என் மலர்

  நீங்கள் தேடியது "IPS officer"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். அவர் ‘கர்நாடக சிங்கம்’ என்ற புனைப்பெயர் பெற்றவர் ஆவார்.
  பெங்களூரு:

  பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக இருந்தவர் அண்ணாமலை. ஐ.பி.எஸ். அதிகாரியான அவர் கடந்த ஆண்டு (2018) அக்டோபர் மாதம் பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றார். அதன்பிறகு பல்வேறு வழக்குகளை திறமையாக கையாண்டார். இரவு நேரங்களில் ரவுடிகளை பிடித்து எச்சரிக்கை விடுத்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுத்தார்.

  மேலும் பணிச்சுமையால் அவதிப்பட்ட போலீசாருக்கு கண்டிப்பாக வாரவிடுமுறை அளிக்கும் நடைமுறையை அமல்படுத்தினார். இந்த நிலையில், ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை தனது பணியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், அவர் அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் பரவின. இதன் தொடர்ச்சியாக நேற்று ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை தனது பணியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை அவர் கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜூவிடம் வழங்கினார்.

  ராஜினாமா செய்துள்ள ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். இவருடைய தந்தை பெயர் குப்புசாமி. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்த அண்ணாமலை எம்.பி.ஏ. படிப்பையும் முடித்தார். கடந்த 2011-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணிக்கு தேர்வானதை தொடர்ந்து உடுப்பி மாவட்டம் கார்கலாவில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியை தொடங்கிய அவர் உடுப்பி, சிக்கமகளூரு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணி செய்தார்.

  சிக்கமகளூருவில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பின்னர் அவர் பெங்களூரு துணை போலீஸ் கமிஷனராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். உடுப்பி, சிக்கமகளூருவில் பணி செய்தபோது அவர் ரவுடிகளின் கொட்டத்தை அடக்கினார். பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தார். இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டார். தவறு செய்தவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து வந்ததன் மூலம் பொதுமக்களால் ‘கர்நாடக சிங்கம்’ என்று அழைக்கப்பெற்றார்.  இந்த நிலையில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமியை சந்தித்த அண்ணாமலை தனது ராஜினாமா பற்றி அவரிடம் பேசிவிட்டு வெளியே வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  கர்நாடகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றியது பெருமையாக உள்ளது. எனது ராஜினாமா முடிவை மறு பரிசீலனை செய்யும்படி முதல்-மந்திரி குமாரசாமி கூறினார். எனது முடிவை நான் மாற்றவில்லை. என்னை பெங்களூருவுக்கு இடமாற்றம் செய்து பணி வழங்கியது குமாரசாமி தான். அவர் கொடுத்த பணியை 8 மாதங்களாக செய்தேன். அதன்பிறகு பாராளுமன்ற தேர்தல் வந்தது. குமாரசாமி எளிமையாக நடந்து கொள்ளும் முதல்-மந்திரி. முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல், முன்னாள் போலீஸ் மந்திரிகளான பரமேஸ்வர், கே.ஜே.ஜார்ஜ் ஆகியோர் எனக்கு நல்ல ஆதரவு அளித்தனர். அரசியல் அழுத்தம் காரணமாக நான் ராஜினாமா செய்யவில்லை. 9 ஆண்டுகளாக ஐ.பி.எஸ். பணி செய்த நிலையில் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.

  இவ்வாறு அவர் கூறினார்.

