலக கோப்பை போட்டிக்கு தயாராகுவதற்கு இந்த தொடர் உதவியாக இருக்கும் என்பதால் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் முனைப்பில் உள்ளனர்.
இதற்கிடையே, இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் விலகி உள்ளனர்.
ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் இதுவரை 146 ஆட்டங்களில் மோதி உள்ளன. இதில் இந்தியா 54 முறையும், ஆஸ்திரேலியா 82 முறையும் வெற்றி பெற்றன. 10 ஆட்டம் முடிவு இல்லை.
இரு அணி வீரர்களின் விபரம் வருமாறு:
இந்தியா:
லோகேஷ் ராகுல் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின், பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
ஆஸ்திரேலியா:
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், மிட்செல் மார்ஷ், லபுசேன், ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ ஷார்ட், கேமரூன் கிரீன், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட், நாதன் எல்லீஸ், ஸ்பென்சர் ஜான்சன், தன்வீர் சங்கா.
- மழை பெய்து கொண்டிருந்ததால் விபத்து நேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- கால்வாயில் விழுந்த பேருந்தை கிரேன் உதவியுடன் எடுக்கப்பட்டது.
பஞ்சாப் மாநிலம் முக்த்சார் மாவட்டத்தில் உள்ள சிர்ஹிந்த் ஃபீடர் கால்வாயில் சுமார் 35 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 8 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
முக்த்சார்- கோட்காபுரா சாலையில் ஜபேல்வாலி கிராமம் அருகில் பிரேக் போட்டபோது பேருந்து சறுக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவத்தின்போது மழை பெய்து கொண்டிருந்ததால் விபத்து நேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழு விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகிறது.
இதுகுறித்து முக்த்சார் துணை கமிஷனர் ரூஹீ டக் கூறுகையில், "கால்வாயில் பலத்த நீரோட்டத்தால் சில பயணிகள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
கால்வாயில் விழுந்த பேருந்து கிரேன் உதவியுடன் எடுக்கப்பட்டது. இதில் காயம் அடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்" என்றார்.
- பாட்டியாலாவில் உள்ள கிராமங்களில் அடிக்கடி மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது.
- போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கிராம மக்களே கொள்ளையர்களை பிடிக்க ரோந்து சென்றனர்.
குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் திருடர்கள் கையில் அகப்பட்டால் அவர்களுக்கு தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பஞ்சாப்பில் மோட்டார் சைக்கிள் திருடர்களுக்கு கிராம மக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. பாட்டியாலாவில் உள்ள கிராமங்களில் அடிக்கடி மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது.
இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கிராம மக்களே கொள்ளையர்களை பிடிக்க ரோந்து சென்றனர். அவ்வாறு சென்றபோது அங்குள்ள ஒரு கிராமத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். உடனே அவருக்கு கழுத்தில் மாலை அணிவித்து கைத்தட்டி மரியாதை செய்ததோடு, அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பினர்.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் இவ்வாறு செய்தால் திருடர்கள் மீண்டும் திருட மாட்டார்கள் என்றனர்.
- பஞ்சாப்பை சேர்ந்த குவார் அம்ரித்பீர்சிங் என்ற வாலிபர் புஷ்-அப் செய்வதில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
- சாதனைக்காக ஜிம்முக்கு சென்றதில்லை. சத்தான உணவு வகைகளையும் எடுத்ததில்லை.
சமீப காலமாக சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள், பெண்கள் என பலரும் பல்வேறு வகைகளில் தங்களது திறமைகளை நிரூபித்து கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் பஞ்சாப்பை சேர்ந்த குவார் அம்ரித்பீர்சிங் என்ற வாலிபர் புஷ்-அப் செய்வதில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள உமர்வாலா என்ற கிராமத்தை சேர்ந்த 21 வயதான குவார் அம்ரித்பீர்சிங் தனது முதுகில் 20 பவுண்ட் எடை கொண்ட பேக்கை சுமந்து கொண்டு ஒரு நிமிடத்தில் விரல் நுனியில் 86 புஷ்-அப்களை செய்து இந்த சாதனையை படைத்துள்ளார். இவரது சாதனை முயற்சியின் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது.
