search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Female doctor"

    • அதிக வரதட்சணை தராத காரணத்தால் திருமணத்திற்கு ரூவைஸ் மறுப்பு தெரிவித்தது ஷஹானாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • டாக்டர் ரூவைஸ் கேரள மருத்துவ முதுநிலை பட்டதாரிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராக உள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவ னந்தபுரம் அருகே உள்ள வெஞ்சாரமூடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் அசீஸ். இவரது மகள் ஷஹானா(வயது28). எம்.பி.பி.எஸ். முடித்திருக்கும் இவர், திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை பிரிவு முதுகலை படித்து வந்தார்.

    இதற்காக அவர் மருத்து வக்கல்லூரி அருகே உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, மாணவி ஷஹானா ஆஸ்பத்திரி பணிக்கு வரவில்லை. இதனால் சந்தே கமடைந்த மருத்துவர்கள், அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தனர்.

    அப்போது அங்கு மயங்கிய நிலையில் ஷஹானா கிடந்தார். அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கெண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை சோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    அவர் மயக்க மருந்தை அதிகளவில் சாப்பிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்த மருத்துவக்கல்லூரி போலீசார், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மாணவியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது மாணவி ஷஹானா, டாக்டரான நண்பர் ஒருவரை காதலித்து வந்ததும், அவரை திருமணம் செய்ய ஏற்பாடு நடந்துவந்த நிலையில், நண்பரின் குடும்பத்தினர் அதிக வரதட்சணை கேட்டதாக வும், அதன் காரணமாக ஷஹானா தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.

    இளம் மருத்துவர் ஷஹானா தனது நண்பரான டாக்டர் ரூவைஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள 150 சவரன் தங்க நகைகள், 15 ஏக்கர் நிலம் மற்றும் பி.எம்.டபிள்யூ. கார் உள்ளிட்டவைகளை வரதட்சணையாக தர வேண்டும் என்று ரூவைஸ் கேட்டிருக்கிறார்.

    அதனைக்கேட்டு ஷஹானா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவ்வளவு வரதட்சனை தர ஷஹானாவின் குடும்பத்தினர் முன்வரவில்லை. இதனால் திருமண முடிவில் இருந்து ரூவைஸ் பின்வாங்கியதாக தெரிகிறது. திருணம் நிச்சயிக்கப்பட்டுவிட்ட நிலையில், அதிக வரதட்சணை தராத காரணத்தால் திருமணத்திற்கு ரூவைஸ் மறுப்பு தெரிவித்தது ஷஹானாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் மனவேதனையில் இருந்து வந்திருக்கிறார். அவர் ஒரு மாத காலமாக மருத்துவ கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். பின்பு அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதன் பிறகு மருத்துவக்கல்லூரிக்கு சென்றிருக்கிறார். அதன்பிறகு தான், ஷஹானா தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார்.

    தான் தங்கியிருந்த அறையில் யாரும் இல்லாத நேரத்தில் மயக்க மருந்தை அதிகளவில் உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டிருக் கிறார். தற்கொலை செய்வதற்கு முன், தனது தற்கொலைக்காக காரணத்தை கடிதமாகவும் எழுதி வைத்திருக்கிறார். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    பெண் டாக்டர் தற்கொலை விவகாரம் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்க எடுக்க மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டார். இதையடுத்து ஷஹானாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயம் செய்து விட்டு ஏமாற்றிய அவரது நண்பரான டாக்டர் ரூவைஸ் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

    அவர் மீது தற்கொலைக்கு தூண்டியது, வரதட்சணை தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. மேலும் கருநாகப்பள்ளியில் உள்ள தனது வீட்டில் இருந்த டாக்டர் ரூவைசை போலீசார் பிடித்தனர். அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் டாக்டர் ரூவைஸ் கைது செய்யப்படுவாரா என்பது தெரியவரும்.

    டாக்டர் ரூவைஸ் கேரள மருத்துவ முதுநிலை பட்டதாரிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராக உள்ளார். அந்த பொறுப்பில் இருந்து டாக்டர் ரூவைஸ் நீக்கப்பட்டுள்ளார். விசாரணையில் வெளிப் படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் அவர் நிக்கப்படடுள்ளதாக மருத்துவ முதுநிலை பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

    • தங்கியிருந்த அறையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஷஹானா எழுதியிருந்த ஒரு கடிதம் சிக்கியது.
    • தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அறுவை சிகிச்சை பிரிவில் முதுகலை படித்து வந்தவர் டாக்டர் ஷஹானா (வயது26).