  மேலும், தனது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்காக அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

  எனது பணியை ராஜினாமா செய்துள்ளேன். இந்த முடிவை கடந்த 6 மாதங்களாக யோசித்து எடுத்துள்ளேன். காக்கிச்சட்டை(போலீஸ் உடை) அணிந்து செயல்பட்ட ஒவ்வொரு நிகழ்வுகளையும் என்னால் மறக்க முடியாது. போலீஸ் பணி என்பது கடவுளுக்கு நெருக்கமான பணி என்பதை நம்புகிறேன். அத்துடன் உயர் அழுத்த பணியாகவும் இருக்கிறது. இதனால் ஏராளமான விழாக்களில் நான் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

  கடந்த ஆண்டு கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு சென்றபோது வாழ்க்கையின் முக்கியத்துவம் பற்றி அறிந்தேன். ஐ.பி.எஸ். அதிகாரி மதுக்கர் செட்டியின் இறப்பும் என் வாழ்க்கையை சுயபரிசோதனை செய்ய தூண்டியது. இதனால் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பணியை ராஜினாமா செய்ய முடிவு செய்து அதை செய்துள்ளேன். என் செயல்பாடு யாரையும் பாதித்து இருந்தால் மன்னிப்பு கோருகிறேன்.

  அடுத்ததாக என்ன செய்ய இருக்கிறீர்கள் என கேள்விகள் எழுகின்றன. நான் சிறிது காலம் ஓய்வில் இருக்க விரும்புகிறேன். எனது மகனுக்கு நல்ல தந்தையாக இருக்க விரும்புகிறேன். அவனுடன் நேரத்தை செலவிட உள்ளேன். அதன்பிறகு அடுத்து செய்யும் செயல்பற்றி முடிவு எடுப்பேன்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரப்பிரதேசத்தில் 4 நாட்களுக்கு முன் எலிமருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சுரேந்திர குமார் தாஸ் சிகிச்சை பலனின்றி பலியானார்.
  லக்னோ:

  உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்து வருகிறார் சுரேந்திர குமார் தாஸ். லக்னோவை பூர்விகமாக கொண்டரான தாஸின் மனைவி மருத்துவராக இருக்கிறார். காவல்துறை வட்டாரத்தில் சிறந்த அதிகாரி என்று பெயர் பெற்றவரான இவர் கடந்த புதன் கிழமை காலை தனது இல்லத்தில் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

  இதையடுத்து, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் எலிமருந்து சாப்பிட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரப்பிரதேசத்தில் 2 நாட்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி, மனைவியுடனான சண்டை காரணமாகவே விஷம் குடித்ததுள்ளதாக கூறப்படுகிறது.
  லக்னோ:

  உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்து வருகிறார் சுரேந்திர தாஸ். லக்னோவை பூர்விகமாக கொண்டரான தாஸின் மனைவி மருத்துவராக இருக்கிறார். காவல்துறை வட்டாரத்தில் சிறந்த அதிகாரி என்று பெயர் பெற்றவரான இவர் கடந்த புதன் கிழமை காலை தனது இல்லத்தில் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

  இதையடுத்து, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது உடல்நிலை தேறியுள்ளார். கிருஷ்ண ஜெயந்தி அன்று மனைவி அசைவ பீட்சா ஆர்டர் செய்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாஸ் பேசிய போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

  உறவினர்கள் வந்து ஒன்று சேர்த்து வைத்தாலும், இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததால் மனம் உடைந்த தாஸ் விஷம் குடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐஏஎஸ் தேர்வில் புளூ டூத் வைத்து காப்பியடித்து கைது செய்யப்பட்ட தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரீம் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். #SafeersKarim
  சென்னை:

  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐபிஎஸ், ஐஏஎஸ் பதவிகளுக்காக நடந்த தேர்வில் புளூ டூத் வைத்து காப்பி அடித்த தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான சபீர் கரீம் கையும் களவுமாக பிடிபட்டார். சபீர் கரீம் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். ஐபிஎஸ் அதிகாரியான சபீர் கரீம் நாங்குநேரி சப்டிவிஷனில் ஏஎஸ்பியாக பணியாற்றி வந்தார். கேரளாவில் அவரது பெயரில் அவருடைய மனைவி ஐஏஎஸ் பயிற்சி அகாடமி நடத்துகிறார்.  காப்பி அடிக்க உதவிய அவரது மனைவி ஜாய்சி, அவரது நண்பரும் தனியார் ஐஏஎஸ் அகாடமி இயக்குனருமான ராம்பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சபீர் கரீமிடமிருந்து தேர்வு அறைக்குள் மறைத்துக் கொண்டுசென்ற 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.  சபீர் கபீர் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

  வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சபீர்கரீம் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், யுபிஎஸ்சி தேர்வாணைய  விசாரணைக்கு பின், சபீர்கரீம் ஐபிஎஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளின் வரலாற்றில் பதவிநீக்கம் செய்யப்படுவது இது முதல் முறை ஆகும். #SafeersKarim
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காணாமல் போன ஐ.பி.எஸ் அதிகாரியின் சகோதரர் பயங்கரவாதியாக மாறி, ஆயுதங்களுடன் நிற்கும் புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #JammuKashmir
  ஸ்ரீநகர்:

  ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரர் ஷம்சுல் ஹக் என்பவர் கடந்த மே மாதம் காணாமல் போனாதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து உள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ஷம்சுல் ஹக்கை தேடி வந்தனர்.

  இந்நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தபடி, ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன் ஷம்சுல் ஹக் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  ஷம்சுல் ஹக், ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தில் மே மாதம் 22-ம் தேதி இணைந்ததாக அந்த புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், புகைப்படத்தின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  ஜம்மு காஷ்மீரில் இளைஞர்கள் பயங்கரவாத இயக்கத்துடன் இணைவது இயல்பான ஒன்றாக கருதப்பட்டாலும், ஐ.பி.எஸ் அதிகாரியின் சகோதரர் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #JammuKashmir
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மீது இளம் பெண்கள் கிரக்கம் கொள்வது போல, ஐபிஎஸ் அதிகாரியின் உடற்கட்டில் மயங்கிய பெண் ஒருவர் அவரை சந்திக்க 1200 கி.மீ பயணித்துள்ளார்.
  போபால்:

  மத்தியப்பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் மாவட்ட எஸ்.பி.யாக இருப்பவர் சச்சின் அதுல்கர். 34 வயதான இவருக்கு பெண் ரசிகர்கள் அதிகம். நல்ல உடற்கட்டுடன் காணப்படும் இவரது புகைப்படம் சமீபத்தில் இணையதளங்களில் வைரலாக பரவியது. இதனை அடுத்து, அவருக்கு மேலும் ரசிகர்கள் அதிகமாயினர்.

  சச்சினின் புகைப்படத்தை இணையத்தில் பார்த்த பஞ்சாபை சேர்ந்த 27 வயது இளம்பெண், பெட்டியை கட்டி 1200 கிலோ மீட்டர் பயணம் செய்து மூன்று நாட்களுக்கு முன்னதாக மத்திய பிரதேசத்திற்கு வந்துள்ளார். எஸ்.பி அலுவலகத்திற்கு வந்து சச்சின் அதுல்கரை பார்த்தே தீருவேன் என ஒற்றக்காலில் நின்ற அந்த பெண்ணை, போலீசார் ரெயில் நிலையத்துக்கு கூட்டிச்சென்று பஞ்சாப்புக்கு ரெயில் ஏற்ற முயற்சித்துள்ளனர்.

  ஆனால், போகும் வழியில் ரெயிலில் இருந்து குதித்துவிடுவேன் என அந்த பெண் மிரட்டல் விடவே, போலீசார் பின்வாங்கினர். என்ன சொல்லியும் அந்த பெண் சமாதானம் ஆக மறுக்கிறார். மனநல ஆலோசகர்களிடம் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம் என உள்ளூர் போலீசார் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

  இது தொடர்பாக கருத்து தெரிவித்த எஸ்.பி சச்சின் அதுல்கர், “பொதுவான விவகாரங்கள் குறித்து என்னை சந்திப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அந்த பெண் தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டும் என்கிறார். அது தவறான முறையாகும்” என கூறியுள்ளார்.
  ×