அதனை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து குவார் அம்ரித்பீர்சிங் கூறுகையில், நான் இந்த சாதனைக்காக ஜிம்முக்கு சென்றதில்லை. சத்தான உணவு வகைகளையும் எடுத்ததில்லை. வழக்கமான உடற்பயிற்சி முறைகளை பின்பற்றினேன் என்றார்.
- குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்து செய்யப்படும்
- அரசியலமைப்பின் கீழ் கவர்னருக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைக்கு நான் கட்டுப்பட்டுள்ளேன்
பா.ஜனதா அல்லாத கட்சி ஆட்சி செய்து வரும் பல மாநிலங்களில், அம்மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையில் மோதல் போக்கு இருந்து வருகிறது. இது தமிழகம் மற்றும் மேற்கு வங்காளத்தில் மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சிக்கும், அம்மாநில கவர்னருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
கவர்னர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு பகவந்த் மான் அரசு சார்பில் பதில் அளிக்கவில்லை எனத் தெரிகிறது.
இதனால் கோபம் அடைந்து கவர்னர் பல்வாரிலால் புரோகித் அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் "நான் எழுதிய கடிதத்திற்கு தாங்கள் பதில் அளிக்கவில்லை என்றால், அரசியலமைப்பு எந்திரம் தோல்வியடைந்ததாக குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி, சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி ஆட்சியை கலைக்க பரிந்துரை செய்வேன். மேலும், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 124-ன்படி கிரிமினல் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்து செய்யப்படும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், "அரசியலமைப்பின் கீழ் ஆளுநருக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைக்கு நான் கட்டுப்பட்டுள்ளேன். எனவே, சட்டத்திற்கு உட்பட்டு நான் உங்களுக்கு அறிவுரை கூறுகிறேன். உங்களை எச்சரிக்கிறேன் மற்றும் எனது கடிதங்களுக்கு பதிலளிக்கவும், கோரப்பட்ட தகவல்களை எனக்கு வழங்கவும் கேட்டுக்கொள்கிறேன்" எனவும் தெரிவித்துள்ளார்.
- இவர்கள் ஹர்விந்தர் ரிண்டா மற்றும் கோல்டி ப்ரார் ஆகியோரின் செயல்பாட்டாளர்கள்
- இலக்கு வைத்து கொலைகளை செய்ய இவர்கள் திட்டமிட்டுள்ளனர்
இந்தியாவின் 77வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகளின் தாக்குதலோ, நாசவேலைகளோ நடைபெறாமல் இருக்க ராணுவமும், அனைத்து மாநில காவல்துறையினரும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.
தேச எல்லைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 5 பேரை அம்மாநில காவல்துறை கைது செய்திருக்கிறது.
"மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து பஞ்சாப் காவல்துறை இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளது. பயங்கரவாதிகளாக கருதப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹர்விந்தர் ரிண்டா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த கோல்டி ப்ரார் ஆகியோரின் செயல்பாட்டாளர்களாக இந்த 5 பேரும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மாநிலம் முழுவதும் இலக்கு வைத்து கொலைகளை செய்ய திட்டமிட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு வெளிநாட்டு கைத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளோம்" என இந்த நடவடிக்கை குறித்து பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குநர் கௌரவ் யாதவ் தெரிவித்தார்.
சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நேற்று பஞ்சாபின் டர்ன் டரன் பகுதியில் தீவிரவாத குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தானை சேர்ந்த அவர் இந்தியாவுக்குள் அத்து மீறி நுழைய முயன்றது தெரியவந்தது.
- கடந்த மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான 3 கடத்தல் பொருட்கள் மீட்கப்பட்டது.
பஞ்சாபின் டர்ன் தரானில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இன்று அதிகாலை இந்திய ராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டர்ன் தரான் மாவட்டத்தில் எல்லையோர கிராமமான தெகலான் அருகே விலும் என்ற இடத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு வாலிபர் திரிந்தார்.
பாகிஸ்தானை சேர்ந்த அவர் இந்தியாவுக்குள் அத்து மீறி நுழைய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை பாதுகாப்பு படை வீரர்கள் எச்சரித்தனர். தொடர்ந்து அவர் எல்லைநோக்கி விரைந்ததால் ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த நபர் குண்டு பாய்ந்து பலியானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். கடந்த மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான 3 கடத்தல் பொருட்கள் மீட்கப்பட்டது.