    இதற்காக அவர் அங்குள்ள குடியிருப்பில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவர் மருத்துவமனை இரவு பணிக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள், நள்ளிரவு 11.30 மணியளவில் அவர் தங்கியிருந்த குடுயிருப்புக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு டாக்டர் ஷஹானா சுயநினைவின்றி மயங்கி கிடந்தார்.

    இதனால் அதர்ச்சியடைந்த அவர்கள், அது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, ஷஹானா இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது உடலை அங்கிருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் தங்கியிருந்த அறையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஷஹானா எழுதியிருந்த ஒரு கடிதம் சிக்கியது.

    அதில் அனைவருக்கும் பணம் தேவை, பணம் எல்லாவற்றையும் வெல்லும் என்று மட்டும் எழுதியிருந்தார். அதனடிப்படையில் ஷஹானா குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல புதிய தகவல்கள் கிடைத்தன.

    ஷஹானாவுக்கும், அவரது நண்பரான மருத்துவர் ஒருவருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்துள்ளது. ஆனால் மாப்பிள்ளை வீட்டார் அதிக வரதட்சணை கேட்டதாகவும், அதனை தராவிட்டால் திருமணம் நடக்காது என்றும் தெரிவித்ததாகவும் தெரிகிறது. அதிக தொகை வரதட்சணையாக கேட்டதால் ஷஹானா குடும்பத்தினரால் அந்த தொகையை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதன் காரணமாக ஷஹானாவை திருமணம் செய்யும் முடிவில் இருந்து அவரது நண்பர் பின்வாங்கியதாக தெரிகிறது. திருமணம் முடிவில் இருந்து மாப்பிள்ளை வீட்டினர் பின் வாங்கிய வேதனையில் ஷஹானா தற்கொலை செய்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

    அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதுகலை படிக்கும் பெண் மருத்துவர் ஒருவர், கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மெகருன்னிசாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஆலப்புழாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள காயங்குளம் பகுதயை சேர்ந்தவர் ஷபீக் ரகுமான். இவரது மனைவி மெகருன்னிசா (வயது48). இவர் மாவேலிக்கரை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.

    இவர்களது மூத்த மகன் பென்யாமின் கனடா நாட்டில் உயர்கல்வி பயின்று வந்தார். இந்நிலையில் அங்கு நடந்த கார் விபத்தில் சிக்கி பெய்னாமின் பரிதாபமாக இறந்தார். அவர் இறந்தது குறித்து ஆலப்புழாவில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் வந்தது.

    விபத்தில் மகன் இறந்த தகவலைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மகனின் இறப்பை மெகருன்னிசாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மெகருன்னிசா தூக்கு போடுதவற்கு முன்னதாக தனது தோழி ஒருவரிடம் போனில் பேசி, தனது மகன் இறந்துவிட்டதால் தனக்கு வாழ விரும்பமில்லை என்று கூறியிருக்கிறார். அதுபற்றி அவர், மசூதிக்கு சென்றிருந்த மெகருன்னிசாவின் கணவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    இதனால் பதட்டமடைந்த அவர் தனது இளைய மகனுடன், மசூதியில் இருந்து வீட்டுக்கு அவசரஅவசரமாக வந்திருக்கிறார். அவர் வீட் டுக்கு வந்து பார்த்த போது மெகருன்னிசா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து காயம்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மெகருன்னிசாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மகன் இறந்த துக்கத்தில் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஆலப்புழாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • தனக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து அந்த பெண் மருத்துவர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
    • பெண் டாக்டர் பாலியல் புகார் அளித்த டாக்டர் மனோஜ் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த பெண் டாக்டர் ஒருவர், தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு எர்ணாகுளம் மருத்துவமனையில் பணி புரிந்தபோது, பொது மருத்துவதுறையில் தலைவராக பணியாற்றிய டாக்டர் மனோஜ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது புகார் கொடுத்துள்ளார்.

    அறுவை சிகிச்சை செய்த போது மூத்த ஆலோசகர் ஒருவர் தன்னிடம் அத்துமீற முயன்றது குறித்து புகார் அளிக்க, மனோஜின் ஆலோசனை அறைக்கு சென்றபோது, அவர் தன்னை பிடித்து வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயன்றதாக அந்த பெண் மருத்துவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    தனக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து அந்த பெண் மருத்துவர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் உள்ளிட்டோரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். அது மட்டுமின்றி போலீசாருக்கு இ-மெயிலில் தனது புகார் மனுவை அனுப்பினார்.

    அதன்பேரில் மின்னஞ்சல் மூலமாக பெண் டாக்டரை தொடர்பு கொண்டு புகார் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது தனக்கு டாக்டர் மனோஜ், பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து போலீசாரிடம் பெண் டாக்டர் தெரிவித்திருக்கிறார்.

    தனது தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் டாக்டர் மனோஜ் மீது 4 ஆண்டுகளாக புகார் கொடுக்காமல், தற்போது கொடுத்திருப்பதாகவும் அப்போது அவர் போலீசாரிடம் விளக்கமும் அளித்திருக்கிறார்.

    இந்நிலையில் பெண் டாக்டர் பாலியல் புகார் அளித்த டாக்டர் மனோஜ் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். தற்போது டாக்டர் மனோஜ், எர்ணாகுளத்தில் உள்ள மற்றொரு மருத்துவ மனையில் பணி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தற்கொலை செய்த சம்பவம் மாப்பிள்ளை வீட்டாருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நெருஞ்சலக்குடி வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. விவசாயி. இவரது மகள் அன்பரசி (வயது 27). பிசியோதெரபி டாக்டர். இவர் திருச்சி உறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் திருச்சியில் வேறொரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஈரோடு வாலிபர் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அது காதலாக மாறியது. இது தெரியாமல் பெற்றோர் மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். அப்போது அன்பரசி தனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என காலம் தாழ்த்தி வந்தார்.

    பின்னர் மகள் வேறு வாலிபரை காதலிக்கும் தகவல் கிடைத்தது. இதனால் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை நிறுத்தினர். இதற்கிடையே காதலனுடன் ஏற்பட்ட தகராறில் அன்பரசி அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

    பின்னர் பெற்றோரிடம் மாப்பிள்ளை பார்க்குமாறு கூறியுள்ளார். இதை த்தொடர்ந்து பெற்றோர் அன்பரசிக்கு திருச்சியில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தனர்.

    மேலும் திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்தனர்.

    இந்த சூழ்நிலையில் அன்பரசி மீண்டும் ஈரோடு வாலிபருடன் செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதையடுத்து தாய் தமிழரசி மகளை கண்டித்தார்.

    இதில் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளான அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி க்கொல்லி மருந்தை எடுத்து குடித்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பல அளிக்காமல் அன்பரசி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தமிழரசி லால்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணம் நிச்சயக்கப்பட்ட பிசியோதெரபி பெண் டாக்டர் தற்கொலை செய்த சம்பவம் மாப்பிள்ளை வீட்டாருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் டாக்டரை கற்பழிக்க முயன்றவர் தப்பி ஓடிய போது மாடியில் இருந்து தவறி விழுந்து பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மும்பை:

    மும்பையில் மலாடு என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில் முதல் மாடியில் செரியன் எலன் (வயது 60) என்பவர் வசித்து வருகிறார்.

    அதே குடியிருப்பில் 2-வது மாடியில் பெண் டாக்டர் ஒருவர் வசித்து வருகிறார். அந்த டாக்டர் பணிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார்.

    அப்போது செரியன் எலன் நைசாக பெண் டாக்டரை பின்தொடர்ந்து வந்தார். டாக்டர் தனது வீட்டு கதவை திறந்து உள்ளே சென்ற போது, திடீரென செரியன் எலனும் அந்த வீட்டுக்குள் நுழைந்தார்.

    பின்னர் கதவை பூட்டி விட்டு டாக்டரை கற்பழிக்க முயன்றார். இதனால் அவர் கூச்சலிட்டார். ஆத்திரம் அடைந்த செரியன் எலன் அருகில் கிடந்த சுத்தியலை எடுத்து டாக்டரின் தலையில் அடித்தார். இதில், ரத்தம் கொட்டியது. அவர் அலறினார்.

    இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே செரியன் எலன் வீட்டில் இருந்து தப்பி ஓடினார்.

    அருகில் இருந்த மாலுக்குள் நுழைந்த அவர் மாடியில் ஏறி சென்றார். அவரை மற்றவர்கள் விரட்டி சென்றனர். அப்போது மாடியில் இருந்து அவர் தவறி விழுந்து அந்த இடத்திலேயே உயிர் இழந்தார். இது சம்பந்தமாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காயம் அடைந்த டாக்டர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். #tamilnews
    ×